தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024

இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடக்கிறது.[1] தேர்தல் முடிவுகள் ஜுன் 4 அன்று வெளியிடப்படும்.[2]

தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024

← 201919 ஏப்ரல் 20242029 →

மக்களவைக்கான 39 இடங்கள்
வாக்களித்தோர்69.72%(2.72%)
 
தலைவர்மு. க. ஸ்டாலின்எடப்பாடி க. பழனிசாமி
கட்சிதிமுகஅஇஅதிமுக
கூட்டணிஇந்தியா கூட்டணிஅஇஅதிமுக கூட்டணி
முந்தைய
தேர்தல்
53.15%
38 இடங்கள்
30.56%
1 இடம்

 
தலைவர்கு. அண்ணாமலைசீமான்
கட்சிபா.ஜ.கநாம் தமிழர் கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணிதனித்துப் போட்டி
முந்தைய
தேர்தல்
(பாஜக, அப்போது அஇஅதிமுக கூட்டணியில் இருந்தது)3.89%
0 இடம்

பின்புலம்

18 ஜூலை 2023 அன்று உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது. 25 செப்டம்பர் 2023 அன்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக அதிகாரப்பூர்வமாக விலகியது. அதிமுக புதிய கூட்டணியை உருவாக்கி வழிநடத்தும் என அறிவிக்கப்பட்டது.[3][4][5]

தேர்தல் அட்டவணை

தேதிநிகழ்வு
20 மார்ச் 2024மனுத்தாக்கல் ஆரம்பம்
27 மார்ச் 2024மனுத்தாக்கல் முடிவு
28 மார்ச் 2024வேட்புமனு ஆய்வு ஆரம்பம்
30 மார்ச் 2024வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
19 ஏப்ரல் 2024வாக்குப்பதிவு
04 ஜூன் 2024வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு

கட்சிகளும் கூட்டணிகளும்

      இந்தியா கூட்டணி

திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது.[6] இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் இந்த நாடாளுமன்றத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில்‌ போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. இக்கட்சி ஏணி சின்னத்தில் போட்டியிடும். இராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ்கனி போட்டியிடுவார் என்று இந்தியன் ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். [7] [8] இந்தியப் பொதுவுடமைக் கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இரண்டுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என அக்கட்சி பொதுச்செயலாளர்கள் தெரிவித்தனர்.[9] தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு இறுதியாகியது. அதன்படி, தி. மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.[10] [11] திமுக - மதிமுக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு முதல்வர் தாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்களவை தேர்தலில் போட்டியிட மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது என்றும் தொகுதி பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். தனிச்சின்னத்தில் தான் மதிமுக போட்டியிடும் என்றும் கூறினார். [12] திமுக கூட்டணியில் காங்கிரசு தமிழகத்தில் ஒன்பது மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் என மொத்தம் 10 (பத்து) தொகுதிகளில் போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டது.[13]இந்திய பொதுவுடைமை கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், நாகை, திருப்பூர் தொகுதிகளில் அந்தக் கட்சி போட்டியிட இருப்பதாக அறிவித்தது. இதேபோல் இந்தியப் பொதுவுடைமை (மார்க்சியம்) கட்சிக்கும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளை திமுக ஒதுக்கியது.[14] [15] திமுக அணியில் காங்கிரசு கட்சிக்கு திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கரூர், விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளை திமுக ஒதுக்கியது.[16] காங்கிரசு கடந்த தேர்தலில் திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது அந்த கட்சிக்கு ஆரணி, திருச்சி, தேனி ஆகிய தொகுதிகளுக்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, நெல்லையை திமுக ஒதுக்கியது. [17] திமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[18] திமுக கூட்டணியில் இந்திய பொதுவுடமைக் கட்சி சார்பில் திருப்பூர் தொகுதியில் கே.சுப்பராயனும் நாகப்பட்டினம் தொகுதியில் வை.செல்வராசும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.[19]

கட்சிசின்னம்தலைவர்தொகுதி பங்கீடு
திராவிட முன்னேற்றக் கழகம்திமுக மு. க. ஸ்டாலின்21
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகொமதேகஈ. ஆர். ஈஸ்வரன்1
இந்திய தேசிய காங்கிரசுஇதேகா கு. செல்வப்பெருந்தகை9
இந்தியப் பொதுவுடைமைக் கட்சிசிபிஐ இரா. முத்தரசன்2
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)சிபிஎம் கே. பாலகிருஷ்ணன்2
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிவிசிக தொல். திருமாவளவன்2
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்மதிமுக வைகோ1
இந்திய யூனியன் முசுலீம் லீக்இயூமுலீ கே. எம். காதர் மொகிதீன்1

      அதிமுக கூட்டணி

22 ஜனவரி 2024 அன்று, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அதிமுக அமைத்தது.[20][21] அதிமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவை திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் என அறிவிக்கப்பட்டது.[22]

கட்சிசின்னம்தலைவர்தொகுதி பங்கீடு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அஇஅதிமுக எடப்பாடி க. பழனிசாமி32
இந்திய சமூக ஜனநாயகக் கட்சிஎஸ்.டி.பி.ஐமுகம்மது முபாரக்1
புதிய தமிழகம்பு.தக. கிருஷ்ணசாமி1
தேசிய முற்போக்கு திராவிட கழகம்தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்5

      தேசிய ஜனநாயகக் கூட்டணி

கட்சிசின்னம்தலைவர்தொகுதி பங்கீடு
பாரதிய ஜனதா கட்சிபாஜக கு. அண்ணாமலை19
இந்திய ஜனநாயகக் கட்சிஇஜகபச்சமுத்து1
புதிய நீதிக் கட்சிபுநீகஏ. சி. சண்முகம்1
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்தமமுகஜான் பாண்டியன்1
இந்திய மக்கள் கல்வி முன்னனேற்றக் கழகம்இமகமுகதேவநாதன் யாதவ்1
பாட்டாளி மக்கள் கட்சிபாமக அன்புமணி ராமதாஸ்10
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்அமமுக டி. டி. வி. தினகரன்2
தமிழ் மாநில காங்கிரசுதமாகா ஜி. கே. வாசன்3
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுஅதொஉமீகு ஓ. பன்னீர்செல்வம்1

பாஜக கூட்டணியில் ஐ.ஜே.கே கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே போட்டியிட இருப்பதாக பாரிவேந்தர் பேட்டியளித்தார்.[23] மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக பாஜக - பாமக இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது[24]

தனித்து தேர்தல் களத்தில் நிற்கும் கட்சி

  • நாம் தமிழர் கன்னியாகுமரி, தென் சென்னை, திருநெல்வேலிக்கு வேட்பாளர்களை அறிவித்தது.[25] [26] [27][28]

நாம் தமிழர் 2019 முதல் பயன்படுத்தி வரும் விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் பாரதிய பிரஜா ஆகியதா என்ற கர்நாடகா கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.[29][30] [31] இதனால் விவசாயி சின்னத்தை இக்கட்சி இழந்துள்ளது. முதன் முதல் இரட்டை மெழுகுவர்த்தியில் போட்டியிட்டது, உள்ளாட்சி தேர்தல் உட்பட கடைசி ஆறு தேர்தல்களில் விவசாய சின்னத்தில் போட்டியிட்டது.

கட்சிசின்னம்தலைவர்
நாம் தமிழர் கட்சிநாதக சீமான்

கூட்டணிகள் / கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

இந்தியா கூட்டணி

கட்சிதொகுதிப் பங்கீடுபோட்டியிடும் தொகுதி(கள்)
திமுக21வட சென்னை
தென் சென்னை
மத்திய சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம்
அரக்கோணம்
வேலூர்
தருமபுரி
திருவண்ணாமலை
ஆரணி
கள்ளக்குறிச்சி
சேலம்
ஈரோடு
நீலகிரி
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பெரம்பலூர்
தஞ்சாவூர்
தேனி
தூத்துக்குடி
தென்காசி
இந்திய தேசிய காங்கிரசு9திருவள்ளூர்
கிருஷ்ணகிரி
கரூர்
கடலூர்
மயிலாடுதுறை
சிவகங்கை
விருதுநகர்
திருநெல்வேலி
கன்னியாகுமரி
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)2திண்டுக்கல்
மதுரை
இந்திய பொதுவுடமைக் கட்சி2நாகப்பட்டினம்
திருப்பூர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி2சிதம்பரம்
விழுப்புரம்
மதிமுக1திருச்சிராப்பள்ளி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி1நாமக்கல்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்1ராமநாதபுரம்

அதிமுக கூட்டணி

கட்சிதொகுதிப் பங்கீடுபோட்டியிடும் தொகுதி(கள்)
அதிமுக32வட சென்னை
தென் சென்னை
காஞ்சிபுரம்
அரக்கோணம்
கிருஷ்ணகிரி
ஆரணி
விழுப்புரம்
சேலம்
நாமக்கல்
ஈரோடு
கரூர்
சிதம்பரம்
நாகை
மதுரை
தேனி
ராமநாதபுரம்
தேமுதிக5திருவள்ளூர்
மத்திய சென்னை
கடலூர்
தஞ்சாவூர்
விருதுநகர்
புதிய தமிழகம்1தென்காசி
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி1திண்டுக்கல்

தேசிய ஜனநாயகக் கூட்டணி

கட்சிதொகுதிப் பங்கீடுபோட்டியிடும் தொகுதி(கள்)
பாஜக19திருவள்ளூர்
வட சென்னை
தென் சென்னை
மத்திய சென்னை
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை
நாமக்கல்
நீலகிரி
திருப்பூர்
நாகப்பட்டினம்
பொள்ளாச்சி
கோயம்புத்தூர்
கரூர்
தஞ்சாவூர்
சிதம்பரம்
மதுரை
விருதுநகர்
திருநெல்வேலி
கன்னியாகுமரி
பாமக10திண்டுக்கல்
அரக்கோணம்
ஆரணி
கடலூர்
மயிலாடுதுறை
கள்ளக்குறிச்சி
தருமபுரி
சேலம்
விழுப்புரம்
காஞ்சிபுரம்
அமமுக2திருச்சிராப்பள்ளி
தேனி
தமிழ் மாநில காங்கிரசு3திருப்பெரும்புதூர்
ஈரோடு
தூத்துக்குடி
இந்திய ஜனநாயக கட்சி1பெரம்பலூர்
புதிய நீதிக் கட்சி1வேலூர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்1தென்காசி
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு1இராமநாதபுரம்
இந்திய மக்கள் கல்வி முன்னனேற்றக் கழகம்1சிவகங்கை

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

நிலைகள்ஆண்கள்பெண்கள்மற்றவர்கள்மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தவர்கள்1,50323801,741
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்0783
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்0
களத்தில் இருந்த வேட்பாளர்கள்0

வேட்பாளர் பட்டியல்

தொகுதியின் பெயர்வேட்பாளர்
அதிமுக கூட்டணிதிமுக கூட்டணிபாஜக கூட்டணிநாம் தமிழர் கட்சி
திருவள்ளூர்
(தனி)
கே. நல்லதம்பிதேமுதிகசசிகாந்த் செந்தில் இதேகாபாலகணபதிபாஜகஜெகதீஷ் சந்தர்
வட சென்னைராயபுரம் இரா. மனோகர்அதிமுககலாநிதி வீராசாமிதிமுகபால் கனகராஜ்பாஜகஅமுதினி
தென் சென்னைஜெ. ஜெயவர்த்தன்அதிமுகதமிழச்சி தங்கப்பாண்டியன்திமுகதமிழிசை சௌந்தரராஜன்பாஜகதமிழ் செல்வி
மத்திய சென்னைபி. பார்த்தசாரதிதேமுதிகதயாநிதி மாறன்திமுகவினோச் பி செல்வம்பாஜககார்த்திகேயன்
ஸ்ரீபெரும்புதூர்பிரேம் குமார்அதிமுகத. ரா. பாலுதிமுகவி.என்.வேணுகோபால்தமாகாகளஞ்சியம் சிவகுமார்
காஞ்சிபுரம்
(தனி)
பெரும்பாக்கம் ராசசேகர்அதிமுகக. செல்வம்திமுகஜோதி வெங்கடேசன்பாமகசந்தோஷ்குமார்
அரக்கோணம்ஏ. எல். விசயன்அதிமுகஎஸ். ஜெகத்ரட்சகன்திமுககே. பாலுபாமகஅஃப்சியா நஸ்ரின்
வேலூர்பசுபதிஅதிமுககதிர் ஆனந்த்திமுகஏ. சி. சண்முகம்புதிய நீதிக் கட்சிமகேஸ் ஆனந்த்
கிருஷ்ணகிரிவி. செயப்பிரகாசுஅதிமுககொ. கோபிநாத் இதேகாநரசிம்மன்பாஜகவித்யா வீரப்பன்
தருமபுரிஅசோகன்அதிமுகஆ. மணிதிமுகசௌமியா அன்புமணிபாமகடாக்டர் அபிநயா பொன்னிவளவன்
திருவண்ணாமலைகலியபெருமாள்அதிமுகசி. என். அண்ணாத்துரைதிமுகஅசுவத்தாமன்பாஜகரமேஷ்பாபு
ஆரணிசி. வி. கசேந்திரன்அதிமுகதரணிவேந்தன்திமுகமுனைவர். அ. கணேசு குமார்பாமகபிரகலாதா
விழுப்புரம்
(தனி)
செ. பாக்யராசுஅதிமுகது. இரவிக்குமார்விசிகமுரளி சங்கர்பாமகபேச்சிமுத்து
கள்ளக்குறிச்சிஇரா. குமரகுருஅதிமுகமலையரசன்திமுகஇரா. தேவதாசு உடையார்பாமகஜெகதீசன்
சேலம்ப. விக்னேசுஅதிமுகடி. எம். செல்வகணபதிதிமுகஅண்ணாத்துரைபாமகமனோஜ்குமார்
நாமக்கல்எசு. தமிழ்மணிஅதிமுகமாதேசுவரன்கொமதேககே. பி. இராமலிங்கம்பாஜககனிமொழி
ஈரோடுஆற்றல் அசோக்குமார்அதிமுககே. இ. பிரகாசுதிமுகபி.விஜயகுமார்தமாகாகார்மேகம்
திருப்பூர்அருணாசலம்அதிமுககே. சுப்பராயன்சிபிஐமுருகானந்தம்பாஜகசீதா லட்சுமி
நீலகிரி
(தனி)
லோகேசு தமிழ்செல்வன்அதிமுகஆ. ராசாதிமுகஎல். முருகன்பாஜகஜெயக்குமார்
கோயம்புத்தூர்சிங்கை இராமச்சந்திரன்அதிமுககணபதி ராஜ்குமார்திமுகஅண்ணாமலைபாஜககலாமணி
பொள்ளாச்சிஅப்புசாமி என்ற கார்த்திகேயன்அதிமுககே. ஈசுவரசாமிதிமுகவசந்தராசன்பாஜகசுரேஷ் குமார்
திண்டுக்கல்முகம்மது முபாரக்எஸ்டிபிஐசச்சிதானந்தம்சிபிஎம்ம. திலகபாமாபாமகநிரஞ்சனா
கரூர்எல். தங்கவேல்அதிமுகஜோதிமணி இதேகாசெந்தில்நாதன்பாஜககருப்பையா
திருச்சிராப்பள்ளிகருப்பையாஅதிமுகதுரை வைகோமதிமுகபி.செந்தில்நாதன்அமமுகடி ராஜேஷ்
பெரம்பலூர்சந்திரமோகன்அதிமுகஅருண் நேருதிமுகபச்சமுத்துஇஜகஆர் தேன்மொழி
கடலூர்பி. சிவக்கொழுந்துதேமுதிகஎம். கே. விஷ்ணு பிரசாத் இதேகாதங்கர் பச்சான்பாமகமணிவாசகன்
சிதம்பரம்
(தனி)
மா. சந்திரகாசன்அதிமுகதொல். திருமாவளவன்விசிககார்த்தியாயினிபாஜகஜான்சி ராணி
மயிலாடுதுறைபாபுஅதிமுகஆர். சுதா இதேகாம. க. தாலின்பாமகபி. காளியம்மாள்
நாகப்பட்டினம்
(தனி)
சி. சுர்சித் சங்கர்அதிமுகவை. செல்வராசுசிபிஐஎசு. சி. எம். ரமேசுபாஜகஎம் கார்த்திகா
தஞ்சாவூர்பி.சிவநேசன்தேமுதிகச. முரசொலிதிமுகஎம். முருகானந்தம்பாஜகஹுமாயூன் கபீர்
சிவகங்கைசேவியர் தாசுஅதிமுககார்த்தி சிதம்பரம் இதேகாதேவநாதன் யாதவ்இந்திய மக்கள் கல்வி முன்னனேற்றக் கழகம்எழிலரசி
மதுரைபா. சரவணன்அதிமுகசு. வெங்கடேசன்சிபிஎம்இராம சீனிவாசன்பாஜகசத்யாதேவி
தேனிவி. டி. நாராயணசாமிஅதிமுகதங்க தமிழ்ச்செல்வன்திமுகடி. டி. வி. தினகரன்அமமுகமதன் ஜெயபால்
விருதுநகர்வி. விஜய பிரபாகரன்தேமுதிகமாணிக்கம் தாகூர் இதேகாராதிகா சரத்குமார்பாஜகஅருள்மொழித்தேவன்
இராமநாதபுரம்பா. செயபெருமாள்அதிமுகநவாஸ் கனிஇயூமுலீஓ. பன்னீர்செல்வம்அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுசந்திரபிரபா
தூத்துக்குடிசிவசாமி வேலுமணிஅதிமுககனிமொழிதிமுகஎஸ்.டி.ஆர்.விஜயசீலன்தமாகாரோவினா ரூத் ஜென்
தென்காசி
(தனி)
க. கிருஷ்ணசாமிபுதகராணி சிறீ குமார்திமுகஜான் பாண்டியன்தமமுகஇசை மதிவாணன்
திருநெல்வேலிஎம். ஜான்சிராணிஅதிமுகராபர்ட் புரூஸ் இதேகாநயினார் நாகேந்திரன்பாஜகசத்யா
கன்னியாகுமரிபசிலியான் நசரேத்அதிமுகவிஜய் வசந்த் இதேகாபொன். இராதாகிருட்டிணன்பாஜகமரியா ஜெனிபர்


வாக்குப்பதிவு

ஏப்ரல் 19 அன்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் உத்தேசமாக 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். ஏப்ரல் 20 அன்று, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.[32] [33]

மூன்றாவது முறையாக இன்று (ஏப்ரல் 21) பிற்பகல் 12.44 மணியளவில் வெளியிடப்பட்ட இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..[34][35]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை