வினோஜ் பி. செல்வம்

இந்திய அரசியல்வாதி

வினோஜ் பி. செல்வம் (Vinoj P. Selvam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார். இவர் தற்பொழுது தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணித் தலைவராக உள்ளார்.[1]

வினோஜ் பி. செல்வம்
2020 இல் வினோஜ் பி. செல்வம்
தமிழக மாநில பாஜக இளைஞரணித் தலைவர்
பதவியில்
சூன் 2016 – தற்பொழுது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1986
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி, தொழிலதிபர்

வாழ்க்கை

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் ஊரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகனாக 07 சூலை 1986 ஆம் நாள் பிறந்தார்.[சான்று தேவை] இவரது தந்தை தமிழ்நாடு வாணியர் பேரவையின் தலைவராக உள்ளார்.[சான்று தேவை] இவர் தனது பள்ளி படிப்பை சென்னையில் உள்ள டி. ஏ. வி மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.[சான்று தேவை] அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்ட படிப்பை படித்தார். இவர் சென்னை செக்கர்ஸ் நட்சத்திர ஹோட்டல் மற்றும் ரோகிணி ஹோட்டல் நிர்வாக இயக்குனராக உள்ளார்.[2]

அரசியல் வாழ்க்கை

இவர் 2007 ஆம் ஆண்டு தனது 21வது வயதில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். 2007 இல் தமிழக பாஜக தென் சென்னை மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார், பின்பு சனவரி 2010 முதல் சூலை 2012 வரை தமிழக பாஜக இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினராகவும், சூலை 2012 முதல் சூலை 2015 வரை தமிழக மாநில இளைஞரணி செயலாளராகவும், சூலை 2015 முதல் சூன் 2016 வரை இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளராகவும், சூன் 2016 முதல் தற்பொழுது வரை மாநில இளைஞரணித் தலைவராகவும் இருந்து வருகின்றார்.[3][4][5]

தேர்தல்கள்

2011 உள்ளாட்சி தேர்தல்

2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் பொது வார்டு 110 இல் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்டார், 13289 (48.57%) மொத்த பதிவான வாக்குகளில் 933 (7.02%) வாக்குகளை பெற்று வைப்புத் தொகை இழப்பை பெற்றார்.[6]

2021 சட்டமன்றத் தேர்தல்

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 : துறைமுகம்[7][8]
கட்சிவேட்பாளர்வாக்குகள்%±%
திமுகபி. கே. சேகர் பாபு 59,317 58.88% +18.52
பா.ஜ.கவினோஜ் பி. செல்வம்32,04331.81%+18.99
மநீமஎம். ஏ. கிச்சா ரமேஷ்3,7633.74%புதியது
நாம் தமிழர் கட்சிசே. ப. முகம்மது கதாபி3,3573.33%+2.47
நோட்டாநோட்டா9130.91%-1.11
அமமுகபி. சந்தான கிருஷ்ணன்7750.77%புதியது
வெற்றி விளிம்பு27,27427.07%22.44%
பதிவான வாக்குகள்100,73757.31%1.92%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள்370.04%
பதிவு செய்த வாக்காளர்கள்175,770
திமுக கைப்பற்றியதுமாற்றம்18.52%

2024 மக்களவைத் தேர்தல்

வரவிருக்கும் 2024 இந்திய பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளராக மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.[9]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வினோஜ்_பி._செல்வம்&oldid=3944161" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை