விக்ரம்

இந்திய நடிகர்

விக்ரம் (17 ஏப்ரல் 1966) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது (1999), விண்ணுக்கும் மண்ணுக்கும் (2001), சாமி (2003), பிதாமகன் (2003), (2015) போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.

விக்ரம்
விக்ரம் 2003
பிறப்புகென்னடி ஜான் விக்டர்
17 ஏப்ரல் 1966 (1966-04-17) (அகவை 58)[1][2]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
பணி
  • நடிகர்
  • திரைப்பட தயாரிப்பாளர்
  • பின்னணி பாடகர்
  • குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1988–தற்போது வரை
பெற்றோர்வினோத் ராஜ் (தந்தை)
வாழ்க்கைத்
துணை
சைலஜா பாலகிருஷ்ணன் (தி. 1992)
பிள்ளைகள்இளவரசி
அக்ஷிதா விக்ரம்
உறவினர்கள்தியாகராஜன் (தாய்வழி மாமா)
பிரசாந்த் (உறவினர்)
விருதுகள்சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது (2003)
சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (1999, 2003, 2010)
கலைமாமணி விருது (2004)

இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர்.[3]

விக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.[4]

இளமைக் காலம்

விக்ரம், ஜான் விக்டருக்கும் ராஜேஸ்வரிக்கும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில், 17ம் ஏப்ரல் 1966 அன்று நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார். இவரது இயற்பெயர் கென்னெடி ஆகும். இவரது தந்தை வினோத் ராஜ் என்றழைக்கப்படும் ஆவார். அவர் தந்தை ஒரு முன்னாள் இந்திய ராணுவ வீரர். தற்போது திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது தாய் இராஜேசுவரி துணை ஆட்சியராய்ப் பணியாற்றியவர்.[5][6] விக்ரமுக்கு அனிதா என்கிற தங்கையும் அர்விந்த் என்கிற தம்பியும் உள்ளனர்.[7]

விக்ரம் ஏற்காட்டிலுள்ள மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பள்ளிப் பருவத்திலேயே கராத்தே கலையோடு நீச்சல் விளையாட்டையும் கற்றுத் தேர்ந்தார். திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் இவரது தந்தையாரின் கட்டாயத்தால் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை இலயோலாக் கல்லூரியில் படித்து முடித்தார்.[8] இவர் கல்லூரியில் படிக்கும்போது பெரு வாகனம் மோதியதால் மிகுந்த காயமடைந்ந்தார். மூன்று வருடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார்.[8][9][10]

இவர் 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு துருவ் விக்ரம் என்ற ஒரு மகனும் அக்ஷிதா விக்ரம் என்ற ஒரு மகளும் உண்டு. இவரின் மகன் துருவ் விக்ரம் தற்பொழுது திரைப்படங்க்ளில் நடித்து வருகின்றார்.

திரைப்பட வாழ்க்கை

விக்ரம் திரைப்படத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பு 1988 ஆம் கைலாசம் பாலசந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார் அதை தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார்.

இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற படங்களில் நடித்தார். இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். பின்னர் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் அந்நியன் என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது.[11] அதன் பின் மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகு ராவணன் என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011 ஆம் ஆண்டு வெளி வந்த தெய்வத் திருமகள் என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக இவரது நடிப்புத் திரை விமர்சகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது.

கலைப் பணி

விக்ரம் தான் திரைப்படத் துறையில் வருவதற்கு முன் சோழா தேநீர், டி வி எஸ் மற்றும் ஆள்வின் போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார். தனது முதுகலை வணிக மேலாண்மை படிப்பின் இறுதி ஆண்டில் தமிழ் திரைப்பட முன்னணி இயக்கனரான ஸ்ரீதர் அவர்களால் அணுகப்பட்டு அதன் பின் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. விக்ரம் தனது முதல் படமான "என் காதல் கண்மணியை" 1990 ஆம் ஆண்டு நடித்தார். இது ஒரு குறைந்த பட்ஜெட் படமாக அமைந்தது. அதன் பின் ஸ்ரீதர் அவர்களின் "தந்துவிட்டேன் என்னை" எனும் படத்தில் நடித்தார். ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் இயக்கிய பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கல்லூரிக் காதல் படமான மீரா இவரின் மூன்றாவது படமாகும்.

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்பாத்திரம்மொழிகுறிப்புகள்
1990என் காதல் கண்மணிவினோத்தமிழ்
1991தந்துவிட்டேன் என்னைராஜு
1992காவல் கீதம்அசோக்
மீராஜீவா
1993துருவம்பத்ரன்மலையாளம்
சிருநவ்வுலா வரமிஸ்தாவாதெலுங்கு
மாஃபியாஹரி ஷங்கர்தமிழ்
1994சைன்யம்கேடட் ஜீஜி
பங்காரு குடும்பம்தெலுங்கு
புதிய மன்னர்கள்சத்யமூர்த்திதமிழ்
1995ஸ்ட்ரீட்மலையாளம்
அடல்லா மாஜகாதெலுங்கு
1996மயூர ந்ரிடம்மலையாளம்
ஊஹாமோகன்தமிழ்
அக்கா பாகுன்னாவா
மெருபு
இந்திரப்ரஸ்தம்பீட்டர்மலையாளம்
ராசபுத்திரன்மனு
1997இது ஒரு சிநேஹகதாராய்
உல்லாசம்தேவ்தமிழ்
1998கண்களின் வார்த்தைகள்தமிழ்
1999ஹவுஸ் புள்ஹமீது
சேதுசியான் (எ) சேதுவென்றவர்: தென்னிந்திய பிலிம்பேர் சிறப்பு விருது
2000ரெட் இந்தியன்ஸ்மலையாளம்
2001இந்த்ரியம்
9 நேலாலுவீரேந்திராதெலுங்கு
யூத்
விண்ணுக்கும் மண்ணுக்கும்விக்ரம்தமிழ்
தில்கனகவேல்
காசிகாசிவென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
2002ஜெமினிஜெமினி
சாமுராய்தியாகராஜன்
கிங்ராஜா சண்முகம்
2003தூள்ஆறுமுகம்
காதல் சடுகுடுசுரேஷ்
சாமிஆறுசாமிபரிந்துரை, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
பிதாமகன்சித்தன்வென்றவர்: சிறந்த நடிகருக்கான தேசிய சினிமா விருது
வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
வென்றவர்: சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது
2004அருள்அருள்குமரன்
2005அந்நியன்இராமானுசம்
அந்நியன்
ரெமோ
வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
மஜாஅறிவுமதி
2008பீமாசேகர்பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2009கந்தசாமிகந்தசாமிபரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2010ராவணன்வீரையாதெலுங்கு மொழியாக்கப்பட்டு வெளிவந்தது;வென்றவர்: சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
ராவன்தேவ் பிரதாப் சர்மாஇந்தி
2011தெய்வத்திருமகள்கிருஷ்ணன்தமிழ்வென்றவர்: சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2011ராஜபாட்டை'அனல்' முருகன்
2012தாண்டவம்சிவாபரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2013டேவிட்டேவிட்இந்திதெலுங்கு மற்றும் தமிழ் மொழியாக்கப்பட்டு வெளிவந்தது
2015லீ (எ) லிங்கேசன்தமிழ்தெலுங்கு மற்றும் இந்தி மொழியாக்கப்பட்டு வெளிவந்தது; விக்ரமின் ஐம்பாதாவது திரைப்படம்
10 எண்றதுக்குள்ள
2016இருமுகன்அகிலன் வினோத் மற்றும் லவ் (இரட்டைப் பங்கு)
2018ஸ்கெட்ச்ஜீவா (ஸ்கெட்ச்)
சாமி 2ஆறுச்சாமி மற்றும் ராமசாமி
2019கடாரம் கொண்டான்கே. கே.தெலுங்கு மொழியில் மிஸ்டர் கே. கே. எனும் பெயரில் வெளிவந்தது
2019ஆதித்ய வர்மாடேராடூனில் பார்வையாளர்"தொலைவு" பாடலில் கேமியோ தோற்றம்[12]
2022மகான்காந்தி மகான்அமேசான் பிரைம் வீடியோ படம்[13]
2022கோப்ரா மதியழகன்நிறைவு[14]
2022பொன்னியின் செல்வன்: 1 ஆதித்த கரிகாலன்தயாரிப்பிற்குப்பின்[15]
துருவ நட்சத்திரம் ஜான்தாமதமாக[16]
சியான் 61 | style="background: #DDF; color: black; vertical-align: middle; text-align: center; " class="no table-no2"|அறிவிக்கப்படும்முன் தயாரிப்பு[16]

பின்னணிக் குரல் கொடுத்தவை

திரைப்படம்ஆண்டுகுரல் கொடுக்கப்பட்டவர்குறிப்பு
அமராவதி1993அஜித் குமார்[17]
புதிய முகம்1993வினீத்
பாச மலர்கள்1994அஜித் குமார்
காதலன்1994பிரபுதேவா[18]
குருதிப்புனல்1995ஜான் இடத்தட்டில்
காதல் தேசம்1996அப்பாஸ்[19]
கருப்பு ரோஜா1996அமர் சித்திக்
மின்சார கனவு1997பிரபுதேவா[20]
வி.ஐ.பி1997அப்பாஸ்[19]
சத்யா1998ஜே. டி. சக்ரவர்த்தி[21]
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்2000அப்பாஸ்[22]

பாடிய பாடல்கள்

தலைப்புஆண்டுபாடல்கள்இசையமைப்பாளர்உடன் பாடியவர்குறிப்பு
ஸ்ரீ2002"யாமிருக்க பயமேன்"டி எஸ் முரளிதரன்சங்கர் மகாதேவன், திப்பு[23]
[24]
ஜெமினி2002"ஓ போடு"பரத்வாஜ்அனுராதா ஸ்ரீராம்[25]
கந்தசாமி
மள்ளானா (தெலுங்கு)
2009"எக்ஸ்க்யூஸ் மி"
"இதெல்லாம் டூப்பு"
"மேம்போ மாமியா"
" மியாவ் மியாவ்"
தேவி ஸ்ரீ பிரசாத்சுசித்ரா
தேவி ஸ்ரீ பிரசாத்
ரீட்டா
பிரியா ஹிமேஸ்
[26]
[27]
மதராசபட்டினம்2010"மேகமே ஒ மேகமே"ஜி. வி. பிரகாஷ் குமார்ம. சு. விசுவநாதன், நாசர்[28]
தெய்வத்திருமகள்
நானா (தெலுங்கு)
2011"கதை சொல்ல போரேன்",
"ப ப பாப்பா"
ஜி வி பிரகாஷ் குமார்சிரிங்கா,
தனிப்பாடல்
[29]
ராஜபாட்டை
வீடிந்தே (தெலுங்கு)
2011"லட்டு லட்டு"யுவன் சங்கர் ராஜாசுசித்ரா, பிரியதர்சினி[30]
டேவிட்2013"மரிய பிதாசே"ரெமோ பெர்னாண்டஸ்ரெமோ பெர்னாண்டஸ்[31]
கடாரம் கொண்டான்2019"தீசுடர் குனியுமா"ஜிப்ரான்

தொலைக்காட்சித் தொடர்கள்

பெயர்ஆண்டுஇயக்குனர்குறிப்பு
கலாட்டா குடும்பம்1988தெரியவில்லைஆறு பாக தொலைக்காட்சித் தொடர்
விஸ்வநாத்தெரியவில்லைதெரியவில்லைதொலைக்காட்சித் தொடர்
சிறகுகள்2000மனோபாலாதொலைக்காட்சிப்படம்

இசை ஒளிக்காட்சிகளித் தோற்றங்கள்

தலைப்புஆண்டுதொகுத்தவர்இயக்குநர்பாத்திரம்பாடல் தொகுப்புகுறிப்பு
"ஏக் சுர்"2010லூயிஸ் பாங்க்ஸ்கைலாஷ் சுரேந்திரநாத்தானாகவேதனிப் பாடல்[32]
[33]
"ஒன் - தி யூனிடி சாங்"2012ஜார்ஜ் பீட்டர்சுமேஷ் லால்தானாகவேதனிப் பாடல்[34]
"வணக்கம் சென்னை"2012கிரீஷ் கோபாலகிருஷ்ணன்பாண்டிராஜ்தானாகவேமெரினா[35]
[36]

வர்த்தக தோற்றங்கள்

அமைப்புஆண்டுஇயக்குநர்பாத்திரம்குறிப்பு
கொக்கக் கோலா2006-07தெரியவில்லைதானாகவே
ப்ரூக் பான்ட்2010-11தெரியவில்லைதானாகவே[37]
[38]
மணப்புறம் நிதி நிறுவனம்2010-11தெரியவில்லைதானாகவே[39]
[40]
ஜோஸ்கோ ஜூவல்லர்ஸ்2011-12ரத்திஸ் அம்பத்தானாகவே[41]
[42]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=விக்ரம்&oldid=3907289" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை