அந்தோனியா பெரின் மொரீராசு

அந்தோனியா பெரின் மொரீராசு (Antonia Ferrín Moreiras) (அவுரென்சு, 13 மே 1914 – சாந்தியாகோ தெ கம்போசுதெலா, 6 ஆகத்து 2009) ஒரு கனிதவியலாளரும் பேராசிரியரும் முதல் கலீசிய பெண் வானியலாலரும் ஆவார். இவரது முதன்மையான வானியல் பங்களிப்புகளாக நிலாவால் பால்வெளி மறைப்புகள், இரட்டை விண்மீன்களின் அளவீடுகள், வானளக்கையியல் அளவீடுகள், இரு நிலைக்குத்துகள் ஊடாக விண்மீன்கள் கட்த்தலைத் தீர்மானித்தல் ஆகியவை அமைகின்றன. இவை அனைத்திலும் இவர் சந்தியாகோ தெ கம்போசுடெலா பல்கலைக்கழகத்தின் வான்காணகத்தில் பணிபுரிந்தபோது ஆய்விகள் மேற்கொண்டார். .[1]இவர் எசுப்பானிய உள்நாட்டுப் பொருக்கு முன்பு, சந்தியாகோ தெ கம்போசுடெலா பல்கலைக்கழகத்தில் வேதியியலிலும் மருந்தியலிலும் இளவல் பட்டத்தையும் கற்பித்தல் பட்டயமும் பெற்றதோடு இரண்டு ஆண்டுகள் கணிதவியலும் படித்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் மாட்ரிடு கம்பிளூட்டன்சு பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளவல் பட்டமும் பெற்றுள்ளார். ,[2]

இவர் 1963 இல் வானியலின் சிக்கலைத் தீர்க்க ஆய்வுரை நல்கிய முதல் பெண்மணியானர்: Observaciones de pasos por dos verticales (ஆங்கிலத்தில், Observations of passages of stars through two verticals (தமிழில், இரு நிலைக்குத்துகள் ஊடாக விண்மீன்களின் கடப்பு)). இந்த ஆய்வுரையும் முதலில் சந்தியாகோ தெ கம்போசுடெலா பல்கலைக்கழகத்தில் கணிதவியல் புலத்தில் மேற்கொள்ளப்பட்டது. ,[3]

பொருளியல் நெருக்கடியால் இவர் ஆய்வும் பணியும் இணைந்தே மேற்கொள்ள நேர்ந்தது. என்றாலும் இவர் தன் கல்வி இலக்கை எட்ட ஆய்வுநல்கைகள் கைக்கொடுத்தன.[2]

வாழ்க்கை

இளமை

உயர்கல்வியும் தொழில்முறை வாழ்க்கையும்

பெரின் 1984 இல் ஓய்வு பெற்றார்.[4]

தகைமைகள்

இவர் 2008 மே 24 இல் சந்தியாகோ தெ கம்போசுடெலா பல்கலைக்கழகத்தின் கணிதவியல்புலப் புரவலராக அறிவிக்கப்பட்டார்.[5]

இவரது பெயர் தாங்கியவை

  • சந்தியாகோ தெ கம்போசுடெலா பல்கலைக்கழகத்தின் கணிதவியல்புல விரிவுரை அறை.
  • விர்கோ பல்கலைக்கழகத்தின் பாலின அக்கறையோடு கல்விப் பாடங்களையும் தகவல் வாயில்களையும் உருவாக்குவதற்கான விருது.[4]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை