அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (Amma Makkal Munnettra Kazagam, அமமுக) என்பது வி. கே. சசிகலா மற்றும் டி. டி. வி. தினகரனால் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும்.[1] நவம்பர் 23, 2017 ஆம் ஆண்டு வி. கே. சசிகலா மற்றும் தினகரனிடம் இருந்து அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் பறித்துக்கொண்டது.[2] இதனால் கட்சி மற்றும் சின்னம் இல்லாமல் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
சுருக்கக்குறி
அமமுக
தலைவர்
நிறுவனர்வி. கே. சசிகலா மற்றும் டி. டி. வி. தினகரன்
தொடக்கம்15 மார்ச்சு 2018 (6 ஆண்டுகள் முன்னர்) (2018-03-15)
பிரிவுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தலைமையகம்அடையாறு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
மாணவர் அமைப்புமாணவர் அணி
இளைஞர் அமைப்புஎம் ஜி ஆர் இளைஞர்அணி இளைஞர்பாறை
பெண்கள் அமைப்புமகளிர் அணி இளம்பெண் பாசறை
விவசாயிகள் அமைப்புஅம்மாபேரவை
கொள்கைநடுநிலை
அரசியல் நிலைப்பாடுநடுநிலை
நிறங்கள்கருப்பு  ,வெள்ளை   மற்றும் சிவப்பு  
தேசியக் கூட்டுநர்டி. டி. வி. தினகரன்
மக்களவை உறுப்பினர்கள் எண்.,0
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,0
தேர்தல் சின்னம்
பிரஷர் குக்கர்
இந்தியா அரசியல்

அமைப்பின் பெயர்

மதுரை, மேலூரில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை மார்ச்சு 15, 2018 அன்று அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் தன் அமைப்பின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று அறிவித்தார்.[3]

கொடி

கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றுள்ளது. இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்கும் வரை இந்த பெயரில் செயல்படுவோம் என்று தினகரன் தெரிவித்தார்.

2019 பாராளுமன்றத் தேர்தல்

2019 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பரிசுப்பெட்டி சின்னத்தைப் பொதுச்சின்னமாக வழங்கியது. இந்தக் கட்சியானது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால் இந்த அணிக்குப் பொதுவான சின்னம் வழங்கியபோதும், அவர்கள் சுயேச்சைகளாகவே கருதப்படுவர் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.[4]

போட்டியிட்ட தேர்தல்கள்

இந்திய பொதுத் தேர்தல்கள்

மக்களவைத் தேர்தல்கள்
வருடம்தேர்தல்பொதுச்செயலாளர்வென்ற தொகுதிகள்போட்டியிட்ட தொகுதிகள்வாக்கு (%)மாற்றம்முடிவுமொத்த வாக்குகள்
2019பொதுத் தேர்தல், 2019டி. டி. வி. தினகரன்0375.46மாற்றங்கள் இல்லைதோல்வி22,25,377

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்
வருடம்தேர்தல்பொதுச்செயலாளர்வென்ற தொகுதிகள்போட்டியிட்ட தொகுதிகள்வாக்கு (%)மாற்றம்முடிவுமொத்த வாக்குகள்
2021சட்டமன்றத் தேர்தல், 2021டி. டி. வி. தினகரன்01712.36மாற்றங்கள் இல்லைதோல்வி1,088,789

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை