அல்லாதகியா ஆளுநரகம்

சிரியாவின் ஆளுநரகம்

லடாகியா ஆளுநரகம் (Latakia Governorate, அரபு மொழி: مُحافظة اللاذقية‎ / ALA-LC : Muḥāfaẓat al-Lādhiqīyah ) என்பது சிரியாவின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது துருக்கியின் எல்லையில் மேற்கு சிரியாவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு குறித்த தகவல்களானது 2,297 கிமீ² என்றும், [1] 2,437 கிமீ² என்றும் [2] வெவ்வேறு வகையில் வேறுபட்ட தகவல்கள் கிடைக்கின்றன. மேலும் ஆளுநரகத்தின் மக்கள் தொகையானது 991,000 (2010 மதிப்பீடு) என்று உள்ளது. இந்த ஆளுநரகத்தில் ஆர்மீனியர்கள், துர்க்மென் மற்றும் சுன்னி குர்துகள் போன்றவர்கள் முறையே கெசாப், ஜபால் துர்க்மேன் மற்றும் ஜபல் அல்-அக்ரட் போன்ற பிராந்தியங்களில் பெரும்பான்மையினராக இருந்தாலும், அலவைட் பிரிவைச் சேர்ந்தவர்களே ஆளுநரகத்தில் பெரும்பான்மையாக உள்ளனர். ஆளுநரகத்தின் தலை நகரான லடாக்கியாவில், 2010 ஆண்டு கணக்கீட்டின்படி, 400,000 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 50% அலவைட்டுகள், 30% சுன்னி, மற்றும் 20% கிறிஸ்தவர்கள் போன்றோர் வாழ்கின்றனர். [3] [4]

நிலவியல்

சிரியாவின் மிகவும் பிரபலமான மலை வாழிடமான ஸ்லின்ஃபா . இந்தப் படத்தில் காணப்படுவது சிரிய கடலோர மலைகள் ஆகும்.

லடாகியா ஆளுநரகத்தின் எல்லைகளாக வடக்கே துருக்கி, தெற்கே டார்ட்டஸ், கிழக்கில் காமா மற்றும் இதுலிபு மற்றும் மேற்கில் நடுநிலக் கடல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆளுநரகத்தின் மேற்கு பகுதி முக்கியமாக கடலோர சமவெளிகளைக் கொண்டிருந்தாலும், கிழக்குப் பகுதிகள் மலைப்பாங்கானவை, சிரிய கடலோர மலைத்தொடர் வடக்கிலிருந்து தெற்கே, கடலோர சமவெளிகளுக்கு இணையாக நீண்டுள்ளது. இதன் மிக உயர்ந்த சிகரம், நபி யூனிஸ் ஆகும். இச்சிகரமானது 1562 மீட்டர் (5,125 அடி) உயரம் கொண்டது. இதன் சராசரி உயரம் சுமார் 1200 மீட்டர் மட்டுமே. ஆளுநரகத்தின் மேற்குப் பகுதிகளில் மத்தியதரைக் கடலில் இருந்து ஈரப்பதம் நிறைந்த காற்று வீசுகிறது. இதனால் ஆளுநரகத்தில் உள்ள கிழக்கு சரிவுகளைக் காட்டிலும் அதிக வளமான பகுதியாகவும் அதிக மக்கள் தொகை கொண்டதாக இந்த சமவெளி உள்ளது.

காப் பள்ளத்தாக்கில் அதன் கிழக்கு விளிம்பில் ஓரொன்டெஸ் ஆறு வடக்கே 64 கிலோமீட்டர்கள் (40 mi) நீளமாக பாய்கிறது, [5] இந்த ஆறு மலைத்தொடரின் வடக்கு விளிம்பைச் சுற்றி சென்று பின்னர் மத்தியதரைக் கடலுக்குள் பாய்கிறது. இந்த பகுதியில் பாயும் மற்றொரு முக்கியமான ஆறு நஹ்ர் அல்-கபீர் அல்-ஷமாலி ஆகும். இது துருக்கிய எல்லையிலிருந்து தென்மேற்கில் ஓடி, மத்தியதரைக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே 16 திஷ்ரீன் அணை, என்பது இப்பகுதியில் மிக முக்கியமான ஒன்றாகும், இந்த ஆற்றிலிருந்து மின் ஆற்றல் உற்பத்தி, மழை மற்றும் நதி நீரை சேமித்தல், மஷ்கிதா ஏரியை உருவாக்கம் ஆகிய நோக்கங்களுக்காக இது கட்டப்பட்டுவருகிறது. [6]

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Latakia (1961–1990, extremes 1928–present)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)24.4
(75.9)
26.3
(79.3)
32.6
(90.7)
35.6
(96.1)
38.8
(101.8)
38.4
(101.1)
36.2
(97.2)
38.4
(101.1)
38.2
(100.8)
39.0
(102.2)
32.6
(90.7)
28.0
(82.4)
39.0
(102.2)
உயர் சராசரி °C (°F)15.4
(59.7)
16.4
(61.5)
18.3
(64.9)
21.5
(70.7)
24.1
(75.4)
25.8
(78.4)
28.8
(83.8)
29.6
(85.3)
29.0
(84.2)
26.3
(79.3)
21.9
(71.4)
17.6
(63.7)
22.9
(73.2)
தினசரி சராசரி °C (°F)11.6
(52.9)
12.6
(54.7)
14.8
(58.6)
17.8
(64)
20.7
(69.3)
23.8
(74.8)
26.3
(79.3)
27.0
(80.6)
25.6
(78.1)
22.3
(72.1)
17.5
(63.5)
13.3
(55.9)
19.4
(66.9)
தாழ் சராசரி °C (°F)8.4
(47.1)
9.1
(48.4)
11.0
(51.8)
14.0
(57.2)
17.0
(62.6)
20.7
(69.3)
23.7
(74.7)
24.3
(75.7)
21.9
(71.4)
18.2
(64.8)
13.8
(56.8)
10.1
(50.2)
16.0
(60.8)
பதியப்பட்ட தாழ் °C (°F)-1.6
(29.1)
-0.5
(31.1)
-0.6
(30.9)
3.9
(39)
10.6
(51.1)
11.7
(53.1)
17.8
(64)
17.2
(63)
12.4
(54.3)
8.9
(48)
0.0
(32)
0.0
(32)
−1.6
(29.1)
பொழிவு mm (inches)185.2
(7.291)
97.0
(3.819)
91.5
(3.602)
48.5
(1.909)
22.4
(0.882)
5.2
(0.205)
1.3
(0.051)
2.3
(0.091)
8.0
(0.315)
69.3
(2.728)
95.5
(3.76)
185.2
(7.291)
811.4
(31.945)
ஈரப்பதம்63626568727474736862576567
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm)11.39.38.44.62.71.00.30.31.05.26.611.061.7
சூரியஒளி நேரம்136.4148.4198.4225.0297.6321.0325.5316.2288.0248.0192.0151.92,848.4
Source #1: NOAA[7]
Source #2: Deutscher Wetterdienst (humidity, 1966–1978),[8] Meteo Climat (record highs and lows)[9]
தட்பவெப்ப நிலைத் தகவல், Jableh
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
உயர் சராசரி °C (°F)12.8
(55)
14.0
(57.2)
17.7
(63.9)
21.4
(70.5)
25.0
(77)
28.3
(82.9)
30.0
(86)
28.8
(83.8)
27.6
(81.7)
26.5
(79.7)
21.5
(70.7)
15.5
(59.9)
22.43
(72.37)
தினசரி சராசரி °C (°F)10.1
(50.2)
10.9
(51.6)
13.8
(56.8)
16.9
(62.4)
20.3
(68.5)
23.9
(75)
26.1
(79)
25.6
(78.1)
23.7
(74.7)
21.6
(70.9)
16.9
(62.4)
12.2
(54)
18.5
(65.3)
தாழ் சராசரி °C (°F)7.3
(45.1)
7.8
(46)
9.9
(49.8)
12.4
(54.3)
15.5
(59.9)
19.4
(66.9)
22.2
(72)
22.3
(72.1)
19.8
(67.6)
16.7
(62.1)
12.3
(54.1)
8.9
(48)
14.54
(58.18)
பொழிவு mm (inches)159
(6.26)
130
(5.12)
109
(4.29)
50
(1.97)
28
(1.1)
4
(0.16)
1
(0.04)
1
(0.04)
15
(0.59)
52
(2.05)
89
(3.5)
190
(7.48)
828
(32.6)
சராசரி மழை நாட்கள் (≥ 1 mm)141211841112691281
Source #1: http://www.worldweatheronline.com/jableh-weather-averages/al-ladhiqiyah/sy.aspx
Source #2: http://en.climate-data.org/location/47687/

நகரங்கள்

லடாகியா ஆளுநரகத்தில் உள்ள பின்வரும் நகரங்கள் ஆளுநரகத்தில் உள்ள மாவட்டங்களின் தலைநகரங்களாக உள்ளன. (2004 அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் தொகை):

பெருநகரம்மக்கள் தொகை
ளடக்கிய383,786 [10]
ஜப்லி80,000
குவார்டா8.671
அல்-Haffa4.298

மாவட்டங்கள்

ஆளுநரகமானது நான்கு மாவட்டங்களாக ( மனாதிக் ) பிரிக்கப்பட்டுள்ளது:

  • அல்-அஃபா
  • ஜப்லா
  • லடக்கியா
  • குவார்டா

இவை மேலும் 22 துணை மாவட்டங்களாக ( நவாஹி ) பிரிக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரம்

சிரியாவின் முக்கிய துறைமுகமான லடாகியா துறைமுகம்

இந்த ஆளுநரகம் மத்தியதரைக் கடலில் அமைந்துள்ளது, இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. குறிப்பாக ஆளுநரகத்தின் தலைநகரான லடாகியா உள்ளது. இது சிரியாவின் முக்கிய துறைமுகமாகவும் செயல்படுகிறது. இந்த துறைமுகம் 1950 பிப்ரவரி 12 இல் நிறுவப்பட்டது. [11]

இந்த துறைமுகத்தின் வழாயாக ஆடை, கட்டுமானப் பொருட்கள், வாகனங்கள், அறை கலன்கள், தாதுக்கள், புகையிலை, பருத்தி போன்ற பொருட்களும் லிண்டல்கள், வெங்காயம், கோதுமை, பார்லி, பேரீச்சை, தானியங்கள் மற்றும் அத்திப்பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளில் அடங்கும். 2008 ஆம் ஆண்டில் துறைமுகம் சுமார் 8 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை