ஆப்பர்சூனிட்டி தளவுளவி

ஆப்பர்சூனிட்டி (Opportunity, MER-B , Mars Exploration Rover – B), என்பது நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இரண்டு தளவுளவிகளில் (rover) இரண்டாவது ஆகும்.

ஆப்பர்சூனிட்டி
Opportunity
செவ்வாய்க் கோளில் ஆப்பர்சூனிட்டி (ஓவியம்)
திட்ட வகைசெவ்வாய் தளவுளவி
இயக்குபவர்நாசா
காஸ்பார் குறியீடு2003-032A
இணையதளம்JPL's Mars Exploration Rover
திட்டக் காலம்திட்டம்: 90 சோல்சு (92.5 புவி நாட்கள்)
இறுதி: 5,352 சோல்சு (5498 புவி நாட்கள்; 15 புவி ஆண்டுகள்)
விண்கலத்தின் பண்புகள்
விண்கல வகைதளவுளவி
ஏவல் திணிவுமொத்தம்: 1,063 கிகி
தளவுளவி: 185 கிகி
தரையிறங்கி: 348 கிகி
பாரசூட்: 209 கிகி
வெப்ப உறை: 78 கிகி[1]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்சூலை 7, 2003, 03:18 ஒசநே[2][1]
ஏவுகலன்டெல்டா II 7925H-9.5[1][3][4]
ஏவலிடம்கேப் கேனவரல் SLC-17B
ஒப்பந்தக்காரர்போயிங்
திட்ட முடிவு
கடைசித் தொடர்புசூன் 10, 2018[5]
செவ்வாய் தேட்ட ஊர்தி
தரையிறங்கிய நாள்சனவரி 25, 2004,[2] 05:05 UTC SCET
MSD 46236 14:35 AMT
தரையிறங்கிய இடம்1°56′46″S 354°28′24″E / 1.9462°S 354.4734°E / -1.9462; 354.4734 (Opportunity rover)[6]
Distance covered45.16 கிமீ (28.06 மைல்)[7]
----
செவ்வாய் ஆய்வுத் திட்டம்
← இசுப்பிரிட்கியூரியோசிட்டி

இது ஜனவரி 25, 2004 இல் செவ்வாயில் மெரிடியானி பீடத்தில் (Meridiani Planum) வெற்றிகரமாகத் தரையிறங்கியது. முதலாவாதக இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜனவரி 4, 2004 இல் இசுபிரிட் தளவுளவி (MER-A, Mars Exploration Rover - A) என்றதளவுளவி (rover) செவ்வாயில் 90மைல் அகண்ட கூஸிவ் குழியில்('Gusev Crater') வெற்றிகரமாகத் தரையிறங்கியது. ஆனால் இசுபிரிட் 2009 நகர முடியாமல் தடைபட்டுப்போனது . பின்னர் 2010 இல் முழுமையாக இதன் தொடர்பு நிறுத்தப்பட்டன. ஆனால் வெறும் 3 மாத காலத்திற்கு மட்டும் நாசாவால் திட்டமிடப்பட்டு அனுப்பி வைத்தத 'ஆப்பர்சூனிட்டி' இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளாக இது செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது தனது திட்டமிட்ட பயனத்தை விட 40 மடங்கு அதிக காலம் செயல்பட்டு வருகிறது. முதலில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரைக்குத்தான் ஆப்பர்சூனிட்டி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை 38.7 கிலோமீட்டர் வரை நகர்ந்து விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 70 ஆயிரம் படங்களையும் அது அனுப்பியுள்ளது.

இந்த திட்ட பணி ஆரம்ப 90 Sol காலத்தில், மெரிடியானி பீடத்தில் உள்ள செவ்வாய் கிரத்திற்கு தொடர்பில்லாத வின்கற்களை பற்றி அறிவது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விக்டோரியா க்ரேட்டர் (Victoria Crater) பற்றி அறிய இது பயன்படுத்தப்படுகிறது. இது தூசி புயல்களில் தப்பிப்பிழைத்து எண்டோவர் பள்ளத்தை 2011 இல் அடைந்தது. இதை இதன் இரண்டாவது இறங்கும் தளம் என விவரிக்கின்றனர்.

செவ்வாய் கோள் கண்டறிதல் தளவுளவியின் அறிவியல் இலக்குகள்

  • பாறைகள் மற்றும் மண்ணின் பல்வேறு குணாதிசயத்தைக் கொண்டு செவ்வாயில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்களைக் கண்டறிதல். மழை, ஆவியாதல், வண்டல் இயல்பு அல்லது நீர்வெப்ப நடவடிக்கை ஆகியவைகளைக் கொண்டு தண்ணீர் இருந்ததற்கான தடயங்களை கண்டறிய முற்படும்.
  • இறங்கும் தளங்களை சுற்றியுள்ள உலோகங்கள், பாறைகள், மற்றும் கனிமங்கள் ஆகியவைப் பற்றி அறிதல்.
  • தண்ணீர் அல்லது காற்று அரிப்பு, வண்டல், நீர்வெப்ப வழிமுறைகள், எரிமலைகள் மற்றும் மோதல்களால், நில அமைப்பு உருவான செயல்முறைகள் பற்றி அறிவது.
  • பாறைகள், மண்ணின் கட்டமைப்பு மற்றும் குணாதிசயத்தைக் கொண்டு அவைகள் உருவாகிய செயல்முறைகளைத் தீர்மானிப்பது.
  • உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவது இதன் முக்கியப் பணி.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை