ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு (Research and Analysis Wing) (R&AW) (ISO: Anusandhān aur Viślēṣaṇ Viṅg), இதனை சுருக்கமாக ரா (R&AW) என்பர். இந்தியாவின் நலனனைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதிசெயல்களை கண்காணிப்பதற்கும், தடை செய்யவும், சதிகாரர்களை கண்டறிந்து கைது செய்தற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும். முன்னர் இந்திய உளவு அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உளவுப் பணி மேற்கொண்டிருந்தது. 1968 முதல் புதிதாக துவகக்ப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுபாய்வு அமைப்பு வெளிநாடுகளில் மட்டும் தனது உளவுப் பணியை மேற்கொள்கிற்து. இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. இதன் தற்போதைய தலைவர் சமந்த் கோயல் அவார்.[3]இந்திய அரசின் செயலாளர் பதவி தரத்தில் உள்ள ரா அமைப்பின் தலைவர், இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு தனது அறிக்கைகளை பிரதமருக்கு அனுப்புவர்.

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (R&AW)
ராவின் சின்னம்
உளவு அமைப்பு மேலோட்டம்
அமைப்பு21 செப்டம்பர் 1968; 55 ஆண்டுகள் முன்னர் (1968-09-21)
தலைமையகம்புது தில்லி, இந்தியா[1]
குறிக்கோள்धर्मो रक्षति रक्षितः (சமசுகிருதம்)
Dharmō rakṣati rakṣitaḥ (ISO)
வார்ப்புரு:Trans[2]
பணியாட்கள்7,500
அமைச்சர்
உளவு அமைப்பு தலைமை
  • சமந்த் கோயல், இந்திய அரசுச் செயலாளர்
மூல உளவு அமைப்புஇந்திய அமைச்சரைவைச் செயலகம்
கீழ் அமைப்புகள்

1962 இந்திய சீனப் போர் மற்றும் 1965 இந்திய பாகிஸ்தான் போரிகள் வருவதை துப்பறிந்து இந்திய உளவு அமைப்பால் இந்திய அரசுக்கு செய்தி தர இயலவில்லை. எனவே 1968-இல் வெளிநாடுகளில் மட்டும் துப்பறியும் மற்றும் உளவுப் பணிகள் செய்வதற்கு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு துவக்கப்பட்டது.[4][5]

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் முயற்சியால் 1975-இல் சிக்கிம் இராச்சியம் இந்தியாவுடன் இணைந்தது.[6] துவக்கக் காலத்தில் வெளிநாடுகளின் உளவு வேலைகள், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், இந்திய அரசின் வெளிநாட்டு கொள்கைகளில் ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகள் இவ்வமைப்பு செய்து வந்தது.[7][8][9] மேலும் இவ்வமைப்பு இந்தியாவின் அணுசக்தி திட்டங்களின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துகிறது.[10][11][12][13]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெள் இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை