ஆர்சனோலைட்டு

ஆக்சைடு கனிமம்

ஆர்சனோலைட்டு (Arsenolite) என்பது As4O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஆர்சனிக் சல்பைடுகள் ஆக்சிசனேற்றம் அடைவதால் உருவாகும் விளைபொருளாக ஆர்சனோலைட்டு உருவாகிறது. பொதுவாக வெண்மை நிறத்தில் சிறிய எண்முகப் படிகங்களாகக் காணப்படுகிறது. ஆனால் மாசுகளாகக் காணப்படும் ரியல்கர் அல்லது ஒர்பிமெண்ட்டு போன்ற சல்பைடு கனிமங்களால் இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறச் சாயல் தோன்றுகிறது. ஆர்சனிக் டிரை ஆக்சைடின் ஒற்றைச்சரிவச்சு வகைக் கனிமமான ஈருருவ கிளாடிடைட்டு, ரியல்கர் (As4S4), ஓர்பிமெண்டு (As2S3), எரித்ரைட்டு Co3(AsO4)2•8H2O ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து கூட்டாக ஆர்சனோலைட்டு இயற்கையில் காணப்படுகிறது [1].

ஆர்சனோலைட்டு
Arsenolite
அமெரிக்காவின் நெவேதா மாநிலம் நையி மாகாணத்தின் மன்காட்டன் மாவட்டத்தில் கிடைத்த ஆர்சனோலைட்டு (அளவு: 6.0 x 4.3 x 2.9 செ.மீ)
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுAs4O6
இனங்காணல்
மோலார் நிறை197.841 கி/மோல்
நிறம்வெண்மை, வெளிர் நீலம், இளஞ் சிவப்பு, மாசு கலந்ததெனில் மஞ்சள்
படிக இயல்புபொதுவாக சிறிய எண்முகம்; பொதி அல்லது ஓடு; கொத்து,
படிக அமைப்புCubic
பிளப்பு{111} இல்
முறிவுசங்குரு
மோவின் அளவுகோல் வலிமை1.5
மிளிர்வுபட்டுப் பளபளப்பு; மங்கலானது
கீற்றுவண்ணம்வெண்மை /வெளிர் வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி3.87
ஒளியியல் பண்புகள்சம உரு; திசையற்றது
ஒளிவிலகல் எண்n = 1.755
பிற சிறப்பியல்புகள்துவர்ப்பு, இனிப்புச் சுவை; நச்சு
மேற்கோள்கள்[1][2][3]

அதிக நச்சுத்தன்மை மிக்க கனிமங்கள் என்ற வகைப்பாட்டுக் குழுவில் ஆர்சனோலைட்டு கனிமமும் இடம்பெறுகிறது ref name=Mindat/>.

தோற்றம்

முதன்முதலில் 1854 ஆம் ஆண்டு செருமனி நாட்டின் லோயர் சேக்சோனி மாநிலத்தின் செயின்ட் ஆண்டிரியசுபெர்க் மாவட்ட ஆர்சு மலையில் கண்டறியப்பட்டது [3].

ஆர்சனைடைக் கொண்டுள்ள சல்பைடு கனிமங்கள் இருக்கும் நீர்வெப்பப் பகுதிகளில் ஆக்சிசனேற்ற விளைபொருளாக ஆரசனோலைட்டு தோன்றுகிறது. சுரங்கம் அல்லது நிலக்கரி அடுக்கு தீப்பிடிப்பு பகுதிகளிலும் இது தோன்றுகிறது [1].

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆர்சனோலைட்டு&oldid=2730931" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை