இந்தியாவின் நிதியமைச்சர்

இந்தியாவின் நிதி அமைச்சர் (Minister of Finance of India) இந்திய அரசின் நிதி அமைச்சின் தலைவர் ஆவார். அமைச்சரவையின் மூத்த அலுவலகம் ஒன்றின் தலைவரான நிதி அமைச்சர் அரசின் நிதிக்கொள்கைக்குப் பொறுப்பானவர் ஆவார். அத்துடன் இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பொது வரவு செலவுத் திட்டங்களின் வரைவாளரும் ஆவார். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, பல்வேறு அமைச்சரவைகளுக்கும், அரசு நிறுவனங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகளை இவரே தீர்மானிக்கிறார். இவருக்கு உதவியாக நிதி இராசாங்க அமைச்சர், துணை நிதி அமைச்சர் ஆகியோர் செயல்படுகின்றனர்.

{{{body}}} நிதி அமைச்சர்
தற்போது
நிர்மலா சீத்தாராமன்

31 மே 2019 முதல்
நிதி அமைச்சர்
உறுப்பினர்அமைச்சரவை
Cabinet Committee on Security
நியமிப்பவர்பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர்
முதலாவதாக பதவியேற்றவர்லியாகத் அலி கான்
உருவாக்கம்29 அக்டோபர் 1946

விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது நிதி அமைச்சராக ஆர். கே. சண்முகம் செட்டியார் இருந்துள்ளார். இவரே இந்தியாவின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். தற்பொழுதைய நிதியமைச்சராக நிர்மலா சீத்தாராமன் பதவியில் உள்ளார்.

வ. எண்நிதியமைச்சர்காலவரைகல்வி
1லியாகத் அலி கான்1946-1947 (இடைப்பட்ட அரசு)அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
2ஆர். கே. சண்முகம் செட்டி1947-1949[1]சென்னைப் பல்கலைக்கழகம்
3ஜான் மத்தாய்1949-1951ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
4சி. து. தேஷ்முக்1951-1957[2]ஜீசஸ் கல்லூரி, கேம்பிரிச்சு
5டி. டி. கிருஷ்ணமாச்சாரி1957-1958சென்னைப் பல்கலைக்கழகம்
6ஜவஹர்லால் நேரு1958-1959டிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ்; மைய ஆலயம்
7மொரார்ஜி தேசாய்1959-1964மும்பை பல்கலைக்கழகம்
8டி. டி. கிருஷ்ணமாச்சாரி1964-1965சென்னைப் பல்கலைக்கழகம்
9சச்சிந்திர சவுத்ரி1965-1967கொல்கத்தா பல்கலைக்கழகம்
10மொரார்ஜி தேசாய்1967-1970மும்பை பல்கலைக்கழகம்
11இந்திரா காந்தி1970-1971விஸ்வபாரதி பல்கலைக்கழகம்; ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
12ஒய். பி. சவாண்1971-1975புனே பல்கலைக்கழகம்
13சி. சுப்பிரமணியன்1975-1977சென்னைப் பல்கலைக்கழகம்
14மொரார்ஜி தேசாய்1977-1979மும்பை பல்கலைக்கழகம்
15சரண் சிங்1979-1980மீரட் பல்கலைக்கழகம்
16ரா. வெங்கட்ராமன்1980-1982சென்னைப் பல்கலைக்கழகம்
17பிரணாப் முக்கர்ஜி1982-1985கொல்கத்தா பல்கலைக்கழகம்
18வி. பி. சிங்1985-1987அலகாபாத் பல்கலைக்கழகம்;

புனே பல்கலைக்கழகம்

19எசு. பி. சவாண்1987-1989சென்னைப் பல்கலைக்கழகம்; உசுமானியா பல்கலைக்கழகம்
20மது தண்டவதே1989-1990
21யஷ்வந்த் சின்கா1990-1991பாட்னா பல்கலைக்கழகம்
22மன்மோகன் சிங்1991-1996பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகார்; செயின்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிட்ஜ்; நியுபீல்டு கல்லூரி, ஆக்ஸ்போர்டு
23ப. சிதம்பரம்1996-1998சென்னைப் பல்கலைக்கழகம்; ஆர்வர்டு வணிகவியல் பள்ளி
24யஷ்வந்த் சின்கா1998-2002பாட்னா பல்கலைக்கழகம்
25ஜஸ்வந்த் சிங்2002-2004இந்திய தேசிய பாதுகாப்புப் பயிற்சிப் பள்ளி
26ப. சிதம்பரம்மே 2004 - நவம்பர் 2008சென்னைப் பல்கலைக்கழகம்; ஆர்வர்டு வணிகவியல் பள்ளி
27மன்மோகன் சிங்திசம்பர் 2008 - ஜனவரி 2009 (பிரதமர் பொறுப்பிலிருந்து கூடுதலாக இப்பொறுப்பையும் கவனித்தார்)பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகார்; செயின்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிட்ஜ்; நிப்பீல்டு கல்லூரி, ஆக்சுபோர்டு
28பிரணாப் முக்கர்ஜி24 சனவரி, 2009 - 26 ஜூன், 2012 (இடையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பிலிருந்து கொண்டு கூடுதலாக இப்பொறுப்பினை மேற்கொண்டார்)கொல்கத்தா பல்கலைக்கழகம்
29மன்மோகன் சிங்சூன் 26, 2012 - சூலை 31, 2012 முதல் (பிரணாப் முக்கர்ஜியின் விலகலால் பிரதமர் இப்பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார்)பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகார்; செயின்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிட்ஜ்; நியூஃபீல்டு கல்லூரி, ஆக்சுபோர்டு
30ப. சிதம்பரம்சூலை 31, 2012 - 26 மே 2014சென்னைப் பல்கலைக்கழகம்; ஆர்வர்டு வணிகவியல் பள்ளி
31அருண் ஜெட்லி30 மே 2019 வரைதில்லி பல்கலைக்கழகம்
32நிா்மலா சீதாராமன்30 மே 2019 முதல் நிதியமைச்சராக உள்ளாா்ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நிதியமைச்சர்கள்

  • ஆர்.கே. சண்முகம் செட்டியார்.--பிறப்பு1892- இறப்பு 1953. விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சர்.
  • டி.டி. கிருஷ்ணமாச்சாரி.
  • சி. சுப்பிரமணியம். இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்.1998- ல் பாரத இரத்தினா பெற்றார்.
  • ஆர். வெங்கட்ராமன்.இந்திய குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
  • ப. சிதம்பரம். (பிறப்பு 16-9-1945 ----) சிவகங்கை மாவட்டம் காநாடுகாத்தான் ஊரில் பிறந்தார்.சட்டம் பயின்றவர்.இந்திய தேசிய காங்கிரசின் எம்.பி
  • நிர்மலா சீத்தாராமன். தற்போதைய நிதியமைச்சர். இந்திரா காந்திக்குப் பிறகு இவர் இரண்டாவது பெண் நிதித்துறை அமைச்சர் ஆவார். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் மதுரையில் 1959ஆம் ஆண்டு பிறந்தார். பாஜக மாநிலங்களவை உறுப்பினர்

சான்றுகள்

இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை