இந்தியாவில் படிப்பறிவு

இந்தியக் கல்வி அறிவு சதவீதம் கணக்கெடுப்பு

இந்தியாவில் படிப்பறிவு (Literacy in India) சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் முக்கிய குறிகாட்டியாக உள்ளது.[1] 1947ஆம் ஆண்டு பிரித்தானியர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றபோது 12% ஆக இருந்த இந்தியப் படிப்பறிவு வீதம் 2011ஆம் ஆண்டில் 74.04%ஆக வளர்ச்சி யடைந்துள்ளது.[2][3] இவ்வளர்ச்சி ஆறு மடங்கு உயர்வினைக் காட்டிலும் கூடுதலாக இருந்தபோதும் உலகளவில் விளங்குகின்ற சராசரி 84%க்குக் குறைவானது.[4] இருப்பினும் உலகிலேயே எந்த நாட்டையும் விட மிகக் படிப்பறிவு உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடாக விளங்குகிறது.[5] மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களுக்குப் பின்னரும் இந்தியாவின் படிப்பறிவு மெதுவாகவே வளர்ந்துள்ளது.[6] 1990ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று அவ்வருட வளர்ச்சி வீதத்தில் இந்தியாவில் அனைவரும் படிப்பறிவு பெற்றவர்களாக விளங்க 2060 ஆண்டு ஆகும் என மதிப்பிட்டுள்ளது.[7] ஆயினும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில், 2001-2011 பத்தாண்டுகளில் 9.2% வீதத்தில் வளர்ந்துள்ளது,முந்தைய பத்தாண்டுகளின் வளர்ச்சி வீதங்களை விடக் குறைவாக இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

இந்தியாவில் மாவட்ட வாரியாக படிப்பறிவு விழுக்காடு 2001-2011.
உலகளவில் படிப்பறிவு, UNHD 2013 அறிக்கை.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை