இந்திய அறிவியல் நிறுவனம்

இந்திய அறிவியல் நிறுவனம் (இஅநி) (Indian Institute of Science) என்பது அறிவியல், பொறியியல், வடிவமைப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தன்னாட்சி தகுதிபெற்ற, பொதுத்துறை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். இது இந்திய மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் 1909ஆம் ஆண்டில் ஜம்சேத்ஜீ டாடாவின் ஆதரவுடன் நிறுவப்பட்டது. இதனால் இப்பகுதியில் இது "டாடா நிறுவனம்" என்று அழைக்கப்படுகிறது.[5] இதற்கு 1958ஆம் ஆண்டில் பல்கலைக்கழக தகுதியும் 2018இல் 'முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்' என்ற சிறப்புத் தகுதியும் வழங்கப்பட்டது.

இந்திய அறிவியல் நிறுவனம்
Indian Institute of Science
டாடா நிறுவனம்
வகைபொதுப் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனம்
உருவாக்கம்1909; 115 ஆண்டுகளுக்கு முன்னர் (1909)
உருவாக்குனர்ஜம்ஜெட்சி டாடா
கிருஷ்ணராஜா வாதியார் IV
சார்புபொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு;[1] பல்கலைக்கழக மானியக் குழு; இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்
நிதிநிலை591 கோடி (US$74 மில்லியன்)[2]
தரநிர்ணயம்தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
பணிப்பாளர்கோவிந்தன் ரங்கராஜன்[3]
கல்வி பணியாளர்
525[4]
நிருவாகப் பணியாளர்
354[4]
மாணவர்கள்3,842[4]
பட்ட மாணவர்கள்453[4]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்947[4]
2,737[4]
அமைவிடம், ,
இந்தியா
வளாகம்நகரம், 400 ஏக்கர்
இணையதளம்www.iisc.ac.in

2019ஆம் ஆண்டில், இஅக தனது முத்திரை அறிக்கையை அறிமுகப்படுத்தியது: "கண்டுபிடி மற்றும் புதுமை; மாற்றம் மற்றும் வரம்பு மாற்றம்; சேவை மற்றும் வழிநடத்து".[6]

வரலாறு

இயக்குநர்கள் [7]
ஜாம்செட்ஜி டாடா, நிறுவனர்

1893ல் ஜாம்செட்ஜி டாடாவிற்கும் சுவாமி விவேகானந்தருக்கும் இடையில் கப்பல் ஒன்றில் நடைபெற்ற தற்செயலான சந்திப்பில், எஃகு தொழிற்துறையை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான டாடாவின் திட்டம் பற்றி இவர்கள் விவாதித்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு டாடா விவேகானந்தருக்குக் கடிதம் எழுதினார். அதில் தான் விவேகானந்தரை சந்தித்ததை நினைவு கூர்ந்து, தான் துவங்கப்போகும் இந்தியாவுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தின் தனது திட்டத்துடன் தொடர்புடைய யோசனைகளை நினைவு கூறுவதாகவும், இவற்றினை விவேகானந்தர் கேள்விப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.[11][12]

அறிவியல் மற்றும் தலைமைத்துவ திறன்கள் குறித்த விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட டாடா, தனது பிரச்சாரத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்று விரும்பினார். விவேகானந்தர் இந்த திட்டத்தை உற்சாகத்துடன் ஒப்புக் கொண்டார். நாட்டின் அறிவியல் திறன்களை முன்னேற்றுவதற்கான நோக்கத்துடன் டாடா, ஒரு ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கான திட்டத்தைத் தயாரிக்க ஒரு தற்காலிக குழுவை அமைத்தார். குழு டிசம்பர் 31, 1898 அன்று கர்சன் பிரபுவுக்கு ஒரு வரைவு முன்மொழிவை வழங்கியது.[13] இதைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற சர் வில்லியம் ராம்சே, அத்தகைய நிறுவனத்திற்குப் பொருத்தமான இடத்தை முன்மொழிய அழைக்கப்பட்டார். ராம்சே பெங்களூரைச் சிறந்த இடமாகப் பரிந்துரைத்தார்.

மைசூர் மாநிலத்தின் சார்பாகக் கிருஷ்ணா ராஜா வதியார் IV, மற்றும் டாடா ஆகியோரால் இந்த நிறுவனத்திற்கான நிலம் மற்றும் பிற வசதிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. கர்நாடகம் 371 ஏக்கர்கள் (1.50 km2) நிலத்தினை நன்கொடையாக அளித்தது.[14] இந்நிலத்தின் இப்போதைய மதிப்பு சுமார் ரூ. 200 பில்லியன் ஆகும். டாடா ஐ.ஐ.எஸ்.சி. கர்நாடக மாநிலமும் மூலதன செலவினங்களுக்காக ரூ. 500000 (இப்போது 12.5 மில்லியன் மதிப்புடையது) மற்றும் ஆண்டு செலவுக்கு ரூ. 50000 (இப்போது 1.25 மில்லியன் மதிப்பு) பங்களித்தது.[15] ஹைதராபாத்தின் 7வது நிஜாம் - மிர் ஒஸ்மான் அலிகானும் 31 வருட காலத்திற்கு 3 லட்சம் ரூபாய் பங்களித்தார்.[16]

நிறுவனத்தின் செயலமைப்பினை வைஸ்ராய், லார்ட் மிண்டோ அங்கீகரித்து, செயல்பட தேவையான வெஸ்டிங் ஆணை 1909 மே 27 அன்று கையெழுத்தானது. 1911ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், மைசூர் மகாராஜா இந்த நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஜூலை 24ஆம் தேதி, முதல் தொகுதி மாணவர்கள் நார்மன் ருடால்ப் மற்றும் ஆல்பர்ட் ஹேயின் கீழ் எலக்ட்ரோ-தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு வேதியியல் துறைகளில் அனுமதிக்கப்பட்டனர். இரண்டு மாதங்களுக்குள், கரிம வேதியியல் துறை துவக்கப்பட்டது. 1958ஆம் ஆண்டில் புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழு இந்த நிறுவனத்திற்கு பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கியது.[17]

1909ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் நிறுவனம் தொடங்கிய நேரத்தில், உன்னத வாயுக்களைக் கண்டுபிடிப்பதில் சர் வில்லியம் ராம்சேயின் சக ஊழியரான மோரிஸ் டிராவர்ஸ் இதன் முதல் இயக்குநரானார். டிராவர்ஸைப் பொறுத்தவரை, இந்த நிறுவனத்தில் இவர் மேற்கொண்ட பணியின் இயல்பான தொடர்ச்சியாக இது அமைந்தது. ஏனெனில் இவர் இந்த நிறுவனத்தில் முக்கிய பங்கினைக் கொண்டிருந்தார். இந்நிறுவனத்தின் முதல் இந்திய இயக்குநராக நோபல் பரிசு பெற்ற சர் ச. வெ. இராமன் ஆவார் .[18]

பொறியியலில் முதுநிலை பாடங்கள் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது இந்த நிறுவனம் தான். இயற்கை அறிவியல் பட்டதாரிகளுக்கான உயிரியல், வேதியியல், இயற்பியல் மற்றும் கணித அறிவியலில் ஒருங்கிணைந்த முனைவர் பட்ட திட்டங்களும் இங்கு தொடங்கப்பட்டன.[13]

2018ஆம் ஆண்டில், இந்தியாவின் தலைசிறந்த நிறுவன அங்கீகாரம் இந்திய அறிவியல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில் இந்த பெருமைப்பெற்ற ஆறு நிறுவனங்களுள் இதுவும் ஒன்று.[19]

வளாகம்

இந்திய அறிவியல் நிறுவன வளாகம் பெங்களூரின் வடக்கே, பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம் மற்றும் கெம்பே கவுடா பேருந்து நிலையத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில், யஷ்வந்த்பூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் கெம்பெகவுடா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இராமன் ஆய்வுக் கழகம், இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), மர ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் (சிபிஆர்ஐ) ஆகிய பல ஆராய்ச்சி நிறுவனங்கள் இப்பகுதில் அமைந்துள்ளன. மேலும் இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை இந்திய அறிவியல் கழகத்துடன் வழக்கமான பேரூந்து சேவையால் இணைக்கப்பட்டுள்ளன.[20] இந்த வளாகத்தில் குல்மோகர் மார்க், மஹோகனி மார்க், பாதாமி மார்க், தலா மார்க், அசோகா மார்க், நீலகிரி மார்க், சில்வர் ஓக் மார்க், அம்ரா மார்க் மற்றும் அர்ஜுனா மார்க் போன்ற பாதைகளால் குறிக்கப்பட்ட 40 க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இந்த நிறுவனம் முழுக்க குடியிருப்பு மற்றும் பெங்களூரு நகரின் மையத்தில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது.[21] இந்த வளாகத்தில் ஆறு சிற்றுண்டிச்சாலைகள், ஒரு ஜிம்கானா (ஜிம்னாசியம் மற்றும் விளையாட்டு வளாகம்), ஒரு கால்பந்து மைதானம் மற்றும் ஒரு துடுப்பாட்ட மைதானம், நான்கு உணவு விடுதிகள், பல உணவகங்கள், ஒன்பது ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் விடுதிகள் (தங்குமிடங்கள்), ஒரு நூலகம், இரண்டு வர்த்தக நிறுவன மையம் மற்றும் ஆசிரியர் மற்றும் பிற ஊழியர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.

இந்திய அறிவியல் நிறுவன வளாகம் சுமார் 110 வகையான மரச்செடிகளைக் கொண்ட கவர்ச்சியான மற்றும் சுதேச தாவர வகைகளை கொண்டுள்ளது.[22] வளாகத்தில் உள்ள சாலைகள் ஆதிக்கம் செலுத்தும் மர இனங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளன.[23]

நிர்வாகம் மற்றும் ஆசிரிய மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட பிரதான கட்டிடம் பழமையான கட்டிடக்கலை பாணியில் உள்ளது. சாம்பல் நிற, அழகான கோபுரத்தால் சூழப்பட்டுள்ளது. இக்கட்டிடத்திற்கு முன்பாக கில்பர்ட் பேயசின் வேலைப்பாட்டில் அமைந்த ஜே.என். டாடாவின் நினைவாக அமைக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் உள்ளது. ஜம்சேத்ஜீ டாடாவின் தாராள மனப்பான்மையையும், இந்தியாவின் நலனுக்காக பணியாற்றிய அவரின் விடாமுயற்சியையும் வருங்கால சந்ததியினருக்கு நினைவுபடுத்தும் கல்வெட்டு ஒன்று இந்த நினைவுச் சின்ன காலடியில் உள்ளது. பெங்களூரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இந்த கட்டிடம் 1912-13ல் சி.எஃப். ஸ்டீவன்ஸ் மற்றும் பம்பாயின் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.[24]

உலோகம் மற்றும் விண்வெளித் துறைகளுக்கான கட்டிடங்கள் 1940இல் ஜெர்மன் கட்டிடக் கலைஞர் ஓட்டோ கோனிக்ஸ்பெர்கரால் வடிவமைக்கப்பட்டது.[25]

இரண்டாவது வளாகம் 1,500 ஏக்கர்கள் (6.1 km2) பரப்பில் உள்ளது. இங்கு உருவாக்கப்படும் உள்கட்டமைப்பில் திறன் மேம்பாட்டு மையம், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்டின் சமூக மேம்பாட்டு நிதியின் கீழும், சூரிய சக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் ஒரு காலநிலை ஆய்வகம் ஆகியவை அடங்கும். "சி-பெல்ட்" திட்டத்தின் கீழ், உயிர் ஆற்றல் மற்றும் குறைந்த கார்பன் தொழில்நுட்பங்களுக்கான மையம், நிலையான தொழில்நுட்பங்களுக்கான மையம் உள்ளிட்டவை இங்கு தொடங்கப்பட்டுள்ளன.[26]

தரவரிசை

க்யு எசு உலக பல்கலைக்கழக தரவரிசை உலகில் இந்திய அறிவியல் நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.[27][28] 2021ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை இந்திய அறிவியல் நிறுவனம் உலகில் 301–350 என்ற பிரிவில் இடம் பிடித்தது. இதே போல் 2020இல் ஆசியா பல்கலைக்கழக தரவரிசையில் 36வது இடத்தில் உள்ளது. 2021 கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை உலக அளவில் 185வது இடத்தையும், ஆசியா பல்கலைக்கழக தரவரிசையில் 51வது இடத்தினையும் பிரிக்ஸ் நாடுகளில் 10வது இடத்தையும் பிடித்தது.[29] 2020ஆம் ஆண்டில், எஸ் சி ஐ இமாகோ நிறுவனங்களின் தரவரிசையில் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் இது 530வது இடத்தில் உள்ளது.[30] உலக பல்கலைக்கழகங்களின் கல்வி தரவரிசை 2020ஆம் ஆண்டில் உலகில் 401–500 இடத்தைப் பிடித்தது.[31] இது இந்தியாப் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.[32][33][34] 11 ஜூன் 2020 அன்று வெளியிடப்பட்ட 2020 தேசிய தரவரிசை ஒட்டுமொத்த பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.[35]

கல்வி பிரிவுகள், துறைகள் மற்றும் மையங்கள்

கல்வி நோக்கங்களுக்காக, நிறுவனத்தில் உள்ள துறைகள் மற்றும் மையங்கள், அறிவியல் அல்லது பொறியியல் தொகுதியாக ஒதுக்கப்படுகின்றன.[36] நிர்வாக நோக்கங்களுக்காக (ஆசிரிய ஆட்சேர்ப்பு, மதிப்பீடு மற்றும் பதவி உயர்வு போன்றவை), துறைகள் மற்றும் மையங்கள் ஆறு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் ஒரு தலைவர் தலைமையிலானது. ஒவ்வொரு துறை அல்லது மையமும் ஒரு தலைவரால் நிர்வகிக்கப்படுகிறது.

பிரிவுதுறைகள், மையங்கள் மற்றும் அலகுகள்
உயிரியல் அறிவியல்
வேதியியல் அறிவியல்
  • கனிம மற்றும் இயற்பியல் வேதியியல் துறை
  • பொருட்கள் ஆராய்ச்சி மையம்
  • அணு காந்த அதிர்வு ஆராய்ச்சி மையம்
  • கரிம வேதியியல் துறை
  • திட நிலை மற்றும் கட்டமைப்பு வேதியியல் பிரிவு
இயற்பியல் மற்றும் கணித அறிவியல்
  • வானியல் மற்றும் வானியற்பியல் திட்டம்
  • கிரையோஜெனிக் தொழில்நுட்ப மையம்
  • உயர் ஆற்றல் இயற்பியலுக்கான மையம்
  • கருவி மற்றும் பயன்பாட்டு இயற்பியல் துறை
  • கணிதத் துறை
  • இயற்பியல் துறை
மின், மின்னணு மற்றும் கணினி அறிவியல்
  • கணினி அறிவியல் மற்றும் ஆட்டோமேஷன் துறை
  • மின் தொடர்பு பொறியியல் துறை
  • மின் பொறியியல் துறை
  • மின்னணு அமைப்புகள் பொறியியல் துறை
இயந்திர அறிவியல்
  • விண்வெளி பொறியியல் துறை
  • வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் மையம்
  • பூமி அறிவியல் மையம்
  • தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையம்
  • நிலையான தொழில்நுட்பங்களுக்கான மையம்
  • வேதியியல் பொறியியல் துறை
  • சிவில் இன்ஜினியரிங் துறை
  • காலநிலை மாற்றத்திற்கான திவேச்சா மையம்
  • பொருட்கள் பொறியியல் துறை
  • இயந்திர பொறியியல் துறை
இடைநிலை ஆராய்ச்சி
  • உள்கட்டமைப்பு, நிலையான போக்குவரத்து மற்றும் நகர திட்டமிடல் மையம்
  • பயோசிஸ்டம்ஸ் அறிவியல் மற்றும் பொறியியல் மையம்
  • தற்கால ஆய்வுகளுக்கான மையம்
  • நானோ அறிவியல் மற்றும் பொறியியல் மையம்
  • கணக்கீட்டு மற்றும் தரவு அறிவியல் துறை
  • மேலாண்மை ஆய்வுகள் துறை
  • எரிசக்தி ஆராய்ச்சிக்கான இடைநிலை மையம்
  • நீர் ஆராய்ச்சிக்கான இடைநிலை மையம்
  • இடைநிலை கணித அறிவியல்
  • சைபர் இயற்பியல் அமைப்புகளுக்கான ராபர்ட் போஷ் மையம்
  • சூப்பர் கம்ப்யூட்டர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்

பின்வரும் மையங்கள் நேரடியாக இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ளன (பிரிவு தலைவர் இல்லாமல்):[36] தன்னாட்சி பெற்ற மையங்கள்:[37]

  • மேம்படுத்தப்பட்ட உயிரிகழிவு சக்தி தொழில்நுட்ப சமூகம்
  • மூளை ஆராய்ச்சி நிலையம்
  • புதுமை மற்றும் மேம்பாட்டு சமூகம்

கல்வித் திட்டங்கள்

முதுநிலை பட்டப்படிப்புகள்

வளாகத்தில் உள்ள மாணவர்களில் 70% க்கும் அதிகமான ஆராய்ச்சி மாணவர்களே. இவர்கள் 40 வெவ்வேறு பிரிவுகளில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்கின்றனர்.[38] முனைவர் பட்டங்களுக்கு வழிவகுக்கும் ஆராய்ச்சி திட்டங்கள் பல துறைகளில் முக்கிய உந்துதலாக இருக்கின்றன.[18] இந்த திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பாடநெறி உள்ளது. இந்த பாடநெறியானது மாணவர்களை ஆராய்ச்சியை மேற்கொள்ள தயார்ப்படுத்துவதற்காக உள்ளன. ஆனால் முக்கியத்துவம் ஆய்வறிக்கை பணிக்கு வழங்கப்படுகிறது.[39][40][41] ஆண்டுதோறும் சுமார் 250 ஆய்வு மாணவர்கள் ஆய்வுத் துறையில் சேருகின்றனர். இவர்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்களிலிருந்து நிதியுதவி பெறுகின்றனர்.[42] ஆராய்ச்சி மாணவர்கள் வளாகத்தில் மிகப்பெரிய குழுவாக (50%) உள்ளனர்.

இந்திய அறிவியல் நிறுவன வளாகத்தின் உள்ளே

ஒருங்கிணைந்த முனைவர் திட்டம் 3 ஆண்டு பிஎஸ்சி பட்டதாரிகளுக்கு உயிரியல், வேதியியல், கணித மற்றும் இயற்பியல் துறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சியைத் தொடர வாய்ப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முனைவர் பட்டம் பெறவும் வழிவகுக்கிறது.

முதுநிலை பட்டப்படிப்புகள்

ஒவ்வொரு துறையிலும் இரண்டு ஆண்டு எம்டெக் பாடம் துவக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடங்கள் தேவையின் அடிப்படையில் முக்கிய பாடத்தின் அடிப்படையில் துவங்கப்பட்டது. அதேசமயம் மாணவர்கள் தங்கள் விருப்பம்போல் பிற துறைகளில் உள்ள சில பாடங்களைத் தேர்ந்தெடுத்து தனது பட்ட மதிப்புகளுடன் இணைத்துக்கொள்ளலாம். மேலும் இவர்கள் விரும்பும் தலைப்பில் ஒரு ஆய்வுத்திட்டத்தினையும் மேற்கொள்ளலாம்.

நிறுவனம் வழங்கும் முதுநிலைப் பட்டங்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன: அவை பாடநெறி மூலம் பெறும் பட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி மூலம் பெறும் பட்டங்கள்.

மேலாண்மை கல்வித் துறை பொறியியல் பட்டதாரிகளுக்காகப் பிரத்தியேகமாக மாஸ்டர் ஆஃப் மேனேஜ்மென்ட் திட்டத்தை வழங்குகிறது. தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையம் [43] வடிவமைப்பில் எம்.டெஸ்.) படிப்பை வழங்குகிறது. 1996இல் தொடங்கப்பட்டது, எம்.டி. திட்டம் இரண்டு ஆண்டு, முழுநேர முதுகலை திட்டம்.

இளங்கலை பட்டம் திட்டம்

2009ஆம் ஆண்டில் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக அறிவியலில் இளங்கலை திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் தொகுதி மாணவர்கள் 2011இல் அனுமதிக்கப்பட்டனர். இந்த திட்டம் உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழல் அறிவியல், பொருள் அறிவியல், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய ஆறு பிரிவுகளில் நான்கு ஆண்டு இளங்கலை அறிவியல் (ஆராய்ச்சி) மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் பாடமாக வழங்கப்படுகிறது. பல துறைகளில் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் போது துறைகளுக்கிடையேயான ஆய்வினை மேம்படுத்தும் நோக்கத்திற்காக இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.[44][45]

ஜே.ஆர்.டி டாடா நினைவு நூலகம்

பிரதான நூலகத்தைத் தவிர, இந்த நிறுவனத்தில் துறைசார் நூலகங்களும் உள்ளன. 1959ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் தங்க விழா கொண்டாட்டங்களை நினைவுகூரும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழங்கிய மானியங்களால் கட்டப்பட்ட இந்த நூலகம் ஜனவரி 1965 இல் தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. 1995ஆம் ஆண்டில், இந்த நூலகம் ஜே. ர. தா. டாடா நினைவு நூலகம் என்று மறுபெயரிடப்பட்டது. தேசிய உயர் கணிதத்திற்கான வாரியம் (என்.பி.எச்.எம்) இந்த நூலகத்தைத் தென் பிராந்தியத்திற்கான கணிதத்திற்கான பிராந்திய மையமாக அங்கீகரித்துள்ளது மற்றும் கணிதத்தில் பத்திரிகைகளின் சந்தாவுக்குடச் சிறப்பு மானியத்தையும் தொடர்ந்து வழங்கியுள்ளது.

நூலகத்தின் ஆண்டு நிதிநிலை ரூ. 100 மில்லியன் [46] (கிட்டத்தட்ட 2,500,000 அமெரிக்க டாலர்), இதில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மட்டும் சந்தா ரூ. 90 மில்லியன். நூலகம் தற்போது 1,734க்கும் மேற்பட்ட ஆய்விதழ்களைப் பெறுகிறது, அவற்றில் 1381 சந்தா அடிப்படையிலும், மீதமுள்ள ஆய்விதழ்கள் இலவசமாகவோ அல்லது பரிமாற்ற அடிப்படையிலோ பெறப்படுகின்றன. சுமார் 600 தலைப்புகள் நூலக சந்தா மூலம் அணுகப்படுகின்றன. கூடுதலாக, 10,000க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் இணையவழி இண்டெசுட் (INDEST) சந்தா வழி அணுகப்படுகின்றன நூலகத்தின் 411,000 மேற்பட்ட ஆவணங்கள் இருப்பில் உள்ளன.

மத்திய கணினி வசதி

1970ஆம் ஆண்டில் கணினி வசதிக்காக மைய கணினி மையம் நிறுவப்பட்டது. 1990ஆம் ஆண்டில் இது சூப்பர் கணினி கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக (SERC) மேம்படுத்தப்பட்டது. இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கணினி வசதியை வழங்குகிறது. நிறுவனத்தின் பிளாட்டினம் விழாவை நினைவுகூரும் வகையில் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் (எம்.எச்.ஆர்.டி) எஸ்.இ.ஆர்.சி உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பெட்டாஸ்கேல் சூப்பர் கணினி க்ரே எக்ஸ்சி 40 ஐ இங்குள்ளது. இது இந்தியாவின் மிக விரைவான சூப்பர் கம்ப்யூட்டர் ஆகும்.[47][48]

இந்திய அறிவியல் கழகத்தின் மைய கணினி வசதியினைத் தவிர, சூப்பர் கணினி மேம்பாடு மற்றும் பயன்பாடு தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. பல உயர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பல நிதியுதவி ஆராய்ச்சி திட்டங்களில் இந்த மையம் ஈடுபட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க பழைய மாணவர்கள்

  • வ. க. ஆத்ரே[49]
  • அணுரஞ்சன ஆனந்[50]
  • சத்யா என் அடுலுரி[51]
  • நாராயணசாமி பாலகிருஷ்ணன்[52]
  • சிவா எஸ் பண்டா[53]
  • சசால சந்திர பட்டாச்சார்யா[54]
  • தவாரிகேர் கல்லையா சந்திரசேகர்[55]
  • வடபள்ளி சந்திரசேகர்[56]
  • தீபாங்கர் சட்டர்ஜி[57]
  • இராசகோபாலன் சிதம்பரம்[58]
  • சஞ்சீவ் தாஸ்[59]
  • சஞ்சீவ் காலண்டே[60]
  • எஸ் கணேசு[61]
  • என் கெளதம்[62]
  • ராசேசு சுதீர் கோகலே[63]
  • குஞ்சிதபாதம் கோபாலன்[64]
  • பிரசாந்த் கோசுவாமி[65]
  • ஜி. குருசாமி[66]
  • ரங்காச்சார் நாராயண அய்யங்கார்[67]
  • ஏ. எம். ஜெயனாவர்[68]
  • ரீட்டு கரிதாக்[69]
  • பி. கே. கெல்காரி[70]
  • முகமது இசுலாம் காண்[71]
  • தாபாசு குமார் குண்டு[72]
  • பினாகி மசூம்தார்[73]
  • தேபாசியா மொகாந்தி[74]
  • சரஜு மொகந்தி[75]
  • ஜருகு நரசிம்ம மூர்த்தி[76]
  • எம். ஆர். என். மூர்த்தி[77]
  • பூதராஜூ ஸ்ரீனிவாச மூர்த்தி[78]
  • சுதா மூர்த்தி[79]
  • ராமகிருஷ்ணன் நாகராஜ்[80]
  • கணேசு நாகராஜூ[81]
  • வினய் கே. நண்டிகோரி[82]
  • பி.டி நரசிம்மன்[83]
  • சாமாகாண்ட்ஜ் நாவதி[84]
  • சேதுராமன் பஞ்சநாதன்[85]
  • சுவப்ண குமார் பட்டீல்[86]
  • அலோக் பால்[87]
  • பீணா பிள்ளை[88]
  • தாளாப்பள்ளி பிரதீப்[89]
  • பாலாஜி பிரகாசு[90]
  • இராம் இராஜசேகரன்[91]
  • மதன் ராவ்[92]
  • குண்டபத்துல்லா வெங்கடேஷ்வர ராவ்[93]
  • டி. ஸ்ரீனிவாச ரெட்டி[94]
  • இராஜேந்திர பிரசாத் ராய்[95]
  • ஆர். சங்கரராமகிருஷ்ணன்[96]
  • வி.கே. சரசுவத்[97]
  • சாஹார் சென்குப்தா[98]
  • கைலாசவடிவு சிவன்[சான்று தேவை]
  • ஆர். செளதாமினி[99]
  • கே. ஆர். ஸ்ரீனிவாசன்[100]
  • சர்குர் ஸ்ரீகரி[101]
  • நாராயணசாமி ஸ்ரீனிவாசன்[102]
  • பி.எஸ். சுப்ரமணியம்[103]
  • ஜனார்த்தன சுவாமி[104]
  • எச்.வி. துளசிராம்[105]
  • எம். விஜயன்[106]
  • பி.என்.விநாயசந்திரன்[107]
  • ரஜிந்தார் பால் வத்வா[108]
இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கே.சிவன்
சுதா மூர்த்தி, இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர்
ஆர் சிதம்பரம், முதன்மை விஞ்ஞான ஆலோசகராக இருந்த இந்திய அரசு

குறிப்பிடத்தக்க ஆசிரியர்கள்

இரண்டு முன்னாள் இயக்குநர்களான ச. வெ. ராமன் மற்றும் சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ் ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமை விருதான பாரத் ரத்னா வழங்கப்பட்டுள்ளது.[109] நான்கு முன்னாள் இயக்குநர்கள், சர் ஏ.ஜி.போர்ன், சர் மார்ட்டின் ஓ. பார்ஸ்டர், சி.வி.ராமன் மற்றும் ஜே.சி. கோஷ் ஆகியோருக்கு சர் பட்டம் வழங்கி மதிப்புச் செய்யப்பட்டுள்ளனர்.[110][111] முன்னாள் மாணவர்களில், மூவர் ரோட்ஸ் ஆய்வு அறிஞர்களாகவும், ராயல் சொசைட்டியில் பலர் உறுப்பினர்களாகவும் மற்றும் இந்திய மற்றும் வெளிநாட்டு அறிவியல் கழகங்களில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களாக உள்ளனர். நூற்றுக்கணக்கான ஐ.ஐ.எஸ்.சி ஆசிரிய உறுப்பினர்கள் 45 வயதிற்குட்பட்ட சிறப்பான பங்களிப்புகளைச் செய்தற்காக இந்தியர்களுக்கு வழங்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருதினைப் பெற்றுள்ளனர். இந்த சாதனைகள் இருந்தபோதிலும், இந்திய அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் மாணவர் அல்லது பணியாற்றும் ஆசிரிய உறுப்பினர் நோபல் பரிசு அல்லது பீல்ட்ஸ் பதக்கத்தை வென்றதில்லை, இருப்பினும் சி.வி.ராமன் நிறுவனத்தின் முதல் இந்திய இயக்குநராக மாறுவதற்கு முன்பு நோபல் பரிசு பெற்றவராவார். 

  • பேரூர் இராதாகாந்த அடிகா[112]
  • பத்மநாபன் பலராம்[113]
  • தீபாங்கர் பானர்ஜி[114]
  • கணபதி சங்கர் பட்[115]
  • சாந்தணு பட்டாச்சார்யா[116]
  • விவேக் போர்கர்[117]
  • துசார் காந்தி சக்ரவர்த்தி[118]
  • அகில் ரஞ்சன் சக்கரவர்த்தி[119]
  • தீப்சிகா சக்ரவர்த்தி[120]
  • நாகசுமா சந்திரா[121]
  • ஜெயராமன் சந்திரசேகர்[122]
  • சிறீனிவாசன் சந்திரசேகர்[123]
  • காமனியோ சட்டோபாத்யே[124]
  • அடூல் சாக்‌ஷி[125]
  • சமுத்திரா தாசு[126]
  • தேவதாசு தேவபிரபாகரா[127]
  • பேட்ரிக் டி சில்வா[128]
  • கே. ஆர். கே. ஈசுவரன்[129]
  • கில்பர்ட் ஜான் பொளர்[130]
  • உரோகிணி காட்போலே[131]
  • பாலசுப்பிரமணியன் கோபால்[132]
  • நாராயணசாமி ஜெயராமன்[133]
  • சந்தா ஜாக்[134]
  • கெளசால் கிஷோர்[135]
  • எச். ஆர். கிருஷ்ணமூர்த்தி[136]
  • அணுராக் குமார்[137]
  • நரேந்திர குமார்[138]
  • ராஜீந்தர் குமார்[139]
  • விசுவநாதன் குமரன்[140]
  • உதய மைத்ரி[141]
  • நீலேசு பி. மேத்தா[142]
  • பிரமோத் சதாஷோ மோஹரிர்[143]
  • நுக்கேஹாலி ரகுவீர் முடுகால்[144]
  • கோவிந்தசாமி முகேசு[145]
  • பார்தசாரதி முக்கர்ஜி[146]
  • மனோகர் லால் முன்ஜால்[147]
  • காலப்பா முனியப்பா[148]
  • வி. நாகராஜா[149]
  • இராமநாதன் நரசிம்மன்[150]
  • ரோத்தம் நரசிம்மா[151]
  • ரிஷிகேசு நாராயணன்[152]
  • அபூர்வா டி பட்டேல்[153]
  • பேட்ரிக் டி சில்வா[154]
  • அலோக் பால்[87]
  • சுனில் குமார் போடர்[155]
  • ஈ எசு ராஜ கோபால்[156]
  • அசோக் எம் ரெய்ச்சூர்[157]
  • வைத்தீசுவரன் இராஜாராமன்[158]
  • ஜி. என். இராமச்சந்திரன்[159]
  • சுப்ரமணியன் இராமகிருஷ்ணன்[160]
  • ச. வெ. இராமன்[161]
  • சூரியநாராயணசாஸ்திரி ராமசேஷா[162]
  • சிவராஜ் ராமசேசன்[163]
  • ஸ்ரீராம் ராமசாமி[164]
  • பி. என். இரங்கராஜன்[165]
  • சிறீனிவாசன் சம்பத்[166]
  • கல்யாண ஜகனாத் ராவ்[167]
  • சி. என். ஆர். ராவ்[168]
  • என். இரவிசங்கர்[169]
  • தீபாங்கர் தாஸ் சர்மா[170]
  • வி. சசிசேகரன்[171]
  • எஸ். கே. சதீஷ்[172]
  • க. சேகர்[173]
  • விஜய் பாலகிருஷ்ண செனாய்[174]
  • அமித் சிங்[175]
  • அனிடா சின்கா[176]
  • கிரிடியுஞை பிரசாத் சின்ஹா[177]
  • கைலாசவடிவு சிவன்
  • குமாரவேல் சோமசுந்தரம்[178]
  • அஜய் சூட்[179]
  • அடுசுமிலி ஸ்ரீகிருஷ்ணா[180]
  • ஜி. எஸ். ஆர். சுப்பா ராவ்[181]
  • யுத்பல் எஸ் டட்டு[182]
  • சுந்தரம் தங்கவேலு[183]
  • சிவா உமாபதி[184]
  • கிரிதர் சென்னை[185]
  • இராகவன் வரதராஜன்[186]
  • சுதிர் குமார் வெம்பதி[187]
  • எம். விஜயன்[188]
  • பி. என். விநாயசந்தரன்[189]
  • சந்தியா ஸ்ரீகாந் விசிவேரய்யா[190]

கல்வி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புகள்

இந்திய அறிவியல் நிறுவனம், இந்திய தளவாடத் தொழிற்சாலைகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, இந்திய விண்வெளி ஆய்வு மையம், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி, தேசிய விண்வெளி ஆய்வகங்கள், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், தகவல் தொழில்நுட்பத் துறை (இந்திய அரசு), மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் போன்ற பல்வேறு அரசு நிறுவனங்களுடன் கூட்டு ஒத்துழைப்புடன் செயல்படுகிறது . மேலும் இஅக தனியார் தொழில் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் ஆசிரிய, மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களின் முயற்சிகளை தீவிரமாக ஊக்குவிக்கிறது மற்றும் ஆதரிக்கிறது. ஸ்ட்ராண்ட் உயிர் அறிவியல் மற்றும் இட்டியம் ஆகியவை இந்த முயற்சியில் சில வெற்றிகளைப் பெற்றுள்ளது. மார்ச் 2016இல், இந்திய அறிவியல் கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அறிவியல் மையத்தின் தொடக்கமானது, உலகின் முதல் உணவு தர டி.என்.ஏ / ஆர்.என்.ஏ கறையை உருவாக்கியது. இது எச்.ஐ.வி போன்ற நிலைமைகளைக் கண்டறிய எடுக்கப்படும் நேரத்தை தற்போது 45 நாட்களிலிருருந்து வெகுவாக குறைக்கலாம்.[191]

மாணவர் செயல்பாடுகள்

பிரவேகா என்பது பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் ஆண்டு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார விழாவாகும். இந்திய அறிவியல் நிறுவனத்தின் இளங்கலை மாணவர்களால் 2013 இல் தொடங்கப்பட்ட இந்த விழா பொதுவாக ஜனவரி மூன்றாவது வார இறுதியில் நடைபெறும்.[192] மேல்நிலைப் பள்ளி மற்றும் இளங்கலை கல்லூரி மாணவர்களுக்கான வருடாந்திர தேசிய அறிவியல் முகாமாக இது நடைபெறுகிறது.[193]

இந்திய அறிவியல் கழகம் பல விளையாட்டு அணிகளைக் கொண்டுள்ளது. இதில் முக்கியமானது துடுப்பாட்டம், கால்பந்து,பூபந்து[194] மற்றும் கைப்பந்து அணிகளாகும். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல போட்டிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்கின்றார்கள்.[195]

டிசம்பர் 2005 பயங்கரவாத தாக்குதல்

28 டிசம்பர் 2005அன்று, இரண்டு பயங்கரவாதிகள் இந்திய அறிவியல் கழக வளாகத்திற்குள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். ஐஐடி டெல்லியைச் சேர்ந்த பேராசிரியர் முனிஷ் சந்தர் பூரி இந்த தாக்குதலில் இறந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.[196][197]

முன்னாள் மாணவர் சங்கங்கள்

இந்திய அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைமையக பெங்களூரில் உள்ளது.[198] அமெரிக்கா (IISCAANA) உட்படப் பல நாடுகளில் இதன் கிளைகள் உள்ளன.[199] சமீபத்தில் தலைமைச் சங்கத்துடன் கிளைச் சங்கங்கள் சில மோதல்களில் ஈடுபட்டுள்ளன.[200] இந்திய அறிவியல் கழகம் சாராத பட்டதாரிகளை மேனாள் சங்கத்தின் உறுப்பினர்களாக அனுமதிக்கச் சிலர் மேற்கொண்ட முயற்சிகள் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே முன்னாள் மாணவர் சங்கத்தில் உறுப்பினர் தகுதிக்காக இந்நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஒரு பருவ படிப்பினை முடித்திருக்க வேண்டும் என விதி தெரிவிக்கின்றது.[201]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்