இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (இ. தொ. க) (Indian Institutes of Technology, IITs) இந்திய நாடாளுமன்றத்தினால் நிறுவப்பட்டு, நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல், நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட கல்விநிலையங்கள். முதலில் இந்தியாவில் கரக்பூர், பம்பாய் (இப்பொழுது மும்பை), கான்ப்பூர், மதராசு (இப்பொழுது சென்னை), தில்லி ஆகிய ஐந்து இடங்களில் நிறுவப்பட்டன. இப்பொழுது இவை பதிமூன்று தன்னாட்சி பெற்ற கல்விக்கூடங்களாக விளங்குகின்றன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலையான பின்னர் இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக ஒரு திறமைமிக்க மனிதவளத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடன் அறிவியலாளர்களையும் பொறியாளர்களையும் உருவாக்க இக் கழகங்கள் உருவாயின.இதனை உலக தரத்தில் உருவாக்க முதல் கல்வி அமைச்சரானஅபுல் கலாம் ஆசாத்அவர்களால் உருவாக்கப்பட்டது. பொதுவான பேச்சு மொழியில் இவை ஐ.ஐ.டி எனவும் இவற்றில் படித்தவர்கள் ஐ.ஐ.டியர் எனவும் விளிக்கப்படுகிறது.

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் is located in இந்தியா
சென்னை
சென்னை
புது தில்லி
புது தில்லி
கவுகாத்தி
கவுகாத்தி
கான்பூர்
கான்பூர்
கோராக்பூர்
கோராக்பூர்
மும்பை
மும்பை
ரூர்கி
ரூர்கி
வாரணாசி
வாரணாசி
புவனேசுவர்
புவனேசுவர்
காந்திநகர்
காந்திநகர்
ஹைதராபாத்
ஹைதராபாத்
இந்தூர்
இந்தூர்
ஜோத்பூர்
ஜோத்பூர்
மாண்டி
மாண்டி
பாட்னா
பாட்னா
ரோபார்
ரோபார்
பாலக்காடு
பாலக்காடு
பாஞ்சிம்
பாஞ்சிம்
ராய்பூர்
ராய்பூர்
திருப்பதி
திருப்பதி
சம்மு
சம்மு
தான்பாத்
தான்பாத்
ஐ.ஐ.டி அமைவிடங்கள். 18 செயல்படும் ஐஐடி (பச்சை). 4 திட்டமிடப்பட்ட ஐஐடி (ஊதா)
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்
வகைபொதுப் பல்கலைகழகம்
அமைவிடம்
இந்தியாவில் 18 இடங்களில்

இக் கழகங்கள் தொடங்கிய வரிசையில் அமைக்கப்பட்டுள்ள இடங்கள்: கரக்பூர் (1950; இ. தொ.கவாக 1951[1]), மும்பை (1958), சென்னை (1959), கான்பூர் (1959), தில்லி (1961; இ. தொ.கவாக 1963), குவகாத்தி (1994), ரூர்க்கி (1847; இ. தொ.க-வாக 2001), புவனேசுவர் (2008), காந்திநகர் (2008), ஐதராபாத் (2008), பட்னா (2008), பஞ்சாப் (2008) மற்றும் இராசத்தான் (2008).

இந்திய அரசு மேலும் மூன்று இ.தொ.கழகங்களை இந்தூர், மண்டி, மற்றும் (பனாரசு இந்து பல்கலைக்கழகத்தை மாற்றி) வாரணாசி ஆகிய இடங்களில் திறக்க அறிவித்துள்ளது. சில இ.தொ.கழகங்கள் யுனெசுக்கோ, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் சோவியத் கூட்டமைப்பு பண மற்றும் நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இ.தொ.கவும் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகம்; மற்றவற்றுடன் ஒரு பொது இ.தொ.க அவையால் இணைக்கப்பட்டுள்ளன. இவ் அவை ஆட்சிப் பொறுப்புகளை மேற்பார்வை இடுகின்றது.

இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு மூலம் இவற்றின் பட்டப்படிப்பு நுழைவு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. ஓர் ஆண்டில் ஏறத்தாழ 4000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பட்டமேற்படிப்பிற்கான மாணவர்கள் மேற்கொள்ளவிருக்கும் துறையினைப் பொறுத்து பட்டதாரி பொறியியல் நாட்டம் தேர்வு (GATE), JMET, JAM மற்றும் CEED மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பட்டபடிப்பில் ஏறத்தாழ 15,500 மாணவர்களும் பட்டமேற்படிப்பில் 12,000 மாணவர்களும் இந்தக் கழகங்களில் படிக்கின்றனர். தவிர ஆய்வு செய்யும் முனைவர்பட்ட மாணவரும் உள்ளனர். இ.தொ.க முன்னாள் மாணவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அவர்களது பணி அமெரிக்க காங்கிரசினால் பாராட்டப்பட்டுள்ளது.[2]

பெயர்சுருக்கம்தொடங்கிய ஆண்டுநகரம்மாநிலம்/பிரதேசம்
தற்போதைய ஐஐடிகள்:
இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்IITKGP1951கரக்பூர்மேற்கு வங்காளம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பைIITB1958மும்பைமகாராட்டிரம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னைIITM1959சென்னைதமிழ்நாடு
இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்IITK1959கான்பூர்உத்தரப் பிரதேசம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லிIITD1963புது தில்லிபுது தில்லி
இந்திய தொழில்நுட்பக் கழகம் குவகாத்திIITG1994குவஹாத்திஅசாம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கிIITR2001ரூர்க்கிஉத்தராகண்டம்
புதிய ஐஐடிகள்:
இந்திய தொழில்நுட்பக் கழகம் பஞ்சாப்IITRPR2008ருப்நகர்பஞ்சாப்
இந்திய தொழில்நுட்பக் கழகம் புவனேசுவர்IITBBS2008புவனேசுவர்ஒடிசா
இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாத்IITH2008ஐதராபாத்ஆந்திரப் பிரதேசம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகர்IITGN2008காந்தி நகர்குசராத்
இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னாIITP2008பட்னாபீகார்
இந்திய தொழில்நுட்பக் கழகம் இராச்சசுத்தான்IITJ2008சோத்பூர்இராச்சசுத்தான்
இந்திய தொழில்நுட்பக் கழகம் மண்டிIIT Mandi2009மண்டிஇமாசலப் பிரதேசம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்தூர்IITI2009இந்தோர்மத்தியப் பிரதேசம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசிIITBHU1916வாரணாசிஉத்தரப் பிரதேசம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் தன்பாத்IIT (ISM)2015இந்தோர்மத்தியப் பிரதேசம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் பாலக்காடுIIT-PKD2015பாலக்காடுகேரளா
இந்திய தொழில்நுட்பக் கழகம் திருப்பதிIIT-TP2015திருப்பதிஆந்திரப்பிரதேசம்

கலாச்சாரம் மற்றும் மாணவர் வாழ்க்கை

அனைத்து ஐஐடி மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் குடியிருப்பு வசதிகள் வழங்கப்படும். மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக விடுதிகளில் தான் தங்கவேண்டும் என்பது நிபந்தனை. அனைத்து ஐஐடி மாணவர்களும் தங்களது முதலாம் ஆண்டுகளில் தேசிய மாணவர்படை, தேசிய சேவை திட்டம் மற்றும் தேசிய விளையாட்டு அமைப்பு ஆகிய ஏதேனும் ஒன்றை தேர்ந்தேயாக வேண்டும்[3]. அனைத்து ஐஐடிக்களிலும் கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, டென்னிஸ், பேட்மின்டன், மற்றும் தடகள விளையாட்டு ஆகியவைக்கான மைதானம் அமைந்துள்ளது. மேலும் விடுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைந்துள்ளது.

கலாச்சார மற்றும் தொழில்நுட்ப திருவிழாக்கள்

இந்தியா முழுவதிலுமுள்ள இந்திய தொழில்நுட்ப கழகங்களில் நடைபெறும் கலாச்சார மற்றும் தொழில்நுட்ப திருவிழாக்களின் பட்டியல்.

கழகத்தின் பெயர்புகைப்படம்சுருக்கமாகஅமைவிடம்மாநிலம்கலாச்சார திருவிழாக்கள்தொழில்நுட்ப திருவிழாக்கள்
பெயர்துவங்கிய நாள்பெயர்துவங்கிய நாள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி IIT(BHU)வாரணாசிஉத்தரப் பிரதேசம்க்ஷத்திரியா1982டெக்நெக்ஸ்1939
இந்திய தொழில்நுட்பக் கழகம் புவனேசுவர் IITBBSபுவனேசுவர்ஒடிசாஅல்மா ஃபெஸ்தா2009விசநயர்Wissenaire2010
இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பைIITBமும்பைமகாராட்டிரம்மூது இந்திகோ1971டெக் ஃபெஸ்ட்1998
இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி IITDபுது தில்லிபுது தில்லிரெந்தேசுவாஸ்1976த்ரைஸ்ட்1992
இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகர் IITGNகாந்தி நகர்குசராத்பிலிதச்ரான்அமல்தியா2010
இந்திய தொழில்நுட்பக் கழகம் குவகாத்தி IITGகுவஹாத்திஅசாம்அல்செரிங்கா1996டெக்னிச்1999
இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாத் IITHஐதராபாத்தெலுங்கானாஇளான்2009ந'விஷன்2011
இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்தூர் IITIஇந்தோர்மத்தியப் பிரதேசம்ஃப்ளுக்ஸ்2011
இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் IITKகான்பூர்உத்தரப் பிரதேசம்[அந்தராகினி1966டெக்கிரித்திTechkriti1995
இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் IITKGPகரக்பூர்மேற்கு வங்காளம்ஸ்பிரிங் ஃபெஸ்ட்1960க்சிதிஜி2004
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னைIITMசென்னைதமிழ்நாடுசாரங்1974சாஸ்த்ரா2000
இந்திய தொழில்நுட்பக் கழகம் மண்டிIIT Mandiமண்டிஇமாசலப் பிரதேசம்எக்ஸோடியா2012எக்ஸோடியா2012
இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா பட்னாபீகார்அன்வேசா2009அன்வேசா2009
இந்திய தொழில்நுட்பக் கழகம் இராச்சசுத்தான் IITJசோத்பூர்இராச்சசுத்தான்இக்னஸ்2009தாக்சா2009
இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி IITRரூர்க்கிஉத்தராகண்டம்தோம்சோ1988க்கு முன்னர்Cognizance2003
இந்திய தொழில்நுட்பக் கழகம் பஞ்சாப் IITRPRருப்நகர்பஞ்சாப்செயிட்கெயிஸ்ட்2010
இந்திய தொழில்நுட்பக் கழகம் ஜார்கண்ட்IIT-ISMதன்பாத்ஜார்கண்ட்2015
இந்திய தொழில்நுட்பக் கழகம் கேரளாIIT-PKDபாலக்காடுகேரளா2015
இந்திய தொழில்நுட்பக் கழகம் திருப்பதிIIT-TPதிருப்பதிஆந்திரப்பிரதேசம்2015

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை