பாரத ரத்னா

இந்திய மாமணி[1] (பாரத ரத்னா) இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டிப் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு(2013) மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும், இவ்விருதைப் பெரும் வகையில் நவம்பர், 2011-இல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.[2] இவ்விருது பெற்றவர்களுக்குச் சிறப்புப் பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் முன்னுரிமை வரிசை பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.

இந்திய மாமணி
பாரத ரத்னா
வகைகுடியியல் விருது
நாடு இந்தியா
வழங்குபவர்State Emblem of Indiaஇந்தியக் குடியரசுத் தலைவர்
நாடா
முகப்புஅரச மர இலையில், சூரியனின் உருவமும், "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
பின்புறம்அரச மர இலையில், தேசிய சின்னமும், "சத்தியமேவா ஜெயதே" (உண்மை மட்டும் வெற்றி பெறுகிறது) என்ற சொல் தேவநாகரி எழுத்துகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
நிறுவப்பட்டது1954; 70 ஆண்டுகளுக்கு முன்னர் (1954)
முதலில் வழங்கப்பட்டது1954
கடைசியாக வழங்கப்பட்டது2024
மொத்தம்48
முன்னுரிமை
அடுத்தது (உயர்ந்த)ஒன்றுமில்லை
அடுத்தது (குறைந்த) பத்ம விபூசண்

இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துகளும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்துக் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.

1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955-ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. அதன் பின் பத்து பேர்களுக்கு அவர்களின் மறைவிற்கு பின் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும், அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது. இவரைத்தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கப்பார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992-இல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்குப் பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாகத் திரும்பப் பெறப்பட்டது.

விருதுக்கு தேர்வு முறை

பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்படுவது என்பது பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்படுவதில் இருந்து மாறுபடுகிறது. இதில் பாரத ரத்னா விருதை இன்னாருக்கு வழங்கலாம் என்ற பரிந்துரையை குடியரசு தலைவருக்கு பிரதமர் செய்வார்.

சாதி, தொழில், பதவி அல்லது பாலினம் ஆகிய பாகுபாடின்றி எந்த ஒரு நபரும் இந்த விருதுக்கு தகுதியானவராக கருதப்படுவார். குறிப்பிட்ட ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 3 நபர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம். அதேவேளையில், ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.பாரத ரத்னா விருது பெறுவோர் குறித்த அதிகாரபூர்வ தகவல் இந்திய அரசிதழில் வெளியிடுவதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இந்த விருது சனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தின்போது வழங்கப்படுகிறது.

விருது பயன்பாட்டு விதிகள்

  • விதி 18 (1)-இன்படி விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது.
  • அவசியம் கருதினால் “பாரத ரத்னா விருதைப் பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.[3][4]

பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கான சலுகைகள்

பாரத ரத்னா விருது பெறுவோருக்கு அதற்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்படும். பணம் ஏதும் வழங்கப்படாது.விருதை பெற்றவர்களுக்கு அரசு துறைகள் சார்பாக சில வசதிகள் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பாரத ரத்னா பெற்றவர்களுக்கு ரயில்வே துறை சார்பில் இலவச பயணத்துக்கான வசதி வழங்கப்படுகிறது. அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். முன்னுரிமை வரிசையில் இவர்களை அரசாங்கம் வைக்கும். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், குடியரசு முன்னாள் தலைவர், துணைப் பிரதமர், தலைமை நீதிபதி, மக்களவைத் தலைவர், மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்படும்.இதேபோல், மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு சில சிறப்பு வசதிகளை வழங்கும்.[5]

விருது பெற்றோர் பட்டியல்

வண்ணங்களுக்கான குறியீடு
   + வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகன்/குடிமகள் ஆனவர்
   * இந்தியர் அல்லாதவர்
   # மறைவுக்குப் பின்
பாரத ரத்னா விருது பெற்றோர் பட்டியல்[6]
ஆண்டுபடம்பெயர்மாநிலம் / நாடுபிரதமர் / கட்சிகுறிப்புகள்
1954 சி. ராஜகோபாலாச்சாரிதமிழ்நாடுஜவகர்லால் நேரு, இதேகாஇந்திய விடுதலைப் போராட்ட வீரர், விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் மற்றும் கடைசி தலைமை ஆளுநர்[7]
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்தமிழ்நாடுஜவகர்லால் நேரு, இதேகாதத்துவஞானியும், விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவர்.[8][9] 1962 முதல், செப்டம்பர் 5 ஆம் தேதி இவரது பிறந்த நாள் இந்தியாவில் "ஆசிரியர் தினம்" என்று அனுசரிக்கப்படுகிறது.[10]
சி. வி. இராமன்தமிழ்நாடுஜவகர்லால் நேரு, இதேகாஇயற்பியலுக்கான நோபல் பரிசு (1930) பெற்றவர்.[11]
1955 பகவான் தாஸ்உத்தரப் பிரதேசம்ஜவகர்லால் நேரு, இதேகாஇறை மெய்யியலாளர் மற்றும் அரசியல்வாதி[12]
விசுவேசுவரய்யாகருநாடகம்ஜவகர்லால் நேரு, இதேகாபொறியாளர், மைசூர் திவான் (1912–1918).[13]
ஜவகர்லால் நேருஉத்தரப் பிரதேசம்ஜவகர்லால் நேரு, இதேகாஇந்தியாவின் முதல் பிரதமர்.[14][15]
1957 கோவிந்த் வல்லப் பந்த்உத்தராகண்டம்ஜவகர்லால் நேரு, இதேகாஇந்திய விடுதலைப் போராட்ட வீரர், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சர் (1950–1954).[16]
1958 தோண்டோ கேசவ் கார்வேமகாராட்டிரம்ஜவகர்லால் நேரு, இதேகாசமூக சீர்திருத்தவாதி.
1961 பிதான் சந்திர ராய்மேற்கு வங்காளம்ஜவகர்லால் நேரு, இதேகாமருத்துவர், விடுதலை இயக்க போராளி, மேற்கு வங்காள மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சர் (1948–62).[17] அவர் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வராக இருந்தார் (1948–62) மற்றும் ஜூலை 1 அன்று அவரது பிறந்த நாள்., இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.[18]
புருசோத்தம் தாசு தாண்டன்உத்தரப் பிரதேசம்ஜவகர்லால் நேரு, இதேகாஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்.[19]
1962 இராஜேந்திரப் பிரசாத்பீகார்ஜவகர்லால் நேரு, இதேகாஇந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் (1950–62).[20]
1963 ஜாகீர் உசேன்ஆந்திரப் பிரதேசம்ஜவகர்லால் நேரு, இதேகாஇந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் துணைத் தலைவர் (1962–67), இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் (1967–69).[21]
பாண்டுரங்க வாமன் காணேமகாராட்டிரம்ஜவகர்லால் நேரு, இதேகாஇந்தியவியலாளர், சமசுகிருத அறிஞர்[22]
1966 லால் பகதூர் சாஸ்திரி[i]#உத்தரப் பிரதேசம்இந்திரா காந்தி,
இதேகா
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் மூன்றாவது பிரதமர் (1964–66),[23][14][24]
1971 இந்திரா காந்திஉத்தரப் பிரதேசம்இந்திரா காந்தி,
இதேகா
"இந்தியவின் இரும்பு பெண்" என்று அழைக்கப்படுகிறார்,[25][14] முன்னாள் இந்தியப் பிரதமர் (1966–77, 1980–84). இந்த விருதைப் பெறும் போது இவரே, இந்தியப் பிரதமராக இருந்தார்.
1975 வி. வி. கிரிஒடிசாஇந்திரா காந்தி,
இதேகா
தொழிற்சங்கவாதி, இந்தியாவின் முதல் தற்காலிக குடியரசுத் தலைவர், இந்தியாவின் நான்காவது குடியரசுத் தலைவர் (1969–74).[8][26][27]
1976 கு. காமராஜ்[ii]#தமிழ்நாடுஇந்திரா காந்தி,
இதேகா
"பெருந்தலைவர்" என்று அழைக்கப்படுபவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், நேருவின் மரணத்திற்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரியையும், சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியையும் இந்தியப் பிரதமர் ஆக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர். அவர் 1954 மற்றும் 1963 க்கு இடையில் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அவர் இந்திய அரசியல் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் (அமைப்பு) நிறுவனர் ஆவார்.[28][29]
1980 அன்னை தெரேசா +மேற்கு வங்காளம்
(பிறப்பு ஸ்கோப்ஜே,
தற்போது வடக்கு மக்கெதோனியா)
இந்திரா காந்தி,
இதேகா
உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி, பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார், அமைதிக்கான நோபல் பரிசு (1979) பெற்றவர்.[30]
1983 ஆச்சார்யாவினோபா பாவே[iii]#மகாராட்டிரம்இந்திரா காந்தி,
இதேகா
இந்திய அறப்போராளி, மனித உரிமைகள் ஆதரவாளர், ரமோன் மக்சேசே விருது (1958) பெற்றவர்.[31][32]
1987 கான் அப்துல் கப்பார் கான்*பாக்கித்தான்ராஜிவ் காந்தி,
இதேகா
விடுதலைப் போராட்ட வீரர்.[33]
1988 எம். ஜி. இராமச்சந்திரன்[iv][a]#தமிழ்நாடுராஜிவ் காந்தி,
இதேகா
"புரட்சித் தலைவர்" என்று அழைக்கப்படும் நடிகர் இராமச்சந்திரன், இந்திய வரலாற்றில் மாநிலத்தின் முதலமைச்சரான முதல் நடிகர் ஆவார். அவர் 1977 மற்றும் 1987க்கு இடையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அவர் இந்திய அரசியல் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஆவார்.[28]
1990 பி.ஆர் அம்பேத்கர்[v]#மகாராட்டிரம்வி. பி. சிங், ஜனதா தளம் (தே.மு)"இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய சிற்பி",இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவர், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சமூக சீர்திருத்தவாதி[35][36][37]
நெல்சன் மண்டேலா*தென்னாப்பிரிக்காவி. பி. சிங், ஜனதா தளம் (தே.மு)தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவர், தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு (1993) பெற்றவர்.[38]
1991 ராஜீவ் காந்தி[vi]#உத்தரப் பிரதேசம்பி. வி. நரசிம்ம ராவ், இதேகாஇந்தியாவின் ஆறாவது பிரதமர் (1984–89)[14]
சர்தார் வல்லபாய் பட்டேல்[vii]#குசராத்துபி. வி. நரசிம்ம ராவ், இதேகா"இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று பரவலாக அறியப்படுகிறார்,[39] இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் துணை பிரதமர் (1947–50) மற்றும் உள்துறை அமைச்சராகவும் (1948–1950) இருந்தவர்.[40][41]
மொரார்ஜி தேசாய்[b]குசராத்துபி. வி. நரசிம்ம ராவ், இதேகாஇந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் ஆறாவது பிரதமர் (1977–79).[14][43] இவர் இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து வராத முதல் இந்தியாவின் பிரதமர் ஆவார்.
1992 அபுல் கலாம் ஆசாத்[viii][c]#மேற்கு வங்காளம்பி. வி. நரசிம்ம ராவ், இதேகாஇந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்தார் மற்றும் இலவச தொடக்கக் கல்வியை நோக்கி பணியாற்றினார். இவர் "மவுலானா ஆசாத்" என்று பரவலாக அறியப்பட்டார், நவம்பர் 11 அன்று இவரது பிறந்த நாள், இந்தியாவில் தேசிய கல்வி தினம் என அனுசரிக்கப்படுகிறது.[47]
ஜே. ஆர். டி. டாட்டாமகாராட்டிரம்பி. வி. நரசிம்ம ராவ், இதேகாஇந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர், இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடி.[48]
சத்யஜித் ராய்மேற்கு வங்காளம்பி. வி. நரசிம்ம ராவ், இதேகாதிரைப்பட மேதை, ரமோன் மக்சேசே விருது (1967) பெற்றவர்.[49] 1984 ஆம் ஆண்டில், ராய்க்கு தாதாசாகெப் பால்கே விருது வழங்கப்பட்டது, இது சினிமாவில் இந்தியாவின் மிக உயர்ந்த விருது.[50]
1997 குல்சாரிலால் நந்தாபஞ்சாப்ஐ. கே. குஜரால், ஜனதா தளம் (ஐமு)இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொருளாதார அறிஞர், இந்தியாவின் இடைக்காலப் பிரதமராக இரண்டு முறை பதவிவகித்தவர்.[14][51]
அருணா ஆசஃப் அலி[ix]#அரியானாஐ. கே. குஜரால், ஜனதா தளம் (ஐமு)இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலர்.[52]
ஏ. பி. ஜே. அப்துல் கலாம்தமிழ்நாடுஐ. கே. குஜரால், ஜனதா தளம் (ஐமு)இந்திய அறிவியலாளர், இந்தியாவின் பதினோறாவது குடியரசுத் தலைவர் (2002–07).[53]
1998 எம். எஸ். சுப்புலட்சுமிதமிழ்நாடுஐ. கே. குஜரால், ஜனதா தளம் (ஐமு)கருநாடக இசைப் பாடகி, ரமோன் மக்சேசே விருது (1974) பெற்றவர்.[54]
சி. சுப்பிரமணியம்தமிழ்நாடுஐ. கே. குஜரால், ஜனதா தளம் (ஐமு)இந்தியாவின் உணவு மற்றும் விவசாய அமைச்சர் (1964–66), இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு வித்திட்டவராக அறியப்படுபவர்.[55]
1999 ஜெயபிரகாஷ் நாராயண்[x]#பீகார்அடல் பிஹாரி வாஜ்பாய், பாஜகஇந்திய விடுதலைப் போராட்ட வீரர், சமூகப் பணியாளர், ரமோன் மக்சேசே விருது (1965) பெற்றவர்.[56]
அமர்த்தியா சென்மேற்கு வங்காளம்அடல் பிஹாரி வாஜ்பாய், பாஜகபொருளாதார அறிஞர், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு (1998) பெற்றவர்.[57][58]
கோபிநாத் போர்டோலாய்[xi]#அசாம்அடல் பிஹாரி வாஜ்பாய், பாஜகஇந்திய விடுதலைப் போராட்ட வீரர், அசாம் மாநில முதல் முதலமைச்சர் (1946–50).[59]
ரவி சங்கர்உத்தரப் பிரதேசம்அடல் பிஹாரி வாஜ்பாய், பாஜகஇந்துஸ்தானி சித்தார் இசைக்கலைஞர்.[60]
2001 லதா மங்கேஷ்கர்மகாராட்டிரம்அடல் பிஹாரி வாஜ்பாய், பாஜகபின்னணிப் பாடகர்[61]
பிஸ்மில்லா கான்பீகார்அடல் பிஹாரி வாஜ்பாய், பாஜகஇந்துஸ்தானி ஷெனாய் இசைக்கலைஞர்.[62]
2009 பீம்சென் ஜோஷிகருநாடகம்மன்மோகன் சிங், இதேகாஇந்துஸ்தானி குரலிசைப் பாடகர்.[63][64]
2014 சி. என். ஆர். ராவ்கருநாடகம்மன்மோகன் சிங், இதேகாவேதியியலாளர்.[65]
சச்சின் டெண்டுல்கர்மகாராட்டிரம்மன்மோகன் சிங், இதேகாஇந்தியத் துடுப்பாட்ட வீரர்.[66][67]
2015 மதன் மோகன் மாளவியா[xii]#உத்தரப் பிரதேசம்நரேந்திர மோதி, பாஜககல்வியாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக நான்கு முறை பொறுப்பாற்றியவர் (1909–10; 1918–19; 1932 மற்றும் 1933).[68]
அடல் பிகாரி வாஜ்பாய்மத்தியப் பிரதேசம்நரேந்திர மோதி, பாஜககவிஞர், இந்தியாவின் பதினோறாவது பிரதமர் (1996; 1998–2004).[14][69]
2019 பிரணாப் முகர்ஜிமேற்கு வங்காளம்நரேந்திர மோதி, பாஜகமுன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
பூபேன் அசாரிகா[xiii]#அசாம்நரேந்திர மோதி, பாஜகதிரைப்படத்துறை, இலக்கியம் மற்றும் இசை
நானாஜி தேஷ்முக்[xiv]#மகாராட்டிரம்நரேந்திர மோதி, பாஜகநானாஜி தேஷ்முக் என்றும் அழைக்கப்படும் சண்டிகடாஸ் அமிர்தராவ் தேஷ்முக் (11 அக்டோபர் 1916–27 பிப்ரவரி 2010) இந்தியாவின் சமூக ஆர்வலர் ஆவார். கல்வி, சுகாதாரம், கிராமப்புற தன்னம்பிக்கை ஆகிய துறைகளில் பணியாற்றினார். அவர் பாரதிய ஜன சங்கத்தின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
2024 கர்ப்பூரி தாக்கூர்[xv]#பீகார்நரேந்திர மோதி, பாஜக

விளக்கக் குறிப்புகள்

மறைவுக்குப் பின் பெற்றவர்கள்

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாரத_ரத்னா&oldid=3880400" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை