இரவி சோப்ரா

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்

இரவி சோப்ரா ( Ravi Chopra ) (27 செப்டம்பர் 1946-12 நவம்பர் 2014) ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார். மகாபாரதம் (1988 ) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கியதற்காக நன்கு அறியப்பட்டவர்.

இரவி சோப்ரா
பிறப்பு(1946-09-27)27 செப்டம்பர் 1946
லாகூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு12 நவம்பர் 2014(2014-11-12) (அகவை 68)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
கல்விபுனித சேவியரின் கல்லூரி, மும்பை (இளங்கலை)
பணி
செயற்பாட்டுக்
காலம்
1969–2009
வாழ்க்கைத்
துணை
ரேணு (தி. 1975)
பிள்ளைகள்2

வாழ்க்கை.

இரவி சோப்ரா தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமான பி. ஆர். சோப்ராவின் மகனும், யஷ் சோப்ராவின் மருமகனும் ஆவார். ஆதித்யா சோப்ரா மற்றும் உதய் சோப்ரா ஆகியோர் இவரது உறவினர்களாவர்.

2008 ஆம் ஆண்டில் மும்பையில் 1957 ஆம் ஆண்டு வெளியான நயா தௌர் திரைப்படத்தின் மறு வெளியீட்டில் ரவி தனது தந்தை பி. ஆர். சோப்ரா (இடது மற்றும் மாமா யஷ் சோப்ரா)

1975 ஆம் ஆண்டு முதல் ரேணு என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தொலைக்காட்சி தொழில்

1988-1990 ஆம் ஆண்டில் ஒளிபரப்பப்பட்ட மிகவும் வெற்றிகரமான மகாபாரதம் எனும் தொலைக்காட்சித் தொடரையும் , 2002 இல் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி குறுந்தொடரான இராமாயணத்தையும் ரவி இயக்கியிருந்தர். பாகவதத்தை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு புராணம் மற்றும் மா சக்தி போன்ற புராண நிகழ்ச்சிகளையும் இயக்கினார். இவரது ஆப் பேட்டி என்ற தொலைக்காட்சித் தொடர் மிகவும் பிரபலமான ஒன்றாகும்

கதைத் திருட்டு சர்ச்சை

இரவி சோப்ரா இயக்கியிருந்த பந்தா யே பிந்தாஸ் ஹை என்ற படம் 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற திரைப்பட நிறுவனம் தனது தயாரிப்பான அகாதமி விருது பெற்ற மை கசின் வின்னி என்ற படத்தைத் திருடி வெளியிட்டதாக குற்றம் சாட்டி 2009 ஆம் ஆண்டில் ஒரு சட்ட அறிவிப்பை வழங்கியது.[1][2] சோப்ராவும் தயாரிப்பு நிறுவனமான பி. ஆர். பிலிம்சும் மே 2009 இல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் படத்தின் வெளியீடு ஜூன் 2009 வரை தாமதப்படுத்தப்பட்டது.[3][4]

20வது செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம், தங்கள் பட உரிமையை வாங்காமல் நகலெடுத்ததற்காக $14 லட்சம் இழப்பீடு கோரி பி. ஆர். பிலிம்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தது.[4][5] இறுதியில் படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து $200,000 பெற ஒப்புக்கொண்டது.[6] 2014 இல் ரவி சோப்ரா இறந்ததிலிருந்து, இது திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை.[7][8]

இறப்பு

நுரையீரல் புற்றுநோய் பாதிக்கப்பட்ட இரவி வேலூர், கிருத்தவ மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.[9] பின்னர்,12 நவம்பர் 2014 அன்று மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் தனது 68 வயதில் இறந்தார்.[10][11][12]

விருதுகள்

1985 ஆம் ஆண்டில், இரவி சோப்ரா தனது ஆஜ் கி ஆவாஜ் (1984) படத்திற்காக 32 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த இயக்குனருக்காக பரிந்துரைக்கப்பட்டார்.[13]

2004 ஆம் ஆண்டில், பாக்பன் (2003) படத்திற்காக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் மற்றும் ஸ்கிரீன் விருதுகளிலும் சிறந்த இயக்குனர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.[14][15]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இரவி_சோப்ரா&oldid=3914112" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்