உத்தோங்

அயூத்தியாவின் மன்னன்

உ-தோங் (Uthong0 [2] ( Uthong ) அல்லது முதலாம் ராமதிபோடி ( Ramathibodi I; 1314–1369) அயூத்தியா இராச்சியத்தின் (தற்போது தாய்லாந்தின் ஒரு பகுதி) முதல் மன்னர் ஆவார்.[3]:222 இவர் 1351[4] முதல் 1369 வரை ஆட்சி செய்தார். 1350 இல் அரியணை ஏறுவதற்கு முன்பு இளவரசர் உ-தோங் ("தங்க தொட்டில்" என்று பொருள்) என்று அழைக்கப்பட்டார். உ-தோங்கின் பின்னணியைப் பற்றி பல கோட்பாடுகள் உள்ளன. அதில் இவர் மாங்க்ராயின் வழித்தோன்றலாக இருக்கலாம் என்பதும் ஒன்றாகும்.[5]:27[6]

முதலாம் ராமதிபோடி
King of Ayutthaya
சுபன்புரி மாகாணத்தின் உதோங் மாவட்டத்லுள்ள மன்னர் முதலாம் ராமதிபோடியின் சிலை, தாய்லாந்து
அயூத்தியாவின் மன்னன்
ஆட்சிக்காலம்4 மார்ச் 1351[1]–1369
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னையவர்ராமேசன்
பிறப்பு10 மார்ச் 1314
இறப்பு1369
குழந்தைகளின்
பெயர்கள்
ராமேசன்
பெயர்கள்
உதோங்
முதலாம் ராமதிபோடி
மரபுஉதோங் வம்சம்_

வரலாறு

நன்கு அறியப்பட்ட ஆதாரத்தின்படி, டச்சுக்காரரான ஜெரேமியாஸ் வான் இவ்லியட்டின் பதினேழாம் நூற்றாண்டுக் கணக்கு, ஒரு புராணக்கதை, ரமாதபோடி ஒரு சீன இனத்தவர் என்றும், சீனாவிலிருந்து கப்பலில் வந்தவர் என்று கூறுகிறது. வர்த்தகத்தில் வெற்றி பெற்ற பிறகு, அயூத்தியா வரை பயணம் செய்வதற்கு முன், தாய்லாந்து வளைகுடாவின் கடலோர நகரமான பெட்சபுரி நகரத்தை ஆட்சி செய்யும் அளவுக்கு செல்வாக்கு பெற்றார் என்றும் கூறுகிறது.

இவர், உள்துறை அமைச்சகம் ( வீங் ), கருவூல அமைச்சகம் ( கிளாங் ), மன்னரின் குடும்பத்திற்கான அமைச்சகம் ( வாங் ) மற்றும் விவசாய அமைச்சகம் ( நா ) என்ற நான்கு பெரிய அரச அதிகாரங்களை நிறுவினார். தாய்லாந்திற்க்கான சட்டங்களையும் உருவாக்கினார். இறுதியாக, மிங் வம்சத்துடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார்.[5]:28

புதிய நகரமான அயூத்தியாவில் தனது சொந்த தலைநகரை நிறுவினார். இவரது ஆட்சியில் கோரட், சந்தபுரி, தாவோய், தெனாசெரிம் மற்றும் மலாயாவின் பெரும் பகுதிகள் அடங்கியிருந்தன.[5]:28

போர்

1352 இல் யசோதரபுரத்தை முற்றுகையிட்டார். அடுத்த ஆண்டு அவர் வெற்றியடைந்து தனது மகன்களில் ஒருவரை அரியணையில் அமர்த்தினார். இருப்பினும், அவர்களால் 1357 வரை மட்டுமே அரியணையை வைத்திருக்க முடிந்தது. கெமர்கள் அதை மீண்டும் கைப்பற்றினர்.[7]:236

மன்னன் ராமாதிபோடியின் மரணம் வாரிசுரிமை குறித்த மோதலைத் தூண்டியது. ஆரம்பத்தில், இவரது மகன் மன்னர் ராமேசன் அயூத்தியாவின் ஆட்சியாளரானார். ஆனால் பின்னர் தனது மைத்துனரான முதலாம் பொரோமராச்சாவிற்கு ஆதரவாக பதவி விலகினார். அரியணைக்கான இந்த மாற்றம் அமைதியானதாவோ அல்லது போரின் மூலமாகவோ நடந்திருக்கலாம்.[5]:29

சான்றுகள்

உசாத்துணை

இதனையும் பார்க்கவும்

முதலாம்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உத்தோங்&oldid=3817782" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை