உயரம்

உயரம் () என்பது ஒரு பொருளின் (மேசை, கட்டடம், மலை, மரம், கொடிக்கம்பம்) பரும அளவில் நிலப்பரப்புக்கு (செங்குத்தான) நிலைக்குத்துத் திசையில் அளக்கப்படும் தொலைவு ஆகும். முத்திரட்சி (முப்பரிமானம்) கொண்ட ஒரு பொருளின் பரும அளவை கிடைமட்டத் (தரையில் படுக்கை வாட்டில்) தளத்தில் இருக்கும் நீட்சியை (அல்லது அகற்சியை) நீளம் என்றும் அகலம் என்றும் குறிப்பிடப்படும். இவையும் கிடைமட்டத்தில் (படுக்கை வாட்டில்) ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருப்பவைதான். ஆனால் உயரம் என்பது கிடை மட்டத்தளத்தில் இருந்து செங்குத்தாக எழும் திசையில் உள்ள தொலைவு ("உயர்ச்சி") ஆகும். நீளம் என்னும் சொல் எத்திசையிலும் உள்ள தொலைவக் குறிக்கப் பொதுச்சொல்லாகவும் பயன்படுகின்றது என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும். இணைத்துள்ள படத்தில் நீளம், அகலம் உயரம் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன.

உயரம் பற்றி விளக்கும் படம்

விண்வெளியில் நிலப்பரப்பு என்று ஏதும் இல்லாததால், முத்திரட்சி கொண்ட ஒரு பொருளுக்கு ஒன்றுக்கொன்று செங்குத்தான முத்திசை நீட்சிகள் இருந்த போதிலும், உயரம் என்று சிறப்பித்துக் கூற எதுவும் இல்லை. மூன்று செங்குத்தான திசைகளில் நீளங்கள் குறிப்பிடலாம். நிலப்பரப்பில் புவி ஈர்ப்பு திசைக்கு நேர் எதிரான திசையில் விரியும் நீட்சியை உயரம் என்றழைக்கப்படும்.

இவற்றையும் பார்க்கவும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உயரம்&oldid=3874131" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை