ஐக்கிய நாடுகள் வியன்னா அலுவலகம்

ஐக்கிய நாடுகள் வியன்னா அலுவலகம் (United Nations Office in Vienna, UNOV) ஐக்கிய நாடுகள் அமைப்பின் பல்வேறு முகமைகள் ஒருங்கே அமைவிடம் கொண்டுள்ள நான்கு கட்டிட வளாகங்களில் ஒன்றாகும். இது ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் வியன்னா பன்னாட்டு மையத்தில் அமைந்துள்ளது. சனவரி 1, 1980ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அலுவலக வளாகம் ஐநாவின் இத்தகைய அலுவலகங்களில் மூன்றாவது ஆகும்.

வியன்னா பன்னாட்டு மையம் என்றழைக்கப்படும் வியன்னா, ஆத்திரியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம்

அங்கம் வகிக்கும் முகமைகள்

வியன்னாவைத் தலைநகராகக் கொண்டவை:

  • பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (தனது நிலை குறித்த சிறப்பு ஒப்பந்தம் கொண்டுள்ளது)
  • பன்னாட்டு பணச் சலவை தகவல் பிணையம்
  • பன்னாட்டு போதைப்பொருள் கட்டுப்பாடு வாரியம்
  • முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு அமைப்பிற்கான முன்னேற்பாடான ஆணையம்
  • ஐக்கிய நாடுகள் பன்னாட்டு வணிகச் சட்டத்திற்கான ஆணையம்
  • ஐக்கிய நாடுகள் தொழில் மேம்பாடு நிறுவனம்
  • விண்வெளி விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம்
  • ஐக்கிய நாடுகள் போதைமருந்துகள் மற்றும் குற்றங்கள் அலுவலகம்

வியன்னாவில் கிளைகளைக் கொண்டவை:

  • டான்யூப் ஆறு பாதுகாப்பிற்கான பன்னாட்டு ஆணையம்
  • அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்
  • ஐக்கிய நாடுகள் தகவல் சேவை
  • திட்டப்பணிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்
  • ஐக்கிய நாடுகளின் உள் மேற்பார்வை சேவைகளின் புலனாய்வு கோட்டம்
  • ஐக்கிய நாடுகளின் அஞ்சல் நிர்வாகம்
  • அணுக் கதிர்வீச்சு தாக்கம் குறித்தான ஐக்கிய நாடுகள் அறிவியல் குழு

மேலும் பார்க்க

வெளியிணைப்புகள்



🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை