ஐதரோபுளோரோகார்பன்

ஐதரோபுளோரோகார்பன்கள் (Hydrofluorocarbons) என்பவை புளோரின் மற்றும் ஐதரசன் அணுக்களைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்கள் ஆகும். பொதுவாக இவை கரிமபுளோரின் சேர்மங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. காற்றுப் பதனப்படுத்தலில் முன்னதாகப் பயன்படுத்தப்பட்ட டைகுளோரோடைபுளோரோமீத்தேன்ஆர்-12 எனப்படும் குளோரோபுளோரோகார்பன், ஆர்-21 எனப்படும் ஐதரோகுளோரோபுளோரோகார்பன் போன்ற குளிர் பதனப் பொருள்களுக்கு மாற்றாக இவை பயன்படுத்தப்படுகின்றன [1]. ஆர்-12, ஆர்-21 போல இவை ஓசோன் அடுக்கை பாதிப்பதில்லை. ஆனால் இவை புவி வெப்பமடைவதற்கு பங்களிக்கின்றன. இவற்றின் வளிமண்டல செறிவும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கான பங்களிப்பும் விரைவாக அதிகரித்து வருகின்றன. இதனால் விளையும் புவியின் கதிர்வீச்சு சமநிலை ஏற்றத்தாழ்வுகள் குறித்து சர்வதேச கவலையை ஏற்படுத்துகின்றன.

சில C–F பிணைப்புகளைக் கொண்டுள்ள புளோரோகார்பன்கள் அவற்றின் பெற்றோர் ஐதரோகார்பன்களைப் போலவே செயல்படுகின்றன. ஆனால் இவற்றின் வினைத்திறனை குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்ற இயலும். உதாரணமாக யுராசில் மற்றும் 5-புளோரோயுராசில் இரண்டும் நிறமற்றும் உயர்-உருகு படிகத் திண்மங்களாகவும் உள்ளன. ஆனால் இரண்டாவதாகக் கூறப்பட்ட 5-புளோரோயுராசில் சேர்மம் ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மருந்தாகும். மருந்துவகைப் பொருட்களில் இத்தகைய C-F பிணைப்புகளின் மாற்றத்தை முன்கணித்து பயன்படுத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் [2]. பல மருந்துகள் மற்றும் வேளாண் வேதிப்பொருட்கள் ஒரே ஒரு புளோரின் மையத்தை அல்லது ஒரு டிரைபுளோரோமெத்தில் குழுவைக் கொண்டிருக்கின்றன.பாரிசு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள மற்ற பசுமை இல்ல வாயுக்களைப் போல அல்லாமல் ஐதரோபுளோரோகார்பன்களுக்கென்று வேறு அனைத்துலக பேச்சுவார்த்தைகள் இருக்கின்றன [3].

செப்டம்பர் 2016 இல், உலகளாவிய அளவில் வனப்பகுதிகளில் ஐதரோபுளோரோகார்பன்கள் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் என்று நியூயார்க் பிரகடனம் வலியுறுத்தியது [4]. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி, காலநிலை மாற்றத்திற்கு இந்த இரசாயனங்கள் அளிக்கும் பங்களிப்பு குறித்து ருவாண்டா நாட்டின் கிகாலியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் உச்சி மாநாடு சந்திப்பு பேச்சுவார்த்தைகளில் 197 நாடுகள் கலந்து கொண்டன. படிப்படியாக ஐதரோபுளோரோகார்பன்களின் பயன்பாட்டை சட்டப்படியாக குறைப்பது என்ற ஒரு திருத்தம் மாண்ட்ரீயல் நெறிமுறையில் மேற்கொள்ளப்பட்டது [5][6][7]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐதரோபுளோரோகார்பன்&oldid=2750128" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை