ஒருமை

இலக்கண எண்

மொழி இலக்கணத்தில், எண்ணிக்கையைக் குறிக்கும் இலக்கண வகைகளில் ஒன்று ஒருமை ஆகும். ஒருமை, ஒன்றைக் குறிக்கும். கண் என்னும் சொல் ஒரு கண்ணைக் குறிப்பதால் இஃது ஒருமைச் சொல் எனப்படுகின்றது. தமிழ் மொழியில், பெயர்ச்சொல், வினைச்சொல் இரண்டுமே எண் குறிப்பனவாக உள்ளன. பல மொழிகளில் ஒருமையுடன் பன்மை என்னும் பலவற்றைக் குறிக்கும் இன்னொரு எண் வகை காணப்பட, வேறு சில மொழிகளில் இரண்டைக் குறிக்கும் இருமை என்னும் எண்வகையும் உள்ளது.

ஒருமைப் பெயர்ச்சொற்கள்

கீழே தரப்பட்டிருப்பவை சில ஒருமைப் பெயர்ச்சொற்களாகும்.

  • பழம்
  • குடை
  • நிழல்
  • ஒலி
  • பறவை

ஒருமைப் பதிலிடு பெயர்கள்

தமிழில், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களில் உள்ள பதிலிடு பெயர்களின் ஒருமை வடிவங்களைக் கீழே காண்க.

ஒருமை வினைச்சொற்கள்

செய் என்னும் வினைச்சொல் வேறுபாடுகளின் ஒருமை வடிவங்கள்.

-பால்இறந்தகாலம்நிகழ்காலம்எதிர்காலம்
தன்மை-செய்தேன்செய்கிறேன்செய்வேன்
முன்னிலை-செய்தாய்செய்கிறாய்செய்வாய்
படர்க்கைஆண்பால்செய்தான்செய்கிறான்செய்வான்
பெண்பால்செய்தாள்செய்கிறாள்செய்வாள்
ஒன்றன்பால்செய்ததுசெய்கிறதுசெய்யும்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஒருமை&oldid=3212662" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை