கடல் மாசுபாடு

கடலில் இரசாயனங்கள்,தூசிதுகள்கள், கழிவுப் பொருட்கள் மற்றும் வீட்டுக் கழிவுகள் பரவுவதால் தீங்கான விளைவுகளுக்கான சாத்தியங்கள் நேருவதை கடல் மாசுபாடு என்கிறோம். கடல் மாசுபாட்டுக்கான அநேக ஆதாரவளங்கள் நில அடிப்படையிலானவை. காற்றில் அடித்து வரப்படும் குப்பைகள் போன்ற ஆதாரங்கள் தான் மாசுபாட்டுக்கான ஆதாரங்களாய் பலசமயங்களில் இருக்கின்றன.

கடல் மாசுபாட்டில் மிகத் தீங்கிழைக்கும் மாசுபாட்டுப் பொருள் எது என்பதைக் காண்பது கடினம்.

பல நச்சு ரசாயனங்கள் சிறு துகள்களுடன் ஒட்டிக் கொள்கின்றன. இவை அழுக்கு வடிகட்டும் உயிரினங்களாக சேவை செய்யும் மிதவை உயிரினங்கள் மற்றும் கடலடி உயிரினங்களால் ஆகாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடுகின்றன. இந்த வகையில், நச்சுகள் கடலின் உணவுச் சங்கிலிகளில் வளர்ச்சியுறுகின்றன. ஆக்சிஜன் மிகவும் பற்றாக்குறையாக அமைந்திருக்கும் வகையில் பல துகள்கள் ரசாயன முறையில் சேர்க்கை கண்டு முகத்துவாரங்கள் பிராணவாயு பற்றாக்குறையான நிலைக்கு செல்லக் காரணமாக அமைகின்றன.

பூச்சிக்கொல்லிகள் கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் சேர்க்கப்படும்போது, அவை விரைவாக கடல் உணவு வலைகளுக்குள் இழுக்கப்படுகின்றன. உணவு வலைகளில் இடம்பெற்று விட்டால், இந்த பூச்சிக்கொல்லிகள் முடக்கங்களுக்கும் நோய்களுக்கும் காரணமாக அமையலாம். இவை மனிதர்களுக்கும் ஒட்டுமொத்த உணவு வலைக்குமே தீங்கிழைப்பதாய் ஆகக் கூடும்.

நச்சு உலோகங்களும் கடல் உணவு வலைகளுக்குள் அறிமுகப்படுத்தப்படலாம். இவை திசுப் பொருள், உயிர்வேதியியல், நடத்தை, இனப்பெருக்கம் ஆகியவற்றில் மாற்றத்தை உருவாக்கலாம் என்பதோடு கடல் வாழ்க்கை வளர்ச்சியையும் அடக்குகின்றன. அத்துடன், பல விலங்கு உணவுகளில் அதிகமான மீன் உணவு அடங்கியிருக்கிறது. இந்த வகையில் கடல் நச்சுகள் நில விலங்குகளுக்கு பரவி, பின்னர் அவை கறி மற்றும் பால் பொருட்களிலும் தோன்றக் கூடும்.

வரலாறு

கடல் மாசுபாடு குறித்த MARPOL 73/78 ஒப்பந்த தரப்புகள்

கடல் மாசுபாடு ஒரு நெடிய வரலாறு கொண்டது என்றாலும், இருபதாம் நூற்றாண்டில் அதனை எதிர்கொள்வதற்கு குறிப்பிடத்தக்க அளவில் சர்வதேச சட்டங்கள் இயற்றப்பட்டன. 1950கள் துவங்கி தொடர்ந்து கடல் சட்டங்கள் குறித்த பல்வேறு ஐநா மாநாடுகளிலும் கடல் மாசுபாடு குறித்து விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. கடல்கள் பரந்தவை மிகப் பெரியவை என்பதால் மாசுபாடுகளை கரைத்து அபாயமற்றதாக்கி விடும் அளவற்ற திறனை அவை கொண்டிருப்பதாகவே அநேக அறிவியலாளர்கள் நம்பினர். 1950களின் பிற்பகுதிகளிலும் 1960களின் ஆரம்ப காலத்திலும், அமெரிக்காவின் கடலோரங்களில் அணு சக்தி வாரியத்திடம் உரிமம் பெற்ற நிறுவனங்கள் கதிர்வீச்சுக் கழிவுகளை கொட்டுவது குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. அதேபோல் விண்ட்ஸ்கேலில் இருக்கும் பிரித்தானிய சுத்திகரிப்பு ஆலையில் இருந்து அயர்லாந்து கடலில் கழிவுகள் கொட்டப்படுவது மற்றும் பிரான்ஸ் அணு வாரியத்தில் இருந்து மத்திய தரைக்கடலில் கழிவுகள் கொட்டப்படுவது ஆகியவை குறித்தும் சர்ச்சைகள் தோன்றின. 1967 ஆம் ஆண்டில் டோரி கேனியான் என்னும் எண்ணெய் டாங்கி மோதி நொறுங்கியது மற்றும் 1969 ஆம் ஆண்டில் கலிபோர்னியா கடலோரத்தில் சாண்ட பார்பரா எண்ணெய் கசிவு ஆகிய சம்பவங்கள் கடல் மாசுபாட்டை மேலும் சர்வதேச தலைப்புச் செய்தியாக்கின. ஸ்டாக்ஹோமில் 1972 ஆம் ஆண்டு நடந்த ஐநா மனித சூழல் மாநாட்டில் கடல் மாசுபாடு தான் முக்கிய விவாதப் பொருளாய் அமைந்தது. அதே வருடத்தில் கழிவுகள் மற்றும் பிற பொருட்களை கடலில் கொட்டி கடலை மாசுபடுத்துவதைத் தடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் சில சமயங்களில் லண்டன் ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. லண்டன் ஒப்பந்தம் கடல் மாசுபாட்டை முற்றிலுமாய் தடை செய்யவில்லை என்றாலும் அது தடை செய்யப்பட வேண்டிய பொருட்கள் (கருப்பு) மற்றும் தேசிய அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட வேண்டிய பொருட்களின் (பழுப்பு) பட்டியல்களை உருவாக்கித் தந்தது. உதாரணமாக சயனைடு மற்றும் உயர்ந்த அணுக்கதிர்வீச்சுப் பொருட்கள் எல்லாம் கருப்பு பட்டியலில் இடம்பெற்றன. லண்டன் ஒப்பந்தம் கப்பல்களில் இருந்து கொட்டப்பட்ட கழிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் குழாய்கள் வழியே திரவ வடிவில் கொட்டப்பட்ட கழிவுகளைக் கட்டுப்படுத்த அது எதுவும் செய்ய முடியவில்லை.[1]

மாசுபாட்டுப் பாதைகள்

கடல் சூழலமைப்புகளுக்குள் மாசுபாடுகள் உள்ளிடப்படுவதை வகைப்படுத்தவும் ஆராயவும் பல வெவ்வேறு வழிகள் உள்ளன. கடலில் கலக்கும் மாசுகளை முக்கியமாய் மூன்று வகையாய் பிரிக்கலாம் என்று பாடின் கூறுகிறார்: கடல்களில் நேரடியாய் கழிவுகளைக் கொட்டுவது, மழையினால் நீரில் அடித்து வரப்படுவது, மற்றும் காற்றில் இருந்து வெளியாகும் மாசுப் பொருட்கள்.

மாசுப் பொருட்கள் கடலில் நுழைவதற்கான ஒரு பொதுவான வழி ஆறுகள் ஆகும். கடல்களில் இருந்து நீர் ஆவியாகும்போது வீழ்படிவுகள் உருவாகின்றன. எஞ்சியவை மழையாக ஆறுகளில் நுழைந்து மீண்டும் கடலுக்குத் திரும்புகின்றன. நியூயார்க் மாநிலத்தின் ஹட்சன் மற்றும் நியூ ஜெர்சி மாநிலத்தின் ரரிடன் ஆகிய நதிப் பகுதிகள் ஸ்டாடன் தீவின் வடக்கு மற்றும் தெற்கு முனைகளில் கழிவுகளைக் கொணர்ந்து கடல் மாசுபாட்டிற்குக் காரணமாய் அமைகின்றன.

புள்ளி ஆதாரம் மற்றும் புள்ளிசாரா ஆதாரம் எனவும் பல சமயங்களில் மாசுபாட்டு ஆதாரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. தனியான, அடையாளம் காணத்தக்க, பிராந்தியவயப்பட்ட மாசுபாட்டு ஆதாரம் இருந்தால் அதனை புள்ளி ஆதார மாசுபாடு என்கிறோம். கடலில் நேரடியாகக் கலக்கும் சாக்கடை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதுபோன்ற மாசுபாடுகள் குறிப்பாக வளரும் நாடுகளில் நேர்கின்றன. மாசுபாடு சரியாய் வரையறுக்கப்படாத ஆதாரங்களில் இருந்து வருவதை புள்ளிசாரா மாசுபாடு என்கிறோம். இவை கட்டுப்படுத்துவதற்குக் கடினமானவை ஆகும். விவசாய மிகைநீர் மற்றும் காற்றில் அடித்து வரப்படும் குப்பைகள் இதற்கான பிரதான உதாரணங்களாகும்.

நேரடிக் கலப்பு

ரியோ டிண்டோ நதியில் அமில சுரங்க சாக்கடை.

நகரங்களின் சாக்கடை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்து நேரடியாக மாசுப் பொருட்கள் ஆறுகளிலும் கடலிலும் கலக்கின்றன. சில சமயங்களில் இவை ஆபத்தான நச்சுக் கழிவுகளின் வடிவத்திலும் இருக்கின்றன.

தாமிரம், தங்கம் போன்ற கனிம வளங்களுக்கான சுரங்கப் பணிகளும் கடல் மாசுபாட்டிற்கான இன்னொரு ஆதாரவளமாய் திகழ்கின்றன. அந்த மணலே மாசுபாடாகி கடலை நோக்கிப் பாயும் நதிகளில் கலந்து விடுகிறது. ஆயினும் சுரங்க வேலைகளில் வெளியிடப்படும் சில கனிமங்களும் பிரச்சினைகளை உருவாக்கலாம். உதாரணமாக ஒரு பொதுவான தொழில்துறை மாசுப்பொருளான தாமிரம் பவளப் பூச்சிகளின் வாழ்க்கை சுற்றில் குறுக்கிடலாம்.[2] சுரங்க வேலை சுற்றுசூழல் விஷயத்தில் மோசமான வரலாறு கொண்டிருக்கிறது. உதாரணமாக, அமெரிக்க மேற்குக் கண்ட பகுதிகளின் நீர்ப்பரப்புகளுக்கு வந்து சேரும் நீரில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக சுரங்க மாசுகளால் மாசுபட்டிருப்பதாக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கிறது.[3] இந்த மாசுபாட்டில் அநேகமானவை கடலில் சென்று முடிகிறது.

நிலத்தில் இருந்து வழிந்தோடி வரும் நீர்

விவசாயப் பகுதிகளில் இருந்து வழிந்தோடி வரும் நீர், நகர்ப்பகுதிகளில் வழிந்தோடி வரும் நீர் மற்றும் சாலைகள், கட்டிடங்கள், துறைமுகங்கள், கால்வாய்கள் ஆகியவற்றின் கட்டுமான இடங்களில் இருந்து வழிந்தோடி வரும் நீர் ஆகியவை மணல் மற்றும் கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ், மற்றும் கனிமங்கள் நிரம்பிய துகள்களைச் சுமந்து வரும். இந்த கனிம வளம் செறிந்த நீர் கடலோரப் பகுதிகளில் பாசிகள் மற்றும் மிதவை உயிரின வகைகள் செழித்து வளர்வதற்குக் காரணமாக அமைகிறது. இவை இருக்கும் அனைத்து பிராணவாயுவையும் பயன்படுத்திக் கொண்டு பிராணவாயு பற்றாக்குறையான நிலையை உருவாக்கும் சாத்தியவளத்தைக் கொண்டுள்ளன.

சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இருந்து வழிந்தோடி வரும் மாசுபட்ட நீர் கடலோரப் பகுதிகளில் நீர் மாசுபாட்டிற்கான ஒரு முக்கியமான ஆதாரவளமாக அமைகிறது. புகே விரிகுடா (Puget Sound) பகுதியில் கலக்கும் நச்சு ரசாயனங்களில் 75 சதவீதம் சாலைகள், வாகனப் பாதைகள், கூரைகள், மற்றும் பிற நிலப் பகுதிகளில் இருந்து அடித்து வரப்படும் நீரின் மூலம் சுமந்து வரப்படுகின்றன.[4]

கப்பல் வழி மாசுபாடு

ஒரு சரக்கு கப்பல் ஸ்திரப்படுத்தல் நீரை ஒரு பக்கத்தில் இறைக்கிறது.

கப்பல்கள் பல வழிகளிலும் நீரையும் கடலையும் மாசுபடுத்த முடியும். எண்ணெய் கசிவுகள் பேரழிவு தரும் விளைவுகளை அளிக்கக் கூடியவை. கச்சா எண்ணெயின் மூலக்கூறாய் இருக்கும் பாலிசைக்ளிக் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAH) கடல் வாழ் உயிரினங்களுக்கு நஞ்சாய் மாறுவதோடு சுத்தப்படுத்துவதற்கும் கடினமானவை. இவை படிவுகளிலும் கடல் சுற்றுப்புறத்திலும் பல வருடங்களுக்கு நீடிக்கத்தக்கவை.[5]

பெரும் சரக்குக் கப்பல்களின் குப்பைகளை கடலில் கொட்டுவதும் துறைமுகங்களையும், நீர்ப்பாதைகளையும் கடல்களையும் அசுத்தப்படுத்துகின்றன. உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் இதற்கான தடைக் கட்டுப்பாடுகள் இருப்பினும் பல சம்பவங்களில் கப்பல்கள் தெரிந்தே சட்டவிரோதமாக கழிவுகளை கடலில் கொட்டுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 10,000 கப்பல் கொள்கலன்களுக்கும் அதிகமாய் கடலில் மூழ்கிப் போவதாய் (பொதுவாக புயல் சமயங்களில்) மதிப்பிடப்பட்டுள்ளது.[6] அத்துடன் ஒலி மாசுபாடுகளையும் கப்பல்கள் உருவாக்குகின்றன. இது இயற்கையான கடல்வாழ்வுச் சூழலைப் பாதிக்கிறது. ஸ்திரப்பாட்டு தொட்டிகளில் இருந்து வரும் நீர் தீங்கிழைக்கும் பாசிகளையும் பிற ஆக்கிரமிக்கும் உயிரினங்களையும் பரப்பக் கூடும்.[7]

ஸ்திரப்பாட்டு நீர் கடலில் எடுக்கப்பட்டு துறைமுகத்தில் வெளியேற்றப்படுவது விரும்பத்தகாத விநோத கடல் வாழ்வு சூழலுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக அமைகிறது. கருங்கடல், காஸ்பியன் கடல் மற்றும் அஸோவ் கடல்களில் ஆக்கிரமித்து வாழக் கூடிய நன்னீர் வரிக்குதிரை சிப்பியினம் மகா ஏரிகளுக்குள்ளாக இந்த வகையில் தான் வந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.[8] சுற்றுச்சூழலுக்கு தீங்கு உருவாக்கக் கூடிய பரவுகிற ஒற்றை உயிரினத்திற்கு உதாரணம் கூற வேண்டுமென்றால் தீங்கிழைக்காததாய் தோற்றமளிக்கும் ஜெல்லிமீன் வகைகளைக் கூறலாம் என்கிறார் மெய்னிஸ். இவ்வாறு பரவிய நெமியோப்சிஸ் லெய்டை (Mnemiopsis leidyi) என்னும் ஜெல்லிமீன் வகை இன்று உலகின் அநேக பகுதிகளின் முகத்துவாரங்களில் பரவியிருக்கிறது. இது முதலில் ஒரு கப்பலின் ஸ்திரப்பாட்டு நீர் மூலம் கருங்கடலுக்கு வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதன்பின் ஜெல்லிமீன் எண்ணிக்கை மிக அதிகமாய் உயர ஆரம்பித்தது. 1988 ஆம் ஆண்டுவாக்கில் இது பிராந்திய மீன்பிடித் துறைக்கு பெரும் சேதாரத்தை ஏற்படுத்த துவங்கியிருந்தது. ”நெத்திலி வகைகள் மீன்பிடிப்பு 1984 ஆம் ஆண்டில் 204,000 டன்களில் இருந்து 1993 ஆம் ஆண்டில் 200 டன்களாய் சரிந்தது; அயிரை வகை மீன்கள் பிடிப்பு 1984 ஆம் ஆண்டில் 24,600 டன்களாக இருந்ததில் இருந்து 1993 ஆம் ஆண்டில் 12,000 டன்களாய் சரிந்தது; குதிரை மீன்கள் பிடிப்பு 1984 ஆம் ஆண்டில் 4,000 டன்களாக இருந்து 1993 ஆம் ஆண்டில் பூச்சியமாய் சரிந்தது.”[7] இப்போது ஜெல்லிமீன்கள் மீன் குஞ்சுகள் உட்பட மிதவை பிராணி வகைகளையே தீர்த்து விட்டது. அவற்றின் எண்ணிக்கை மிகப்பெரும் அளவில் வீழ்ச்சி கண்டு விட்டது. ஆயினும் கடல்சூழலில் அவை தொடர்ந்து கழுத்து நெரிக்கும் பிடியைக் கொண்டிருக்கின்றன.

ஆக்கிரமிப்பு இனங்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் புதிய நோய்கள் பரவக் காரணமாகலாம்; புதிய மரபணுக்களை அறிமுகப்படுத்தலாம்; கடலுக்கடியிலான அமைப்புகளை மாற்றலாம்; இயற்கை உயிரினங்களுக்கு உணவு கிடைப்பதையே சிரமத்திற்கு ஆளாக்கலாம். அமெரிக்காவில் மட்டும் இந்த ஆக்கிரமிப்பு உயிரினங்கள் ஆண்டுக்கு சுமார் 138 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வருவாய் இழப்பையும் நிர்வாக செலவையும் கொண்டு வருகின்றன.[9]

காற்று மாசுபாடு

G

காலநிலை மாற்றத்தால் கடல் வெப்பநிலைகள்[10] அதிகமாவதோடு வாயு மண்டலத்தில் இருக்கும் கரியமில வாயுவின் அளவும் அதிகரிக்கிறது. கரியமில வாயுவின் அதிகரிக்கும் அளவுகள் கடல்களை அமிலமயமாக்குகின்றன.[11] இது நீரியல் சூழலமைப்புகளை மாற்றியமைப்பதோடு மீன் பரவலமைப்பையும் மாற்றுகிறது. இது மீன்பிடித் தொழிலை நம்பியிருக்கும் சமுதாயங்களின்[12] வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. காலநிலை மாறுவதைக் குறைக்க வேண்டுமாயின் அதற்கு ஆரோக்கியமான கடல் சூழலமைப்புகள் மிக முக்கியமாகும்.[13] ex.factory dissisase

ஆழ்கடல் சுரங்கம்

ஆழ்கடல் சுரங்கம் என்பது கடல் படுகையில் நடைபெறும் தாதுக்கள் எடுப்பதற்கான புதிய நிகழ்முறை ஆகும். ஆழ்கடல் சுரங்க தளங்கள் பெரும்பாலும் கடலின் மேற்பரப்பில் இருந்து[14] 1400௦௦ முதல் 3,700 மீட்டர் தூரத்தில் கீழே இடம்பெற்றிருக்கும். பல்லுலோக செறிவிடங்கள் அல்லது நீர்வெப்ப துளைகளைச் சுற்றி இவை அமைந்திருக்கும். அதில் இருக்கும் சல்பைடு படிவுகளில் வெள்ளி, தங்கம், தாமிரம், மாங்கனீசு, கோபால்ட் மற்றும் துத்தநாகம் ஆகிய மதிப்புமிகுந்த உலோகங்கள் அடங்கியிருக்கின்றன.[15][16] இந்த படிவுகள் நீர் விசைக்குழாய்கள் வழியாகவோ அல்லது வாளி அமைப்புகள் மூலமாகவோ மேலே கொண்டுவரப்படுகின்றன. மற்ற சுரங்க பணிகள் போன்றே ஆழ்கடல் சுரங்க வேலைகளிலும் சுற்றியிருக்கும் பகுதிகளுக்கு ஏற்படும் சுற்றுச்சூழல் சேதாரங்கள் குறித்த பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன.

ஆழ்கடலில் சுரங்கம் தோண்டுவது என்பது ஒப்பீட்டளவில் புதியதொரு துறை என்பதால், முழு வீச்சிலான சுரங்க வேலைகளின் முழுமையான பின்விளைவுகள் அறிய முடியாததாய் இருக்கிறது. ஆயினும் கடல் படுகையின் பகுதிகளை அகற்றுவதால் அதன் தரையடுக்கு பாதிப்புக்குள்ளாகி நீர் பரப்பில் நச்சுத்தன்மையைக் கூட்டும் என்பதை நிபுணர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.[15] கடல் படுகையின் பகுதிகளை அகற்றுவது கடலடி உயிரினங்களின் வாழ்விடத்தை சிக்கலுக்குள்ளாக்குகின்றன. சுரங்க வேலையின் இடம் மற்றும் அளவைப் பொறுத்து இவை நிரந்தரமான பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.[14] கசிவுகள், ஒழுகல்கள் மற்றும் அரிப்பு ஆகியவையும் சுரங்க பகுதியில் ஏற்படக் கூடிய மற்ற விளைவுகள் ஆகும்.

ஆழ்கடல் சுரங்கங்களின் விளைவுகளில் வீழ்படிவு புகைத்திரைகள் தான் மிகப்பெரியவையாக இருக்கும். துளையிடுகையில் உருவாகும் நுண்துகள்கள் மீண்டும் கடலுக்குள்ளேயே வீழ்வதன் விளைவாக நீர்ப்பரப்பின் மீது துகள்கள் திட்டாக மிதக்கின்றன. தரைக்கருகிலான புகைத்திரை, மேற்பரப்பிலான புகைத்திரை என இரண்டு வகை புகைத்திரைகள் தோன்றலாம்.[14] தாதுக்கள் பிரித்தெடுக்கப்பட்ட பிறகு அந்த மணல்துகள்களை மீண்டும் தோண்டும் இடத்திலேயே கொட்டுவதால் தரைக்கருகிலான புகைத்திரை ஏற்படுகிறது. இந்த மிதவைத் துகள்கள் நீரின் தன்மையை மாற்றி விடுகின்றன, அத்துடன் கடலடி உயிரினங்களால் பயன்படுத்தப்படும் வடிகட்டி அமைப்புகளையும் அடைத்துக் கொள்கின்றன.[17] மேற்பரப்பு புகைத்திரைகள் இன்னுமொரு கடினமான பிரச்சினையை கொண்டு வருகின்றன. துகள்களின் அளவையும் நீரோட்டத்தின் தன்மையையும் பொறுத்து புகைத்திரைகள் பரந்த பகுதிகளுக்கு பரவக் கூடும்.[14][18] இந்த புகைத்திரைகள் ஒளி ஊடுருவலையும் மிதவை உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி அதன்மூலம் அந்த பகுதியின் உணவு வலைக்கே பாதிப்பை உருவாக்கலாம்.[14][18]

அமிலமயமாக்கம்

மாலத்தீவில் கடல் பாறைத் தீவு. உலகெங்கும் பவளப் பாறைகள் மடிந்து கொண்டிருக்கின்றன.[19]

கடல்கள் பொதுவாக ஒரு இயற்கை கார்பன் தொட்டி ஆகும். இவை வளிமண்டலத்தில் இருந்து கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்கின்றன. வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு அதிகரித்துக் கொண்டு செல்வதால், கடல்களும் அதிகமாக அமிலத்தன்மை பெற்றுக் கொண்டு செல்கின்றன.[20][21]கடல் அமிலமயமாக்கத்தின் முழு விளைவுகளும் அறியப்படவில்லை என்றாலும் கால்சியம் கார்பனேட்டால் உருவான அமைப்புகள் கரையத்தக்கதாய் மாறலாம். அதனால் பவளங்கள் பாதிப்புறலாம்.[22].

கடல்களும் கடல் சூழலிய அமைப்புகளும் உலக கார்பன் சுற்றில் முக்கிய பாத்திரத்தை ஆற்றுகின்றன. 2000 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளுக்கு இடையே மனித நடவடிக்கைகளால் வெளியான கரியமில வாயுவில் சுமார் 25 சதவீதத்தை அவை அகற்றியிருக்கின்றன. தொழிற்புரட்சி துவங்கியதில் இருந்து மனித நாகரிக வளர்ச்சியின் போக்கில் வெளியான கரியமில வாயுவில் பாதி அளவுக்கு அவை அகற்றியுள்ளன. கடல் வெப்பநிலைகளும் கடல் அமிலமயமாக்கமும் அதிகரிப்பதால் கடல் கார்பன் தொட்டியின் திறன் கொஞ்சம் கொஞ்சமாய் பலவீனப்படும்.[23] இது குறித்த உலகளாவிய கவலைகள் மொனாக்கோ[24] மற்றும் மனடோ[25] பிரகடனங்களில் வெளிப்பட்டன.

அமிலமயப்பட்ட நீர் பெருமளவில் வட அமெரிக்காவின் பசிபிக் கண்ட அடுக்குப் பகுதியின் நான்கு மைல்கள் சுற்றளவுக்குள் கிணற்றுநீரில் கலந்திருப்பதாய் 2008 மே மாதத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஒரு அறிக்கை தெரிவித்தது. அநேக பிராந்திய கடல் வாழ் உயிரினங்கள் பிறந்து வாழும் மிக முக்கிய பகுதியாகும் இது. வான்கோவரில் இருந்து வடக்கு கலிபோர்னியா வரையான பகுதிகளை மட்டுமே இந்த அறிக்கை கணக்கில் கொண்டது என்றாலும், பிற கண்ட அடுக்குப் பகுதிகளும் இதேபோன்ற விளைவுகளை உணரக் கூடும்.[26]

இதேபோன்றதொரு இன்னொரு பிரச்சினையாக கடல் படுகை வீழ்படிவுகளின் கீழ் மீத்தேன் கிளாத்ரேட் தேக்கங்கள் கண்டறியப்பட்டன. இவை பெரும் அளவில் பசுமைக்குடில் வாயுவான மீத்தேனை தக்க வைத்துக் கொள்கின்றன. இது கடல் வெப்பமயமாக்கத்திற்குக் காரணமாகிறது. 2004 ஆம் ஆண்டில் உலகளாவிய கடல் மீத்தேன் கிளாத்ரேட்டுகளின் அளவு ஒன்று முதல் ஐந்து மில்லியன் கன கிலோமீட்டர்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது.[27] இந்த கிளாத்ரேட்டுகள் அனைத்தும் கடல் படுகைக்கு மேலே சமதளமாய் பரப்பப்பட்டால், அது மூன்று முதல் பதினான்கு மீட்டர் தடிமன் கொண்டதாய் மாறும்.[28] இந்த மதிப்பீட்டு அளவு 500-2500 ஜிகாடன்கள் கார்பனுக்கு சமமானதாகும். மற்ற அனைத்து புதை எரிபொருள் கையிருப்புகளுக்கு 5000 கிகாடன்கள் கார்பன் அளவு மதிப்பிடப்படுகிறது என்பதுடன் இதனை ஒப்பிட்டு உணர வேண்டும்.[27][29]

வேதி ஊட்டம் மிகைநிலை

மாசுபட்ட நீர்ப்பரப்பு .
கடலடி வாழ்க்கையில் வேதி மிகை ஊட்ட விளைவு

ஒரு சூழலமைப்பில் வேதி ஊட்டங்கள் (பொதுவாக நைட்ரஜன் அல்லது பாஸ்பரஸ் அடங்கிய சேர்மங்கள்) மிகுதியுறும் நிலையை வேதி ஊட்டம் மிகைநிலை என்கிறோம். சூழலமைப்பின் அடிப்படை உற்பத்திதிறனில் அதிகரிப்பிற்கு (மிகையான தாவர வளர்ச்சி மற்றும் சிதைவு) இது காரணமாகலாம். அத்துடன் பிராண வாயு பற்றாக்குறை, நீரின் தரம் குறைவது, மற்றும் மீன் மற்றும் பிற விலங்கின எண்ணிக்கை குறைவது ஆகிய விளைவுகளையும் இது கூடுதலாய் உருவாக்கும்.

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரங்களில் உள்ள பல ரசாயனங்களையும் கால்நடை மற்றும் மனிதக் கழிவுகளையும் தாங்கி வரும் ஆறுகள் கடலில் வந்து கலப்பது தான் இதற்கான பிரதான காரணமாய் அமைந்துள்ளது. பிராண வாயுவைத் தீர்க்கும் ரசாயனங்கள் நீரில் மிகுதியாகக் கலந்திருந்தால் அது பிராண வாயுப் பற்றாக்குறை நிலைக்கு இட்டுச் சென்று மரண மண்டலத்தை உருவாக்கும்.[30]

முகத்துவாரங்கள் இயற்கையாகவே பெரும்பாலும் வேதி ஊட்டம் மிகை நிலை கொண்டதாக இருப்பதுண்டு. ஏனென்றால் நிலத்திலிருந்தான ஊட்டங்கள் அடித்து வரும் நீரில் சங்கமித்து மொத்தமாய் ஒரு கால்வாய் வழியே கடல் நீரில் கலந்து விடுகின்றன. மேற்கு ஐரோப்பா, அமெரிக்காவின் கிழக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகள், மற்றும் கிழக்கு ஆசியா குறிப்பாக ஜப்பான் ஆகிய பிராந்தியங்களின்[31] கடலோரப் பகுதிகளில் 375 பிராண வாயு பற்றாக்குறை மண்டலங்கள் இருப்பதாக உலக ஆதாரவளங்களுக்கான நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. கடலில் பல இடங்களில் சிவப்பு அலை பாசி திரள்கள்[32] உருவாகின்றன. இவை மீன் மற்றும் கடல் பாலூட்டிகளை கொல்வதோடு மனிதர்களுக்கும் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. கரைக்கு அருகில் இவை இருந்தால் சில வீட்டு விலங்குகளுக்கும் கூட இப்பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன.

அடித்து வரப்படும் நிலநீர் தவிர, வளிமண்டலத்தில் உள்ள மனித உருவாக்க நிலையான நைட்ரஜனும் கூட திறந்த கடலில் நுழையலாம். கடலின் புறநிலையான (மறுசுழற்சி சாராத) நைட்ரஜன் வழங்கலில் மூன்றில் ஒரு பங்கு வரையான வழங்கலுக்கு இது காரணமாகிறது என்றும் வருடாந்திர புதிய கடல் உயிரியல் உற்பத்தியில்[33] மூன்று சதவீதம் வரை இது பங்களிக்கிறது என்றும் 2008 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. வேதிவினைபுரியும் நைட்ரஜன் சுற்றுச்சூழலில் பெருகுவதானது வளிமண்டலத்தில்[34] கரியமில வாயு அதிகரிப்பதால் உருவாகும் அதே விளைவுகளை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் குப்பை

பிளாஸ்டிக் குப்பையைக் கொண்டு ஒரு அன்னம் கூடு கட்டுகிறது.

மனிதர்களால் தூக்கியெறியப்படும் குப்பைகள் தான் கடல் குப்பைகளில் பிரதானமானவையாய் இருக்கின்றன. இவை கடலில் மிதக்கின்றன அல்லது அடித்து செல்லப்படுகின்றன. இந்த கடல் குப்பைகளில் எண்பது சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகளாகும். இவை இரண்டாம் உலகப் போர் முடிந்த காலத்தில் இருந்து துரிதமாய் பெருகி வருகின்றன.[35] கடல்களில் இருக்கும் பிளாஸ்டிக்கின் அளவு நூறு மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு அதிகமாய் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[36]

தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பைகளும், பிளாஸ்டிக் கழிவின் மற்ற வடிவங்களும் கடலில் வந்து கலந்து கடல் உயிரினங்களுக்கும் மீன் வளத்திற்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.[37] வாழ்விடம் இன்மை, பிராண வாயு பற்றாக்குறை மற்றும் உள்ளருந்தும் உணவு ஆகிய பிரச்சினைகள் காரணமாக நீர்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.[38][39][40] பொதுவாக பிளாஸ்டிக்கால் செய்யப்படுகிற மீன் வலைகளை மீனவர்கள் கடலில் விட்டுச் சென்று விடுகின்றனர் அல்லது தொலைத்து விடுகின்றனர். பேய் வலைகள் என்று அறியப்படும் இவற்றுக்குள் மீன்கள், டால்பின்கள், கடல் ஆமைகள், சுறாக்கள், கடல்பசுக்கள், முதலைகள், கடல்பறவைகள், நண்டுகள் மற்றும் மற்ற உயிரினங்கள் மாட்டிக் கொண்டு விடுகின்றன. இதில் அந்த உயிரினங்களின் இயல்பான இயக்கம் பாதிக்கப்பட்டு அவை பட்டினியாலும் தொற்றுகளாலும் அவதியுறுகின்றன. சுவாசிக்க மேற்பரப்புக்கு வர வேண்டிய அவசியத்தில் இருக்கும் உயிரினங்கள் மூச்சுத் திணறுகின்றன.[41]

குப்பை உட்கொண்ட ஆல்பட்ராஸ் பறவையில் எஞ்சியது

பல சமயங்களில் மிதக்கும் பொருட்களை தங்களது உணவாகக் கருதி பல உயிரினங்கள் உண்டு விடுகின்றன.[42] இவ்வாறு செல்லக் கூடிய பிளாஸ்டிக் குப்பைகள் வெளியேற வழியின்றி இந்த விலங்குகளின் சீரணக் குழாய்களுக்குள் நிரந்தரமாகத் தங்கி விடலாம். இயல்பாக உணவருந்த முடியாத நிலையில் பசியாலோ தொற்றாலோ அந்த விலங்குகள் உயிரிழக்கக் கூடும்.[43][44]

பிளாஸ்டிக் பொருட்கள் மற்ற பொருட்களை போல் உயிரியல் சிதைவுறுவதில்லை என்பதால் அவை குவிந்து கொண்டே செல்கின்றன. சூரிய வெப்பத்தில் அவை ஒளிச்சிதைவுறலாம், ஆனால் உலர்ந்த சூழ்நிலையில் மட்டுமே அவ்வாறு நிகழ முடியும். நீர் இந்த நிகழ்முறையைத் தடுத்து விடுகிறது.[45] [46][47] நீடித்து தங்கி விடக் கூடிய இவற்றில் பலவும் கடல் ஆமைகள், மற்றும் கருங்கால் ஆல்பட்ராஸ் ஆகிய கடல்வாழ் பறவைகள் மற்றும் விலங்குகளின்[48] வயிற்றுக்குள் சென்று விடும்.[49]

கடல் சுழல்களின் மையத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் திரள்கின்றன.[35][50] ஹவாய் தீவுகள் குப்பைகளில் பெருமளவை எதிர்கொள்கிறது. தொன்னூறு சதவீதம் பிளாஸ்டிக் கொண்ட இந்த குப்பை மிட்வே கடற்கரையோரங்களில் திரண்டு தீவின் பறவைகளுக்கு பெரும் அபாயமாக மாறியுள்ளது. லேசன் அல்பட்ராஸ் பறவைகளின் உலக எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு (1.5 மில்லியன்) மிட்வே அடோல் பகுதியில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.[51] இந்த அல்பட்ராஸ் பறவைகளில் அநேகமாக எல்லாவற்றின் சீரண அமைப்பிலுமே[52] பிளாஸ்டிக் கலந்து விட்டது. இவற்றின் மூன்றில் ஒரு கரு இறந்து போகிறது.[53]

பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நச்சு சேர்க்கைகளில் தண்ணீர் படும்போது அவற்றின் சுற்றுப்புறங்களும் மாசுபடக் கூடும். நீரிலிருக்கும் மாசுபாடுகள் சேகரமாகி பிளாஸ்டிக் குப்பைகளின்[36] மேற்பரப்பில் படிகின்றன. இதனால் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் இருப்பதை விடவும் கடலில் இன்னும் அபாயம் விளைவிப்பதாய் ஆகி விடுகின்றன.[35] இந்த நீர்வழி மாசுபாடுகள் கொழுப்பு திசுக்களில் உயிரியல் ரீதியாய் பெருகும் குணம் கொண்டவை. அத்துடன் உணவுச் சங்கிலியை உயிரியல் அளவுப்பெருக்கமுறச் செய்து தலைமை வேட்டைவிலங்குகளுக்கு நெருக்குதல் அளிக்கும். சில பிளாஸ்டிக் சேர்க்கைகள் உட்சுரப்பு அமைப்பை பாதிக்கும் தன்மை கொண்டவை. இன்னும் சில நோயெதிர்ப்பு அமைப்பை பாதிக்கலாம் அல்லது இனப்பெருக்க விகிதங்களைக் குறைக்கலாம்.[50] கடல்நீரில் இருக்கக் கூடிய மற்ற கரிம மாசுபாடுகளையும் மிதவைக் குப்பைகள் உறிஞ்சிக் கொள்ளக் கூடும்.[54] நச்சு விளைவுகள் தவிர,[55] உட்செலுத்தப்படும்போது இவற்றில் சிலவற்றை விலங்கின் மூளை பெண்சுரப்பாக தவறாகக் கருதி விடும். இதனால் பாதிக்கப்பட்ட விலங்கினத்திற்கு ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படும்.[49]

நச்சுகள்

பிளாஸ்டிக் தவிர, கடல் சூழலில் துரிதமாய் சிதைவுறாத மற்ற நச்சுப் பொருட்களாலும் குறிப்பிட்ட பிரச்சினைகள் நிகழ்கின்றன. பூச்சிக் கொல்லிகள் மற்றும் கதிர்வீச்சுக் கழிவுகளை நீடிக்கும் நச்சுக்களுக்கான உதாரணமாய்க் கூறலாம். கன உலோகங்கள் அதிகமான அடர்த்தியை கொண்டிருக்கும். குறைவான செறிவுகளில் இவை நச்சுத்தன்மையுடையதாக ஆகும். உதாரணமாக பாதரசம், காரீயம், நிக்கல், ஆர்சனிக் மற்றும் காட்மியம் ஆகியவற்றைக் கூறலாம். உயிரியல் பெருக்க முறையில் நீரில் வாழும் பல உயிரினங்களின் திசுக்களில் இந்த நச்சுகள் பெருகலாம். முகத்துவாரங்கள் மற்றும் விரிகுடா சேற்றுப் பகுதிகள் போன்ற கடலடிப் பகுதிகளிலும் இவை பெருகுவதைக் காணலாம்.

குறிப்பான உதாரணங்கள்
  • சீன மற்றும் ரஷ்ய தொழில்துறை மாசுபாடுகளால் விளைந்த பீனால்கள் மற்றும் கன உலோகங்கள் ஆமூர் நதியில் கலந்து அங்கிருக்கும் மீன்வளத்தையும் அதன் முகத்துவார மண்ணையும் நாசப்படுத்தி விட்டன.[56]
  • கனடாவின் ஆல்பெர்டா பகுதியில் இருக்கும் வெபாமுன் ஏரி ஒருகாலத்தில் சிறந்த வெள்ளைமீன் ஏரியாக பெயர் பெற்றுத் திகழ்ந்தது. இப்போதோ இதன் வீழ்படிவிலும் மீன்களிலும் ஏற்பு அளவுக்கு மிகையான கன உலோக அளவுகள் தென்படுகின்றன.
  • கூர்மையான நெடிய மாசுபாட்டு நிகழ்வுகள் தெற்கு கலிபோர்னிய கெல்ப் பாசிக் காடுகளை பாதித்திருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த பாதிப்பின் அளவு மாசுப் பொருட்களின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.[57][58][59][60][61]
  • உணவுச் சங்கிலியில் முக்கிய இடம் பெற்றிருக்கும் இவற்றின் வயிற்றில் கன உலோகங்கள் பெருகித் திரள்வதால், புளூஃபின் மற்றும் அல்பகோர் போன்ற பெரும் உயிரினங்களில் பாதரச அளவுகள் மிக அதிகமாய் இருக்கலாம். இதனால், கர்ப்பமுற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பிற சிறு உயிரினங்களை உண்டுவாழும் பெரிய வகை மீன்களை குறைவோடு எடுத்துக் கொள்ள அமெரிக்க அரசின் சுகாதார பரிந்துரை அமைப்பு 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வழிகாட்டு நெறிகளை அறிவித்தது.[62]
  • சில கூட்டுமீன்களும் நண்டுகளும் மாசுபாட்டு சூழலில் வாழக் கூடும். இவை தங்களது திசுக்களில் கன உலோகங்கள் அல்லது நச்சுகளை பெருக்கலாம். உதாரணமாக ஒரு வகை நண்டுகள் மிகவும் மாறுபட்ட நீர்வாழிடங்களிலும் வாழும் திறன் பெற்றிருக்கும். இவற்றால் மாசுபட்ட நீரிலும் வாழ முடியும்.[63] இத்தகைய உயிரினங்களை உணவுக்காகப் பயன்படுத்துவதானால் அவை கவனமாகக் கையாளப்பட வேண்டியது அவசியம்.[64][65]
  • நிலத்தில் இருந்து பூச்சிக் கொல்லிகள் அடித்து வரப்படுவதானது மீன் வகைகளில் பால் நிலையையே மரபணுரீதியாக மாற்றி ஆண் வகைகளை பெண் வகையாக மாற்றி விடக் கூடும்.[66]
  • எண்ணெய் கசிவுகள் மூலமாகவோ (உதாரணமாக கலிசியன் கடலோரப் பகுதியில் நிகழ்ந்த பிரெஸ்டீஜ் எண்ணெய் கசிவு) அல்லது மற்ற பிற இயற்கையான காரணங்களினாலோ கன உலோகங்கள் சூழலுக்குள் நுழையலாம்.[67]
  • 2005 ஆம் ஆண்டில் ட்ரங்கேடா ('Ndrangheta) என்னும் இத்தாலிய நிழல் உலக கும்பல் ஒன்று நச்சுக் கழிவுகள் கொண்ட சுமார் 30 கப்பல்களை கடலில் மூழ்கச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் பெரும்பாலானவை கதிர்வீச்சுக் கழிவுகள். இச்சம்பவத்தை அடுத்து கதிர்வீச்சு கழிவுகள் வெளியேற்றப்படுவதில் நடக்கும் மோசடிகள் பற்றி பரவலான விசாரணைகள் எழுந்தன.[68]
  • இரண்டாம் உலகப் போருக்குப் பின், சோவியத் ஒன்றியம், இங்கிலாந்து, அமெரிக்கா, மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரசாயன ஆயுதங்களை பால்டிக் கடலில் கொட்டின. இது சூழல் மாசுபாட்டுக் கவலைகளை எழுப்பியது.[69][70]

ஒலி மாசுபாடு

கடந்து செல்லும் கப்பல்கள், எண்ணெய் ஆய்வுகள், மற்றும் கடற்படையின் குறைந்த அதிர்வெண் எதிரொலிமானிகள் போன்ற ஆதாரங்களில் இருந்து ஒலி அல்லது சத்த மாசுபாடு கடல்வாழ்வில் ஏற்படக் கூடும். ஒலியானது வளிமண்டலத்தை விடவும் கடலில் துரிதமாகவும் நெடுந்தொலைவும் பயணிக்கத்தக்கது. கடல் விலங்குகள் பெரும்பாலும் பலவீனமான கண்பார்வை கொண்டவை. இவை பெரும்பாலும் எதிரொலிக்கும் தகவலமைப்பு கொண்டு தான் செயல்படுகின்றன. கடலின் மிக ஆழத்தில் வாழும் மீன் வகைகளுக்கும் இது பொருந்தும்.[71] 1950 மற்றும் 1975 ஆம் ஆண்டிற்கு இடையே கடலில் ஒலி அளவு சுமார் பத்து டெசிபல்கள் அதிகமுற்றுள்ளது (அதாவது பத்து மடங்கு அதிகரிப்பு).[72]

இந்த ஒலி மாசுபாட்டால் உயிரினங்கள் தங்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளில் உரக்க பேசும்படி ஆகிறது.[73] நீருக்கடியிலான கலங்களின் கண்டறிவுக் கருவிகள் இயங்கும் சமயத்தில் திமிங்கலங்களின் ரீங்காரங்கள் நீளமாய் இருப்பதைக் காணலாம்.[74] அவை உரக்க பேசா விட்டால், அவற்றின் குரல் மனிதன் உருவாக்கும் ஒலிகளில் காணாமல் போய் விடும். எச்சரிக்கை, இரை கண்டுபிடிப்பு அல்லது வலையில் இருந்து தப்புவதற்கான தயாரிப்பு என இந்த குரல்கள் பல விஷயங்களை வெளிப்படுத்தலாம். ஒரு உயிரினம் உரத்த குரலில் பேசத் துவங்கும்போது, அது மற்ற உயிரினங்களின் குரலை அமுக்கி விடுகின்றது. ஆக மொத்த உயிரினச்சூழலுமே உரக்கப் பேசும்படி ஆகி விடுகிறது.[75]

கடல் ஆய்வு நிபுணரான சில்வியா எர்லி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “கடலுக்கடியிலான ஒலி மாசுபாடு என்பது கொஞ்சம் கொஞ்சமாய் அழிவு ஏற்படுத்தும் வகையாகும். ஒவ்வொரு ஒலியும் தனித்தனியாக அதனளவில் பெரிய கவலைக்குரியதாக இல்லாமல் போகலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால் கப்பல்கள், கடல் பூகம்ப ஆய்வுகள், ராணுவ நடவடிக்கை எல்லாம் சேர்ந்து 50 வருடங்களுக்கு முன்பிருந்த ஒரு சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதொரு சூழலை உருவாக்கி விடுகின்றன. ஒலியின் இந்த மிகை அளவானது கடல் வாழ்க்கையில் ஒரு கடினமான பரவலான பாதிப்பைக் கொண்டிருக்கும்.”[76]

தகவமைவு மற்றும் தணிப்பு

டப்பாக்கள் கடற்கரையை மாசுபடுத்துகின்றன.


மனிதன் உருவாக்கும் மாசுபாட்டில் அநேகமானவை கடலில் சென்று முடிகின்றன. ஜோர்ன் ஜென்சன் (2003) தனது கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ”மனித மாசுபாடு உயிரியல் பன்முகத்தன்மையை குறைத்து கடல் சூழலமைப்புகளின் உற்பத்தித் திறனைப் பாதிக்கக் கூடும். இது மனிதனின் கடல் உணவு ஆதாரவளங்களை குறைத்து பற்றாக்குறையாக்கி விடும்.” (ப.A198). இந்த மாசுபாட்டின் ஒட்டுமொத்த அளவைக் குறைப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன: ஒன்று மனித மக்கள்தொகை குறைய சரி மனிதன் வெளியிடும் சூழலியல் தடத்தின் அளவைக் குறைப்பதற்கு ஒரு வழி காணப்பட வேண்டும். இரண்டாவது வழி கைக்கொள்ளப்படாவிட்டால், முதலாவது வழி பின்பற்றப்படுவதன் மூலம் உலக சுற்றுச்சூழல் தடுமாறாமல் பாதுகாக்கலாம்.

இரண்டாவது வழியாக மனிதர்கள் தாங்கள் மாசுபடுத்தும் அளவை விழிப்புடன் குறைக்க வேண்டும். சமூக உறுதியும் அரசியல் உறுதியும் இதற்கு அவசியம். அத்துடன் விழிப்புணர்விலும் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். அப்போது தான் மனிதர்கள் சுற்றுச்சூழலை மதிக்கக் கற்றுக் கொள்வதோடு அதனை துஷ்பிரயோகம் செய்ய தயங்குவார்கள். அத்துடன் நடைமுறைக் கட்டுப்பாடுகளும் சர்வதேச அரசாங்க பங்கேற்பும் அவசியமாகும். பல சமயங்களில் கடல் மாசுபாடு என்பது சர்வதேச எல்லைகளைக் கடந்து சந்திப்பதால் அதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிக்கலாகி விடுகிறது. ஏனென்றால் கட்டுப்பாடுகளை உருவாக்குவதும் அமலாக்குவதும் கடினமாகி விடுகிறது.

கடல் மாசுபாட்டைக் குறைப்பதில் மிகவும் முக்கியமான உத்தியாக இருப்பது கல்வியே. பலருக்கு கடல் மாசுபாடு ஏற்படும் விதம் குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் தெரிவதில்லை. எனவே இப்பிரச்சினையை நிவர்த்தி செய்வதில் அது ஒரு சிக்கலாக அமைகிறது. அனைத்து உண்மைகளையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்றால், சூழ்நிலையின் முழுமையான அளவு குறித்து ஆழமான ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். பின் இந்த விபரங்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

சீனர்கள் இடையே சுற்றுச்சூழல் கவலை குறைந்து இருப்பதற்கு காரணம் இது குறித்த பொது விழிப்புணர்வு குறைந்து காணப்படுவது தான் என்று டாவோஜி அண்ட் டேக் நிறுவனத்தின் ஆராய்ச்சி[77] தெரிவிக்கிறது. இதேபோல் இத்தகைய ஆழமான ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்த கட்டுப்பாடுகள் கலிபோர்னியாவில் அமலாக்கப்பட வேண்டும். விவசாய வடிநீரில் இருந்து கலிபோர்னியாவின் கடலோர நீர்ப்பரப்பைப் பாதுகாக்க ஏற்கனவே இத்தகைய கட்டுப்பாடுகள் செயலில் இருத்தப்பட்டுள்ளன. கலிபோர்னியா நீர் நெறிமுறைகள் மற்றும் பல்வேறு தன்னார்வ திட்டங்கள் இதில் அடங்கும். இதேபோல், இந்தியாவில் கடல் மாசுபாட்டைக் குறைப்பதற்கு பல உத்திகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் அவை குறிப்பிடத்தகுந்த அளவில் பிரச்சினையைத் தீர்க்க உதவவில்லை. இந்தியாவின் சென்னை மாநகரில், சாக்கடை நீர் திறந்த நீரில் கலக்கப்பட்டு பல சீர்கேடுகளை உருவாக்கியிருப்பது கண்டுணரப்பட்டு உள்ளது.

மேலும் காணவும்

  • நீடிக்கும் கரிம மாசுபாடுகள் குறித்த ஸ்டாக்ஹோம் பொது இணக்கம்

குறிப்புகள்

குறிப்புதவிகள்

  • Ahn, YH; Hong, GH; Neelamani, S; Philip, L and Shanmugam, P (2006) Assessment of Levels of coastal marine pollution of Chennai city, southern India. Water Resource Management, 21(7), 1187-1206.
  • Daoji, L and Dag, D (2004) Ocean pollution from land-based sources: East China sea. AMBIO – A Journal of the Human Environment, 33(1/2), 107-113.
  • Dowrd, BM; Press, D and Los Huertos, M (2008) Agricultural non-point sources: water pollution policy: The case of California’s central coast. Agriculture, Ecosystems & Environment , 128(3), 151-161.
  • Laws, Edward A (2000) Aquatic Pollution John Wiley and Sons. ஐஎஸ்பிஎன் 0195167015
  • Sheavly, SB and Register, KM (2007) Marine debris and plastics: Environmental concerns, sources, impacts and solutions. Journal of Polymers & the Environment, 15(4), 301-305.
  • Slater, D (2007) Affluence and effluents. Sierra 92(6), 27
  • UNEP (2007) Land-based Pollution in the South China Sea . UNEP/GEF/SCS Technical Publication No 10.

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கடல்_மாசுபாடு&oldid=3928465" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை