கண்ணகி சிலை

சென்னையில் உள்ள சிலை

கண்ணகி சிலை என்பது தமிழ்நாட்டின், தலைநகரான சென்னையின் மெரீனா கடற்கரையில் வைக்கபட்டுள்ள ஒரு வெண்கலச் சிலையாகும். இது பாரதி சாலை மற்றும் கமராசர் சலை ஆகியவை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. கையில் ஒற்றைச் சிலம்புடன், தலைவிரி கோலமாக பாண்டியனிடம் நீதி கேட்பது போன்ற தோறத்தில் 2, சனவரி, 1968 அன்று அமைக்கபட்டது.[1]

கண்ணகி சிலை

வரலாறு

தி.மு.க முதன்முதலில் 1967 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடித்து அண்ணாதுரை முதலமைச்சராக ஆனார். அவர் முதலமைச்சராக ஆனபிறகு சென்னையில் 1968 இல் இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை முன்னின்று நடத்தினார். அப்போது சென்னை மெரீனா கடற்கரையில் தமிழ் ஆளுமைகளுக்கு சிலைகள் வைக்கபட்டன.[2] அவற்றில் சிலப்பதிகார காப்பியத்தின் நாயகியான கண்ணகிக்கு வைக்கப்பட்ட சிலையும் ஒன்றாகும்.[3]

ஜெ. ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக இரண்டாவதாக முறையாக 2001 ஆண்டு பொறுப்பேற்றார். டான்சி நிலபேர வழக்கிலும், பிளெசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும் தண்டணை பெற்ற ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றது செல்லாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் தன் பதவியை இழந்தார். இதனையடுத்து ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பற்றார். இதன்பிறகு 2001 திசம்பர் 10 அன்று இரவோடு இரவாக கண்ணகி சிலை அங்கிருந்து அகற்றபட்டது. சரக்குந்து மோதி, அதன் பீடம் சேதமடைந்துவிட்டதால் சிலை அகற்றப்பட்டதாக அரசு விளக்கம் கூறியது.[4] சிலை எங்கு உள்ளது என்ற தகவலும் யாருக்கும் தெரிவிக்கபடவில்லை. சிலையின் பீடமும் அகற்றபட்டு அந்த இடத்தில் விரைந்து சாலை அமைக்கபட்டது. இந்திலையில் ஜெயலலிதா தினமும் போயஸ் தோட்டதில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு செல்லும் வழியில் இச்சிலை உள்ளதால் தலைவிரிகோலமாக உள்ள கண்ணகி சிலையை பார்ப்பதால் அவரது ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டதாக சோதிடர்கள் கூறியதால் சிலை அகற்றபட்டதாக கருத்து நிலவியது.[5][1] 1968 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டை மேற்பார்வையிட்ட அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சரும் திமுக தலைவருமான மு. கருணானிதி, சிலையை அகற்றபட்டது "தமிழ் பெருமைக்கு வடிப்பட்ட ஒரு சவால்" என்று கூறினார்.[3] மேலும் கண்ணகி சிலை அகற்றப்பட்டதற்கு பல அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் எழுத்தாளர்களும், தமிழறிஞர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கடற்கரையில் வேறு ஒரு இடத்தில் கண்ணகி சிலை நிறுவப்படும் என்று அரசு அறிவித்தது. எனினும் சிலையை மீண்டும் நிறுவவே இல்லை.[6] கண்ணகி சிலை அகற்றப்பட்டதற்கு எதிராகவும் சிலையை மீண்டும் அங்கே நிறுவ்வேண்டும் என்றும் மா. நன்னன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.[7]

2006 ஆம் ஆண்டு மு. கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி மீண்டும் அமைந்த பிறகு சென்னை அரசு அருங்காட்சியகத்தில் கிடத்தி வைக்கபட்டிருந்த சிலையை மீண்டும் எடுத்து, சிலையை புணரமைத்து 2016 சூன் 3 அன்று மீண்டும் அதே இடத்தில் வைக்கபட்டது.[8][9]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கண்ணகி_சிலை&oldid=3594184" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை