கதிரலைக் கும்பா

ரேடார் (Radar) அல்லது தொலைக்கண்டுணர்வி அல்லது கதிரலைக் கும்பா என்பது மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி விமானங்கள், கப்பல்கள், மோட்டார் வாகனங்கள், வளிமண்டல உருவாக்கங்கள் போன்றவற்றின் தரிப்பிடம், திசை, வேகம் போன்றவற்றைக் கணிக்கும் கருவித் தொகுதியாகும். ரேடார் என்பது Radio Detection and Ranging[1][2] அல்லது RAdio Direction And Ranging.[3][4] என்பதன் சுருக்கம் ஆகும்.

ரேடாரானது வானொலி அலைகள் அல்லது நுண் அலைகளை அனுப்பி இலக்கில் அவை பட்டுத் தெறித்து வருவதைப் பெற்றுக் கணிப்புக்களை மேற்கொள்கின்றன. தெறித்துவரும் சமிக்ஞைகள் வலிமை குறைந்தனவாக இருந்தாலும் அவை பெருப்பிக்கப்படுகின்றன. இதன்மூலம் மிகத் தொலைவில் உள்ள இலக்குகளையும் இனங்காண முடிகிறது.

போர் விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றின் நடமாட்டத்தை அறியும் இராணுவத் தேவைகளுக்கும் வாகனங்களின் வேகங்களைக் கணித்தல், கடல் அலைகளை அவதானித்தல் போன்ற தேவைகளுக்கும் ரேடார்கள் பயன்படுகின்றன

வரலாறு

ரேடாரின் உருவாக்கத்துக்குப் பல கண்டுபிடிப்பாளர்களும் அறிவியலாளர்களும் பங்களித்துள்ளனர். 1904 இல் கிறிஸ்ரியன் அல்ஸ்மேயர் என்பவர் பனிப்புகாரில் கப்பலொன்று நிற்பதை வானொலி அலைகள் மூலம் கண்டறியலாம் என்பதைச் செய்துகாட்டினார். ஆயினும் அது எவ்வளவு தூரத்தில் நிற்கிறதென்பது உணரப்படவில்லை. 1917 இல் நிக்கொலா ரெஸ்லா முதல் ரேடார் தொகுதிக்கான அலைநீளம், வலு அளவு போன்றவை தொடர்பிலான கருதுகோளை வெளியிட்டார். இரண்டாம் உலகப் போரின் முன்னர் அமெரிக்கர்கள், செருமானியர்கள், பிரித்தானியர் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகள் முதல் உண்மையான ரேடார் உருவாகக் காரணமானது. 1930 களில் பிரித்தானியா, அங்கேரி, பிரான்சு நாட்டவர்கள் ரேடார்களை உருவாக்கியிருந்தனர்.

அடிப்படையில் இராணுவத் தேவைகளுக்காகவே ரேடார் உருவாகியிருந்தாலும் போரின் பின்னரான காலங்களில் மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டதோடு ஏனைய துறைகளிலும் பயன்படலானது.

குறியீடுகள்

மின்காந்த அலைகளின் அதிர்வெண்ணின் பரவலை குறிக்கும் ஆங்கில எழுத்து குறியீடுகள்:[5]

பட்டை எழுத்து (Band letter)அதிர்வெண் பரவல்
HF3-30 MHz
VHF30-300 MHz
UHF300-1000 MHz
L1–2 GHz
S2–4 GHz
C4–8 GHz
X8–12 GHz
Ku12–18 GHz
K18–27 GHz
Ka27–40 GHz
V40–75 GHz
W75–110 GHz
mm110–300 GHz

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கதிரலைக்_கும்பா&oldid=3608250" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை