காளிந்தி சரண் பாணிகிரகி

காளிந்தி சரண் பாணிகிரகி (Kalindi Charan Panigrahi) (2 ஜூலை 1901 - 15 மே 1991) ஒரு புகழ் பெற்ற ஒடியா கவிஞர், நாவலாசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர் மற்றும் கட்டுரையாளரும் மாத்திரா மனிஷா என்ற மாபெரும் படைப்புக்காக பிரபலமானவரும் ஆவார். ஒடியா இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காக அவருக்கு பத்ம பூஷன் மற்றும் சாகித்ய அகாதமி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

காளிந்தி சரன் பாணிகிரகி
பிறப்பு(1901-07-02)சூலை 2, 1901[1]
Biswanathpur, Puri, India [2]
இறப்புமே 15, 1991(1991-05-15) (அகவை 89) [2][3]
Cuttack
மொழிOdia
கல்வி நிலையம்Ravenshaw College
காலம்Early 20th century
வகைFiction, Poetry , Drama
இலக்கிய இயக்கம்Sabuja Juga
குறிப்பிடத்தக்க படைப்புகள்Matira Manisha
குறிப்பிடத்தக்க விருதுகள்Padma Bhushan
பிள்ளைகள்நந்தினி சத்பதி
குடும்பத்தினர்Bhagabati Charan Panigrahi(brother)

ஆரம்ப கால வாழ்க்கை

காளிந்தி சரண் 1901 ஆம் ஆண்டு சூலை 2 ஆம் தேதி பூரி மாவட்டத்தில் உள்ள பிசுவநாத்பூரில் பிறந்தார். இவரது தந்தை சுவப்னேசுவர் பாணிகிரகி மற்றும் தாயார் சரசுவதி பாணிகிரகி ஆவர். இவரது தந்தை ஒரு வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இவர் பூரி ஜில்லா பள்ளியில் படித்தார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கட்டாக்கில் உள்ள ராவன்சா கல்லூரியில் படித்தார். அதன் போது இவர் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார் [4]

இலக்கிய வாழ்க்கை

இவர் ராவன்சா கல்லூரியில் படிக்கும் போது "நான்சென்ஸ் கிளப்" என்ற ஒரு அமைப்பை நிறுவினார். இவர் தனது எழுத்தாளர் நண்பர்களுடன் சேர்ந்து "அபகாஷ்" என்ற கையெழுத்துப் பத்திரிகையை வெளியிட்டார், அது பின்னர் "சக்தி சாதனா" என மறுபெயரிடப்பட்டது. காளிந்தி சரண பாணிகிரகியின் இளைய சகோதரர், ஒடிசாவில் மார்க்சியப் போக்கை நிறுவிய பகபதி சரணா பாணிகிரகி ஆவார். 1920 ஆம் ஆண்டில் "சபுஜா சமிதி" என்ற குழுவை உருவாக்கினார். இவரது எழுத்தாளர் நண்பர்களான அன்னதா சங்கர் ரே மற்றும் பைகுந்தா பட்நாயக் ஆகியோரும் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் ரவீந்திரநாத் தாகூரின் காதல் எண்ணங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். [5] 'சபுஜா' என்ற வார்த்தை பிரமதா சவுத்ரி வெளியிட்ட பெங்காலி இதழான சபுஜ்பத்ராவிலிருந்து ஈர்க்கப்பட்டது. இது ஒடியா இலக்கியத்தில் சபுஜா ஜுகா என்று அழைக்கப்படும் குறுகிய கால ஆனால் செல்வாக்குமிக்க இயக்கத்திற்கு வழிவகுத்தது. இந்த இயக்கம் வாழ்ந்த காலத்தில், 'சபுஜா கபிதா'வுக்கு ஏழு கவிதைகள் எழுதினார். இவரது மற்ற முக்கியமான படைப்புகள் 'சுரிதியே லோடா', 'மோ கபிதா', 'இக்சியானிகா சத்யா' போன்றவை. [6] 1930 களில் முற்போக்கு மார்க்சிஸ்ட் இயக்கம் ஒடியா இலக்கியத்தில் முழு வீச்சில் ஆதிக்கம் செலுத்தியது. சபுஜா இயக்கம் பின்னர் ஒடியாவில் பிரகதி யுகம் என்று அழைக்கப்படும் முற்போக்கு இயக்கத்திற்கு வழிவகுத்தது. பின்னர் காளிந்தி சரண பாணிகிரகி காந்திய சிந்தனையின் தாக்கத்தால் தனது புகழ்பெற்ற நாவலான மாத்திரா மனிஷாவை எழுதினார்.

இவர் ஒரு காலத்தில், ஆங்கில இதழ்கள், பஞ்ச பிரதீபா மற்றும் மயூர்பஞ்சா குரோனிக்கல் ஆகியவற்றின் ஆசிரியராக இருந்தார்.

குடும்பம்

இவரது மூத்த மகள் நந்தினி சத்பதி நீ பாணிகிரகி 1931 ஆம் ஆண்டில் பிறந்தார், பின்னர் இவர் ஒடிசாவின் முதலமைச்சரானார் . [7]

இவரது இளைய சகோதரர் பகபதி சரணா பாணிகிரஹி ஒடிசாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் ஆவார். இந்தியாவின் சுதந்திரத்திற்காக பகபதியின் பெரும் பங்களிப்பு வரலாற்றில் குறைவாகவே உள்ளது, ஏனெனில் அவர் சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஆங்கிலேயர்களால் மெல்லக் கொல்லும் நச்சு ஊட்டப்பட்டார். இவரது பேரன் ததகட சத்பதி ஒரு அரசியல்வாதி மற்றும் இந்திய நாடாளுமன்றத்திற்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தித்தாள் உரிமையாளர் ஆவார். இவரது கொள்ளுப் பேரன் சுபர்னோ சத்பதி ஒரு பிரபலமான கட்டுரையாளரும் அரசியல் தலைவரும் மற்றும் விருது பெற்ற சமூக ஆர்வலரும் ஆவார்.

விருதுகளும் கௌரவங்களும்

1971 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமியின் பெல்லோஷிப் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[8] அதே ஆண்டில், இந்திய அரசால் அவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது. [9] 1976 ஆம் ஆண்டில், சம்பல்பூர் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டி.லிட் பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தியது.

குறிப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை