கிசன்

பண்டைய சைபிரசு நகரம்

கிசன் (Kition, கிரேக்கம்: Κίτιον , Kítion ; Phoenician , KT, [3] அல்லது 𐤊‬𐤕𐤉 , KTY ;[4] ) என்பது சைப்ரசின் தெற்கு கடற்கரையில் (இன்றைய இலார்னாக்காவில் ) இருந்த ஒரு நகர அரச ஆகும். கத்தாரி தளத்தின் அகழ்வாராய்ச்சி குழிக்கு மிக அருகில் உள்ள பலகையில் காணப்படும் உரையின் படி (2013 இன் படி), இந்த நகரானது கி.மு. 13 ஆம் நூற்றாண்டில் திரோயன் போருக்குப் பிறகு கிரேக்க (அச்செயன்) குடியேறிகளால் நிறுவப்பட்டது.

கிசன்
Κίτιον
கிமு 13வது நூற்றாண்டு–கிபி 342 [1]
கிசனின் அமைவிடம்
கிசனின் அமைவிடம்
தலைநகரம்கிசன்
பேசப்படும் மொழிகள்பண்டைய கிரேக்க மொழி[2]மற்றும் பொனீசியன்[2]
சமயம்
பண்டைய கிரேக்க சமயம்/பண்டைய கானானிய சமயம்
அரசாங்கம்சிறு இராச்சியம்
வரலாற்று சகாப்தம்Classical Antiquity
• தொடக்கம்
கிமு 13வது நூற்றாண்டு
• முடிவு
கிபி 342 [1]
நாணயம்Stater, obol
தற்போதைய பகுதிகள்சைப்பிரசு
சைப்ரஸின் பன்னிரண்டு பண்டைய கிரேக்க நகர அரசுகளைக் காட்டும் வரைபடம்

இங்கு வசித்தவர்களில் மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டவர், சிடியத்தின் ஜெனோ ஆவார். கிமு 334 இல் பிறந்த இவர் உறுதிப்பாட்டவத தத்துவப் பள்ளியின் நிறுவனர் ஆவார். அவர் ஏதென்சில் கிமு 300 முதல் கற்பித்தார்.

வரலாறு

இந்த நகர அரசு கிமு 13 ஆம் நூற்றாண்டில் முதலில் நிறுவப்பட்டது.[5]

மைசீனியர்கள் முதன்முதலில் தாமிரத்தை அகழ்வதற்காக இப்பகுதியில் குடியேறினர். ஆனால் அந்தக் காலத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான குழப்பம் மற்றும் பதகளிப்பு போன்றவற்றின் விளைவாக குடியேற்றம் மறைந்தது.[6]

கி.மு 1200 மற்றும் கி.மு 1000 க்கு இடையில் தோன்றிய புதிய கலாச்சார கூறுகள் ( மட்பாண்டங்கள், புதிய கட்டிடக்கலை வடிவங்கள் மற்றும் யோசனைகள்) கிசனின் முதல் கிரேக்க குடியேறிகளான அக்கீயர்களின் வருகைக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்களின் அறிகுறிகளாகும்.[7]

பையன்ஸ் கோப்பை, கிமு 13வது நூற்றாண்டு, நிகோசியா அருங்காட்சியகம்

கிமு 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், நகரம் பெரிய அளவில் மீண்டும் கட்டப்பட்டது; அதன் சுடாத செங்கலான நகரச் சுவர்கள் அகற்றபட்டு கற்றகலால் கட்டப்பட்டது.[8] கிமு 1000 வாக்கில், நகரத்தின் சமயப் பகுதி கைவிடப்பட்டது. இருப்பினும் கல்லறைகளில் உள்ள கண்டுபிடிப்புகளின்படி மற்ற பகுதிகளில் வாழ்க்கை நடத்தப்பட்டதாக தெரிகிறது.[9]

கி.மு. 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த கிட்டியனில் ஆரம்பகால போனீசியர்கள் குடியிருப்பு இருந்ததாக இலக்கியச் சான்றுகள் தெரிவிக்கின்றன.[10] டயரிலிருந்து வந்ததாக நம்பப்படும் சில போனீசிய வணிகர்கள் இப்பகுதியில் குடியேற்றங்களை நிறுவினர். மேலும் கிடிஷனின் அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்தினர். பிறகு கிமு 850 இல் சிற்றாலயங்கள் போனீசியர்களால் மீண்டும் கட்டப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டன.[7]

ஜீயஸ் கெரானியோஸ், கிமு 500-480, நிகோசியா அருங்காட்சியகம்

இந்த நகர அரசானது கிமு 570 முதல் 545 வரை எகிப்திய ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.[11] பாரசீகம் சைப்ரசை கிமு 545 முதல் ஆட்சி செய்தது.[11] கிமு 500 முதல் நகரத்தின் மன்னர்கள் பெயர்கள் போனீசிய நூல்கள் மற்றும் நாணயங்களில் குறிப்பிடப்படுகின்றன.[12]

மார்குரைட் யோன், இலக்கிய நூல்கள் மற்றும் கல்வெட்டுகள் செவ்வியல் காலத்தில் கிசன் அதன் அண்டை நாடான சலாமிசுடன் முக்கிய உள்ளூர் சக்திகளில் ஒன்றாக இருந்ததாகக் கூறுகிறது.[12] கிமு 499 இல் சைப்ரஸ் இராச்சியங்கள் (கிசன் உட்பட) பாரசீகத்துக்கு எதிரான அயோனியன் கிளர்ச்சியில் இணைந்து ஈடுபட்டன.[13]

சைப்ரசில் பாரசீக ஆட்சி கிமு 332 இல் முடிவுக்கு வந்தது.

கிமு 312 இல் தாலமி சைப்ரசைக் கைப்பற்றினார் மற்றும் கிசனின் போனீசிய மன்னரான பௌமியாத்தோனைக் கொன்று கோயில்களை எரித்தார்.[11] சிறிது காலத்திற்குப் பிறகு சைப்ரஸ் நகர அரசுகள் கலைக்கப்பட்டன மற்றும் கிசனின் போனீசிய வம்சம் ஒழிக்கப்பட்டது. இச்சம்பவங்களைத் தொடர்ந்து அப்பகுதி சமயத் தன்மையை இழந்தது.[14]

இருப்பினும், பிரேயசில் நிறுவப்பட்ட கிசனில் இருந்து ஒரு வர்த்தகக் குடியேற்றம் செழுமையடைந்தது. கிமு 233 இல் அவர்கள் அஸ்டார்ட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவிலைக் கட்டுவதற்கான அனுமதியைக் கோரி பெற்றனர்.[15]

கிமு 58 இல் சைப்ரஸ் உரோமுடன் இணைக்கப்பட்டது.[16]

கி.பி 76 மற்றும் அதற்கு அடுத்த ஆண்டில் வலுவான நிலநடுக்கங்களை நகரம் சந்திதது. ஆனால் உரோமானிய காலத்தில் நகரம் செழிப்பாக இருந்ததாகத் தெரிகிறது. செப்டிமியஸ் செவெரஸின் ஆட்சியின் போது கியூரேட்டர் சிவிடடிஸ் அல்லது நகரத்தின் நிதி நிர்வாகி உரோமில் இருந்து கிசனுக்கு அனுப்பப்பட்டார்.[16]

கி.பி 322 மற்றும் 342 இல் ஏற்பட்ட பூகம்பங்கள் "கிசன் மட்டுமல்ல, சலாமிஸ் மற்றும் பாஃபோசையும் அழித்தது".

கிசன் தொல்லியல் தளங்கள்

கிசன் முதன்முதலில் முறையாக [17] 1929 இல் ஸ்வீடிஷ் சைப்ரஸ் தொல்லியல் ஆய்வுக்குழுவால் அகழ்வாய்வு செய்யப்பட்டது ( ஐனார் ஜெர்ஸ்டாட்டின் வழிகாட்டுதலின் கீழ்).

கத்தாரி பகுதிக்கு அருகில் தொல்லியல் ஆய்வுகள் தொடர்கின்றன. எர்குலிசின் பணிகளை சித்தரிக்கும் அற்புதமான 20மீ நீளமுள்ள உரோமன் மொசைக் 2016 இல் ஒரு குளியல் கட்டிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[18] இது கிரியாகோ மாட்சி தெருவின் கீழ் சாக்கடையை சுத்தம் செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டது. இது அருங்காட்சியகத்திற்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[19]

கத்தாரி தளம் (ஏ.கே.ஏ பகுதி II)

பெரிய கோவில், கிசன்

இந்த தளம் பாம்புலா தளத்திற்கு வடக்கே 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மற்றும் சில சமயங்களில் "கிசன் பகுதி II" என்று குறிப்பிடப்படுகிறது.[5] தொல்பொருட்கள் துறை (வாஸ்ஸோஸ் கராகோர்கிஸின் வழிகாட்டுதலின் கீழ்) 1959 இல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியது.[20][21] அது 1981 வரை தொடர்ந்தது.

அகழ்வாய்வுகளில் கிமு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதுகாப்புச் சுவரின் ஒரு பகுதி [22] மற்றும் சைக்ளோபியன் சுவர்கள் உட்பட ஐந்து கோயில்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டன. மிகப்பெரிய கோவிலின் (கிடைமட்ட) பரிமாணங்கள் 35 மீ 22 மீ ஆகும்.[23]

ஃபீனீசியன் கப்பல் கட்டும் தளம், கிசன்

பாம்பூலா தளம்

சர்கான் ஸ்டெல் ; லார்னாகா அருங்காட்சியகத்தில் உள்ள பிரதி, அசல் பெர்லின்

இந்த தளம் லார்னாகா அருங்காட்சியகத்திற்கு வடக்கே 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1845 ஆம் ஆண்டில், சர்கோன் ஸ்டெல் இங்கே கண்டுபிடிக்கப்பது. தற்போது இலூவாவில் உள்ள பொன்முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பலகை இங்கே கண்டுபிடிக்கப்பட்டது.

1913 இல் ஒரு பிரித்தானிய குழு முதலில் இந்த இடத்தை அகழ்ந்தது.

லியோன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பிரெஞ்சு குழு [17] 1976 இல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியது.[24][25] கி.மு. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த குடியேற்றத்தின் தடயங்கள் பம்பூலாவில் உள்ள துறைமுகத்திற்கு அடுத்த அரண்களில் கண்டுபிடிக்கப்பட்டன.[12] இந்த தளம் அஸ்டார்ட்டின் சிற்றாலயம் மற்றும் மெல்கார்ட்டின் சிற்றாலயத்தையும் கொண்டுள்ளது.[17] ஆரம்பகால சிற்றாலயம் கிமு 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[26]

கிமு 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போர்க்கப்பல்களுக்கான போனீசியன் துறைமுகம் 1987 [27] இல் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கிசன்&oldid=3700029" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்