தாலமி சோத்தர்

தாலமி முதலாம் சோத்தர் (Ptolemy I Soter) (கிமு 367 – 283/282) பண்டைய கிரேக்க மாசிடோனியப் பேரரசர் அலெக்சாந்தரின் போர்ப்படைத்தலைவர்களில் ஒருவர்.[1][2][3][4][5]

தாலமி சோத்தர்
முதலாம் தாலமி சோத்தரின் சிற்பம், இலூவா அருங்காட்சியகம், பாரிசு
பார்வோன்
ஆட்சிக்காலம்கிமு 305 – 283/282
முன்னவர்நான்காம் அலெக்சாண்டர்
பின்னவர்இரண்டாம் தாலமி பிலடெல்பியஸ்
அரச பட்டங்கள்
  • Prenomenstp.n-rꜤ mrj-jmn
    Setepenre meryamun
    Chosen by Ra and beloved of Amun
    M23L2
    C2C12stp
    n
    N36
    M23L2
    C12N36
    n
    stp
    C2
    M23L2
    <
    C2C12st
    p
    stp
    N36
  • Nomen: ptwꜢlwmys
    Petualumys
    Ptolemaios
    G39N5
    p
    t
    wAl
    M
    iis
    G39N5
    p
    d
    Al
    M
    iis
    G39N5
    p
    d
    wl
    M
    iis
    G39N5
    p
    d
    wl
    M
    iis
  • Horus namewr-pḥtj nsw-ḳnj
    Werpekhty nesuqeny
    Great of strength and brave king
  • G5
    wr
    r
    F9
    F9
    swA43q nw
    n
    a
  • நெப்டி பெயர்jṯj-m-sḫm ḥḳꜢ-ṯl
    Itjiemsekhem heqatjel
    He who has seized with power, the ruler of Sile
  • G16
    V15
    D40
    U31sxmU31qHqAd
    l
    D40

தாலமி சோத்தர்
பிறப்புகிமு 367
மக்கெடோனியா
இறப்புகிமு 283/2 BC (வயது 84)
அலெக்சாந்திரியா, தாலமைக் எகிப்து
வாழ்க்கைத்
துணை
  • அர்தகாமா (கிமு 324 – ??)
  • எயுரிடிஸ் (கிமு 321 – )
  • பெரினிஸ் (கிமு 317 – 283 )
பிள்ளைகள்13
உறவினர்கள்மெலெனஸ் (சகோதரர்)

கிமு 323ல் பாபிலொனில் பேரரசர் அலெக்சாந்தரின் மறைவிற்குப் பின்னர், கிரேக்கப் பேரரசின் தியாடோச்சி எனும் வாரிசுமைப் போரில், அலெக்சாந்தரின் ஐந்து போர்ப்படைத்தலைவர்களான, தாலமி சோத்தர், டயடோட்டஸ், செலூக்கஸ் நிக்காத்தர், ஆண்டிகோணஸ் சசாண்டர் மற்றும் லிசிமச்சூஸ் ஆகியோர் கிரேக்கப் பேரரசை தமக்குள் பிரித்து ஆண்டனர். இக்கிரேக்கப் படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசை ஆண்ட காலத்தை ஹெலனிய காலம் என்பர்.

தாலமி சோத்தர் (கிமு 323–283/2) நிறுவிய தாலமி வம்சத்தின் எகிப்தை மையமாகக் கொண்டு நிறுவப்பட்ட தாலமைக் பேரரசின் இறுதி காலத்தில் தற்கால எகிப்து, லிபியா மற்றும் துனிசியா நாடுகள் அடங்கியிருந்தது.

முதலாம் தாலமி சோத்தர், தாலமைக் வம்சத்தை நிறுவி தாலமைக் பேரரசை கிமு 323 முதல் கிமு 283 வரை ஆண்டார். இவரது வழித்தோன்றல்கள் கிமு 30 வரை மூன்று நூற்றாண்டுகள் ஆண்டனர். ஹெலனிய காலத்திய தாலமி சோத்தர் ஆட்சியில் எகிப்து பிரதேசத்தில் கிரேக்கப் பண்பாடு பரவியது. எகிப்து கடற்கரையில் அலெக்சாந்திரியா நகரம் சிறப்புடன் விளங்கியது.

தாலமி சோத்தரின் தாலமைக் பேரரசின் கிரேக்கப் பண்பாட்டு மையமாக அலெக்சாந்திரியா நகரம் விளங்கியது. இருப்பினும் பண்டைய எகிப்து மன்னர்களின் பெயரான பார்வோன் எனும் பட்டத்தை கிமு 305 முதல் இவரது வழித்தோன்றல்கள் சூட்டிக் கொண்டனர்.

தாலமி சோத்தரின் உருவம் பொறித்த தங்க நாணயம், பிரித்தானிய அருங்காட்சியகம், லண்டன்
கிமு 30ல் ஹெலனிய கால கிரேக்கப் படைத்தலைவர்களின் ஆட்சிப் பகுதிகள், தாலமி சோத்தரின் தாலமைக் பேரரசு (பச்சை நிறத்தில்)
கிமு 320ல் எருசலேத்தை தாலமி சோத்தர் கைப்பற்றும் காட்சி

யூக்ளிடு

தாலமி சோத்தர் பேரரசில் வாழ்ந்த யூக்ளிடு எனும் கிரேக்க கணிதவியல் அறிஞர் புதிய வடிவவியல் மற்றும் எண்ணியல் கோட்பாட்டை கண்டுபிடித்தார்.[6]

தாலமி வம்ச ஆட்சியாளர்கள்

  1. தாலமி சோத்தர் -ஆட்சிக் காலம் கிமு 303 – 282
  2. இரண்டாம் தாலமி - கிமு 285 – 246
  3. மூன்றாம் தாலமி - கிமு 246 – 221
  4. நான்காம் தாலமி - கிமு 221 – 203 - (சகோதரி & மனைவி முதலாம் கிளியோபாட்ரா)
  5. ஐந்தாம் தாலமி - கிமு 203 – 181
  6. ஆறாம் தாலமி - கிமு 181–164 மற்றும் 163 – 145 (சகோதரி & மனைவி இரண்டாம் கிளியோபாட்ரா)
  7. ஏழாம் தாலமி - ஆட்சி செய்யவில்லை
  8. எட்டாம் தாலமி - கிமு 170 – 163 மற்றும் 145 – 116)
  9. ஒன்பதாம் தாலமி - கிமு 116 –107 மற்றும் கிமு 88 – 81
  10. பத்தாம் தாலமி - கிமு 107 – 88 (சகோதரி & மனைவி நான்காம் கிளியோபாட்ரா)
  11. பதினொன்றாம் தாலமி - கிமு 80
  12. பனிரெண்டாம் தாலமி - கிமு 80–58 மற்றும் கிமு 55–51 (சகோதரி மற்றும் மனைவி ஐந்தாம் கிளியோபாட்ரா)
  13. பதிமூன்றாம் தாலமி - கிமு 51 - 47 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
  14. பதினான்காம் தாலமி - கிமு 47 – 44 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
  15. சிசேரியன் - கிமு 44 – 30 (ஏழாம் கிளியோபாட்ரா-ஜூலியஸ் சீசரின் மகன்)

கிளியோபாட்ராக்கள்

  1. முதலாம் கிளியோபாட்ரா
  2. இரண்டாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 145 – 116
  3. மூன்றாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 81 – 80
  4. நான்காம் கிளியோபாட்ரா
  5. ஐந்தாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58 – 57 மற்றும் 58 – 55
  6. ஆறாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58
  7. ஏழாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 51 – 30

படக்காட்சியகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டி

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ptolemy I
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
தாலமி சோத்தர்
பிறப்பு: கிமு 367 இறப்பு: 283
முன்னர்
பேரரசர் அலெக்சாந்தர்
பார்வோன்
கிமு 305–283/2
பின்னர்
இரண்டாம் தாலமி


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தாலமி_சோத்தர்&oldid=3833193" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை