கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்

கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (கி.ஐ.கோ.நே.) (ஆங்கில மொழி: Eastern European Summer Time - EEST) என்பது ஒ.ச.நே.+03:00 நேர வலயத்திற்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். இது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திற்கு மூன்று மணி நேரம் முந்தியதாகும். இது சில ஐரோப்பிய, வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வழக்கிலுள்ளது. இந்நாடுகள் குளிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நேரத்தைப் பயன்படுத்துகின்றன.

ஐரோப்பாவின் நேர வலயங்கள்:
வெளிர் நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00)
இளஞ்சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00)
மஞ்சள் கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00)
செம்மஞ்சள் கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00)
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00)
இளம் பச்சை மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00)
வெளிர் நிறங்கள், கோடைகால நேரத்தைப் பயன்படுத்தாத நாடுகளான அல்சீரியா, பெலருஸ், ஐசுலாந்து, மொரோக்கோ, உருசியா, துனீசியா மற்றும் துருக்கிவைக் குறிக்கின்றது.

பயன்பாடு

பின்வரும் நாடுகள், நாடுகளின் பகுதிகள் மற்றும் பிரதேசங்கள் குளிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நேரத்தினை பயன்படுத்துகின்றன:

  • பெலருஸ், 1991 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • பல்கேரியா, 1979 முதல்
  • சைப்ரஸ், 1979 முதல்
  • எஸ்தோனியா, 1989 முதல்; 1981-88 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • பின்லாந்து, 1981 முதல்
  • கிரீஸ், 1975 முதல்
  • இஸ்ரேல், 1948 முதல்
  • ஜோர்டான், 1985 முதல்
  • லத்வியா, 1989 முதல்; 1981-88 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • லெபனான், 1985 முதல்
  • லித்துவேனியா, 1989-97 மற்றும் 2003 முதல்; 1981-88 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது; 1998-2002 காலப்பகுதியில் மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • மோல்டோவா, 1932-40 மற்றும் 1991 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • ருமேனியா, 1932-40 மற்றும் 1979 முதல்
  • ரஷ்யா (கலினின்கிராட்), 1991 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது. 2011 மார்ச் முதல் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
  • சிரியா, 1983 முதல்
  • துருக்கி, 1970-78 மற்றும் 1985 முதல்; 1979-83 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • உக்ரைன், 1992 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை