கிழக்கு சைபீரியக் கடல்

ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியிலுள்ள ஒரு கடல்

கிழக்கு சைபீரியக் கடல் (East Siberian Sea, உருசியம்: Восто́чно-Сиби́рское мо́ре, ஒ.பெ வஸ்தோச்ன-சிபீர்ஸ்கயே மோரி) ஆர்க்டிக் பெருங்கடலின் விளிம்புப் பகுதியில் உள்ள கடலாகும். இது வடக்கில் ஆர்க்டிக் முனைக்கும் தெற்கில் சைபீரியாவின் கடற்கரைக்கும் மேற்கில் சைபீரியத் தீவுகளுக்கும் கிழக்கில் சுகோட்காவிற்கு அருகிலுள்ள பில்லிங்ஸ் முனை மற்றும் விராங்கேல் தீவிற்கும் இடையில் உள்ளது. இந்தக் கடல் மேற்கில் லாப்தேவ் கடல் மற்றும் கிழக்கில் சுக்கி கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

கிழக்கு சைபீரியக் கடல்
East Siberian Sea
கிழக்கு சைபீரியக் கடல்
ஆள்கூறுகள்72°N 163°E / 72°N 163°E / 72; 163
வகைகடல்
வடிநில நாடுகள்உருசியா
அமெரிக்க ஐக்கிய நாடு
மேற்பரப்பளவு987,000 km2 (381,000 sq mi)
சராசரி ஆழம்58 m (190 அடி)
அதிகபட்ச ஆழம்155 m (509 அடி)
நீர்க் கனவளவு57,000 km3 (4.6×1010 acre⋅ft)
உறைவுஅனேகமாக ஆண்டு முழுவதும்
மேற்கோள்கள்[1][2][3][4]

ஆர்க்டிக் பகுதியில் மிகவும் குறைவாக ஆய்விடப்பட்ட கடற்பகுதி இதுவேயாகும். இந்தப் பகுதி மிக மோசமான தட்பவெட்பநிலை, குறைவான நீர் உவர்ப்புத்தன்மை, குறைவான உயிரின வகைகள், குறைவான மக்கள் தொகை ஆகியவை இவற்றின் அடையாளமாக உள்ளன. இதன் கடற்பகுதி ஆழம் குறைந்த பகுதிகளை உடையதாகவும்,(பெரும்பாலும் 50 மீட்டருக்கும் குறைவானவை), மெதுவான கடல் நீரோட்டங்கள், தாழ் அலைகள் (25 செ.மீட்டருக்கும் கீழான), திடீர் மூடுபனி(குறிப்பாக கோடையில்), மற்றும் ஆகத்து - செப்டம்பர் மாதங்களில் மட்டுமே உருகக்கூடிய அதிகளவிலான பனிக்களங்கள் போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.  இண்டிகிர்கா, கொலிமா, செளன் மற்றும் பல ஆறுகள் இந்தக் கடலில் கலக்கின்றன. இப்பகுதியில் யுகாகிர், சுக்சி, ஏவன், எவங்கி போன்ற பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் மீன்பிடித் தொழில், வேட்டையாடுதல், ரெயின்டீர் வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

வடக்கு கடல் வழிப் பாதையின் மிக முக்கியமான தொழில்சார் நடவடிக்கைகளாக சுரங்கத் தொழில் மற்றும் கடல் பயணம் மேற்கொள்ளல் ஆகியவை உள்ளன; வணிகநோக்கில் செய்யப்படும் மீன்பிடித் தொழில் மிகவும் மோசமாக வளர்க்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய நகரம் மற்றும் துறைமுகமாக பெவெக் அமைந்துள்ளது. [5][6][7][8]

பெயர் வரலாறு

தற்போதைய பெயரானது, சோவியத் அரசாங்கத்தால், 1935 ஆம் ஆண்டு சூன் 27 ஆம் நாள் சூட்டப்பட்டது. முன்னதாக, இந்தக் கடலுக்கெனத் தனியான பெயர் கிடையாது. இந்தக் கடல் "இண்டிகிர்ஸ்கோ", "கொலிம்ஸ்கோ", "செவெர்னோ" (வடபகுதி), "சிபிர்ஸ்கோ" அல்லது "லெடோவிடோ" என ருஷ்யாவில் பலவிதமாக அழைக்கப்பட்டது.[9]

இட அமைவியல்

புதிய சைபீரியத் தீவுகளின் செயற்கைக்கோள் புகைப்படம், கிழக்கு சைபீரிய கடலின் இடதுபுறத்தில் காணப்படுகின்ற லேப்டேவ் கடல் மற்றும் கிழக்கு சைபீரியக் கடலின் பகுதி - வலது புறத்தில்.

இக்கடற்பரப்பானது ஆர்க்டிக் பெருங்கடலை நோக்கிய வடக்குப்பகுதியில் திறந்த வகையில் இருப்பதால், கிழக்கு சைபீரியக் கடலின் முக்கிய குடாக்கள், கொலிமா விரிகுடா, கொலிமா வளைகுடா மற்றும் செளன்ஸ்கயா விரிகுடா ஆகியவை ஆகும். இவையனைத்தும் தென் எல்லைகளில் அமைந்துள்ளன. கிழக்கு சைபீரியக் கடலின் மையப்பகுதியில் எந்தவொரு தீவும் அமைந்திருக்கவில்லை. ஆனால், சில தீவுகளும், தீவுக்கூட்டங்களும் கடற்கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ளன. அவை, அயோன் தீவு மற்றும் மெட்வ்யேழி தீவுக்கூட்டங்கள் ஆகியவையாகும். இந்தத் தீவுக்கூட்டங்களின் மொத்தப்பரப்பு 80 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமே.[10] சில தீவுகள் பெரும்பாலும் மணலையும், பனிக்கட்டிகளையுமே கொண்டுள்ளன.[2]

காலநிலை

காலநிலையானது துருவப்பகுதி காலநிலையாக உள்ளது. மேலும், கண்டப்பகுதி, அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல் காலநிலையால் பாதிக்கப்படுகிறது. குளிர்காலத்தில், இது பெரும்பாலும் கண்டப்பகுதி காலநிலையால் பாதிக்கப்படுகிறது. 6-7 மைல்கள் / வினாடி (15 & nbsp; மைல்கள்/மணி, 25 & nbsp; கிமீ / மணி) வேகம் கொண்ட தென்மேற்கு மற்றும் தெற்குக் காற்றானது சைபீரியாவில் இருந்து குளிர்ந்த காற்றைக் கொண்டுவருகிறது. ஆகையால், ஜனவரி மாதத்தில் சராசரி வெப்பநிலை -30 & nbsp; ° செல்சியசு ஆகும். காலநிலையானது, பெரும்பாலும் அமைதியான, தெளிவான மற்றும் நிலையானதாக உள்ளது. அட்லாண்டிக் சூறாவளிகள் காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலையை அதிகரிக்கின்றன. பசிபிக் பெருங்கடலிலிருந்து வீசும் காற்றானது, மேகங்கள், புயல்கள் மற்றும் பனிப்புயல்களைக் கொண்டுவருகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை