குலாப் ஜாமுன்

குலாப் ஜாமுன் அல்லது குலப் ஜாமுன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் மியான்மரில் பிரபலமான திட-பால் சார்ந்த இனிப்பு வகையாகும். மொரிஷியஸ், பிஜி, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, மலாய் தீபகற்பம், கரிபியன் நாடுகள், ஜமைக்கா ஆகிய பகுதிகளிலும் காணப்படுகிறது. இது பெரும்பாலும் திட பால் பொருட்கள், கோயாவில் (பால் குறுக்கப்பட்டு மாவு போன்று மாற்றப்படுதல்) இருந்து தயாரிக்கப்படுகிறது. தற்காலத்தில் கோயாவிற்கு பதிலாக உலர்த்தி பொடியாக்கிய பால் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் பாதாம் சேர்த்து அரைத்து சுவை அதிகரிக்கப்படுகிறது.

குலாப் ஜாமுன்
குலாப் ஜாமுன்
மாற்றுப் பெயர்கள்குலாப் ஜாமுன் (வட இந்தியா/பாகிஸ்தான்), லால் மொஹன் (வட இந்தியா/நேபாளம்), குலாப் ஜம்(கிழக்கு இந்தியா/வங்கதேசம்)
பரிமாறப்படும் வெப்பநிலைஉணவு
தொடங்கிய இடம்இந்தியா
பரிமாறப்படும் வெப்பநிலைவெப்பம், குளிர், அல்லது அறை வெப்பநிலை
முக்கிய சேர்பொருட்கள்கோயா, குங்குமப்பூ

தயாரிப்பு

பாலை மிதமான சூட்டில் நீண்ட நேரம் கொதிக்கவிட்டு, பால் சுண்ட வைக்கப்படுகிறது.[1] இது இந்தியா, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கோயா என அழைக்கப்படுகிறது. இதனுடன் சிறிதளவு மைதா சேர்த்து பிசைந்து அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி 148 டிகிரி செல்சியஸ் [2] கொண்ட எண்ணெயில் குறைந்த தீயில் நன்கு பொரித்து, நிறம் மாறியதும், சர்க்கரை பாகில் ஏலக்காய், பன்னீர், குங்குமப்பூ சேர்த்து அதனுடன் சேர்த்து ஊற வைக்கப்படுகிறது.[3]

தோற்றுவாய்கள்

இடைக்கால இந்தியாவில் முதன்முதலில் குலாப் ஜாமுன் தயாரிக்கப்பட்டது. மத்திய ஆசிய துருக்கிய படையெடுப்பாளர்களால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது.[4] முகலாயப் பேரரசர் சாஜஹானின் சமையல்காரரால் இது தயாரிக்கப்பட்டது என்றும் கூறுவர்.[5]"குலாப்" என்ற பெர்சியன் வார்த்தையில் 'கோல்' (பூ) மற்றும் 'அப்' (நீர்) என பொருள்படுகிறது. இதன் பொருள் பன்னீர் கலந்த சர்க்கரைப் பாகைக் குறிக்கிறது. "ஜாமுன்" அல்லது "ஜமான்" என்பது இந்தி-உருது சொல். இது பிளம் என்று அழைக்கப்படுகிற இந்திய பழத்தின் அளவு மற்றும் வடிவம் கொண்டது.[6]

உண்ணும் வழக்கம்

குலப் ஜாமுன் பிறந்தநாள், திருமண நாள், தீபாவளி போன்ற இந்து மற்றும் இஸ்லாமிய பண்டிகைகளிலும் உண்ணப்படுகிறது. குலப் ஜாமுனில் பல வகைகள் மற்றும் பல சுவைகள் உள்ளன.

வேறுபாடுகள்

மாவுடன் சர்க்கரை சேர்த்து பொறித்தால், இதன் நிறம் கருப்பாக இருக்கும். இது "கால ஜாம்" அல்லது "கருப்பு ஜாம்" என்று அழைக்கப்படுகிறது.

ஜீராவிற்கு பதிலாக மேப்பிள் சிரப் சேர்த்தும் செய்வர்.

வீட்டிலேயே செய்யப்படும் குலப் ஜாமுன் பவுடர் பால், மாவு, பேக்கிங் சோடா மற்றும் நெய் சோ்த்து பிசைந்து, மாவை சிறிதாக உருட்டி ஜீராவில் ஊர வைக்கப்படுகிறது.

பண்டுவா என்பது வங்காளத்தில் செய்யப்படும் குலப் ஜாமுன் போன்ற உணவு வகை. லேடிகேனி என்பது மற்றொரு வகையாகும்.[7]

மத்திய இந்தியாவில் குலப் ஜாமுனை ரசகுலா என்றும் அழைப்பர். நாட்டு நெய்யில் பலமடங்கு பெரிதாக செய்யப்படும் ரசகுலா, ஜபல்பூர் அருகில் உள்ள காடங்கியில் 100 ஆண்டுகளாகப் புகழ் பெற்றது.[8][9][10]

ராஜஸ்தானில் தக்காளி மற்றும் கொட்டைகள் சேர்த்து செய்யப்படும குலப் ஜாமுன் சப்ஜி புகழ் பெற்றது.

குலாப் ஜாமுன் ஒரு மாறுபாடு காலா ஜாமுன் என்று அழைக்கப்படுகிறது

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குலாப்_ஜாமுன்&oldid=3929090" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை