குவாட்றன்டிட் எரிகற் பொழிவு

குவாட்றன்டிட் எரிகற் பொழிவு அல்லது குவாட்றன்டிட் விண்கற் பொழிவு (Quadrantid meteor shower) ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தில் நிகழும் எரிகற் பொழிவாகும். இந்த எறிகற் பொழிவின் கதிர்விடு புள்ளி இடப விண்மீன் குழுவில் அமைந்துள்ளது. இது பெருங்கரடி விண்மீன் தொகுதிக்கும் ட்ராகோ விண்மீன் தொகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இவ் எரிகற் பொழிவின் மூலம் 2003 EH1 என்றழைக்கப்படும் சீர் பருவ எரி விண்மீன் ஆகும். குவாட்றன்டைற்ஸ் எரிகற் பொழிவு பின்னிரவிலிருந்து அதிகாலை 4 மணி வரை காணலாம்.

குவாட்றன்டிட் விண்கற் பொழிவு

அடல்பீ குவாட்டலெட் மற்றும் புருசெல் ஆகியோர் இதனை 1830இல் இதனை முதன் முதலில் அவதானித்தனர்.[1]இவ் எரிகற்பொழிவு ஒடுங்கியதாகவும் ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு உட்பட்ட விண் பாகங்களில் இருந்து வந்தாகவும் கருதப்படுகின்றது.[1] இது சீர் பருவ எரி விண்மீன் 2003 EH1 இருந்து வந்ததாக சில ஆய்வுகள்( [1])குறிப்பிடுகின்றன. இது வால் வெள்ளியான C/1490 Y1 [2] இன் சிதைந்த பாகங்கள் எனக் கருதப்படுகின்றது.

2012இன் முதலாவது எரிகற் பொழிவு

இவ் எரிகற் பொழிவு 2012 ஆம் ஆண்டு சனவரி 3ந் திகதி பின்னிரவிலிருந்து 4ந் திகதி அதிகாலை வரைக் தொடர்ந்து காணப்பட்டது. இலங்கை, இந்திய நாடுகளில் 3ந் திகதி இரவு முதல் 4ந் திகதி அதிகாலை 4.00 மணி வரையும் காணப்பட்டது.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை