கெட்ச்அப்

கெச்சப் அல்லது தக்காளி சுவைச்சாறு என்பது சுவையூட்டி ஆகும். முன்னர் இதன் தயாரிப்பில் முட்டை வெண்கரு, காளான், போன்ற பல்வேறு பொருட்கள் பயன்பட்டன.[1][2] ஆனால், தற்காலத்தில் இச்சொல் "தக்காளிக் கெச்சப்" அல்லது "தக்காளிச் சுவைச்சாற்றை" மட்டுமே குறிக்கின்றது.

கெச்சப்
ஒரு பாத்திரத்தில் உள்ள தக்காளிக் கெச்சப்
மாற்றுப் பெயர்கள்கட்சப், தக்காளிச் சுவைச்சாறு, கெட்சப், சிவப்புச் சுவைச்சாறு
வகைசுவையூட்டி
முக்கிய சேர்பொருட்கள்தக்காளி, சர்க்கரை (சீனி) (அல்லது உயர் புருக்டோசு, சோளச் சாறு), வினாகிரி, உப்பு, வாசனைப் பொருட்கள் ஆகியவை
உணவு ஆற்றல்
(per பரிமாறல்)
103 கலோரி (431 kJ)

இது ஓரளவு இனிப்புத் தன்மையும், ஓரளவு புளிப்புச் சுவையும் கொண்டது. தக்காளி, இனிப்பூட்டி, வினாகிரி ஆகியவற்றுடன், பிற வாசனைப் பொருட்களையும் சேர்த்து இதனைத் தயாரிக்கின்றனர். பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்கள் வேறுபடுகின்றன. எனினும், வெங்காயம், கராம்பு, கொத்தமல்லி, சீரகம், உள்ளி, கடுகு என்பவற்றுடன் சில வேளைகளில் கறுவா, இஞ்சி என்பனவும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.[3]

“எயின்சு” (Heinz) நிறுவனமே ஐக்கிய அமெரிக்காவிலும், ஐக்கிய இராச்சியத்திலும் தக்காளிச் சுவைச்சாறு உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. மொத்த தக்காளிச் சுவைச்சாற்று விற்பனையில் இதன் பங்கு ஐக்கிய அமெரிக்காவில் 60% உம், ஐக்கிய இராச்சியத்தில் 82% உம் ஆகும்.[4][5] ஐக்கிய இராச்சியத்தின் பெரும் பகுதிகளில் இதைத் தக்காளிச் சுவைச்சாறு என்னும் நேரடிப் பொருள் கொண்ட ‘’டொமாட்டோ சோஸ்’’ ‘’(tomato sauce)’’ அல்லது ‘’சிவப்புச் சுவைச்சாறு’’ என்னும் பொருள்கொண்ட ‘’ரெட் சோஸ்’’ ‘’(red sauce)’’ (சிறப்பாக வேல்சு பகுதியில்) ஆகிய பெயர்களாலேயே அழைக்கின்றனர்.

தக்காளிச் சுவைச்சாறு பெரும்பாலும் சூடாகப் பரிமாறப்படும் உணவுகளுக்குச் சுவையூட்டியாகப் பயன்படுகிறது. பிரெஞ்சுப் பொரியல், “ஹாம்பர்கர்”, “ஹாட் டோக்” கோழி அவியல், சூடான “சான்ட்விச்”, அவித்த முட்டை, வாட்டிய அல்லது பொரித்த இறைச்சி ஆகியவற்றுடன் சுவையூட்டியாக தக்காளிச் சுவைச்சாறு பயன்படுகிறது. சில சமயங்களில் வேறுவகைச் சுவைச் சாறுகளில் அடிப்படையாக அல்லது ஒரு சேர்மானப் பொருளாக இது பயன்படுகின்றது.

மீன் ஊறுகாயும் வாசனைப் பொருட்களும்

17 ஆம் நூற்றாண்டில் சீனர்கள் மீன் ஊறுகாயையும், வாசனைப் பொருட்களையும் கலந்து செய்த ஒரு துணை உணவை “கோஏ-சியாப்” அல்லது “கே-சியாப்” என அழைத்தனர். இது “மீன் ஊறுகாய்ச் சாறு” என்னும் பொருள் குறித்தது. 18 ஆம் நூற்றாண்டில் இந்த சுவைச்சாறு மலாய நாடுகளுக்குச் (இன்றைய மலேசியா, சிங்கப்பூர் ஆகியன) சென்றது. அங்கேயே ஆங்கிலேயக் குடியேற்றவாதிகளுக்கு இதன் அறிமுகம் கிடைத்தது. இந்தச் சுவைச் சாற்றுக்கான மலேசிய மலாய் மொழிச் சொல் ‘’கிச்சப்’’ அல்லது ‘’கேச்சப்’’ என்பதாகும். இதுவே ஆங்கிலத்தில் ‘’கெச்சப்’’ ஆனது.[6] English settlers then took ketchup with them to the American colonies.[1] ஆங்கிலேயக் குடியேறிகள் இதனைத் தங்களுடன் அமெரிக்கக் குடியேற்றங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

ஐக்கிய இராச்சியத்தில், முன்னர் “கெச்சப்” தயாரிப்பில் தக்காளி அல்லாமல் காளானே முக்கிய சேர்பொருளாகப் பயன்பட்டது.[7][8][9] 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியச் சமையல் புத்தகங்களிலும், பின்னர் அமெரிக்கச் சமையல் புத்தகங்களிலும் “கெச்சப்” தயாரிப்பு முறைகள் இடம்பெறத் தொடங்கின. 1742 இல் வெளியான ஒரு இலண்டன் சமையல் புத்தகத்தில் காணப்பட்டபடி, இந்த மீன் சுவைச்சாறு காளான் போன்ற சேர்மானங்களுடன் ஏற்கெனவே பிரித்தானிய வாசனையைப் பெற்றிருந்தது. காளான் விரைவிலேயே முதன்மையான சேர்பொருள் ஆகியது. 1750 தொடக்கம் 1780 வரையான காலப் பகுதியில் “கெச்சப்” என்னும் சொல் காளான், வாதுமைக் கொட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட, நீர்த்தன்மையான, கடும் நிறத்தோடு கூடிய எந்த சுவைச்சாற்றையும் குறிக்கப் பயன்பட்டது.[10]

“கெச்சப்”பின் பல்வேறு வகைகள் உருவாக்கப்பட போதிலும், ஒரு நூற்றாண்டு கடந்த பின்பே தக்காளியை அடிப்படையாகக் கொண்ட “கெச்சப்” தயாரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கெட்ச்அப்&oldid=2724639" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை