சதுர மைல்

சதுர மைல் என்பது பரப்பளவைக் குறிக்கப் பயன்படும் இம்பீரியல் அளவை முறை சார்ந்த ஒரு அலகு ஆகும். ஒரு மைல் நீளமும், ஒரு மைல் அகலமும் கொண்ட ஒரு பகுதியின் பரப்பளவு (= நீளம் x அகலம்) ஒரு சதுர மைல் ஆகும். பெரிய நில மற்றும் நீர்ப் பரப்புகளை அளப்பதற்குப் பயன்படும் இந்த அலகு, மீட்டர் அளவைமுறையில் அண்ணளவாக 2.59 சதுர கிலோமீட்டருக்குச் சமமானது.

ஒரு சதுரமைல் பரப்பளவுள்ள சதுரமொன்றின் அளவுகள்.
ஒரு சதுரமைல் பரப்பளவுள்ள சமபக்க முக்கோணம் ஒன்றின் அளவுகள்.
ஒரு சதுரமைல் பரப்பளவுள்ள வட்டமொன்றின் அளவுகள்.

சதுர மைலும், பிற பரப்பளவை அலகுகளும்

இம்பீரியல் அளவை முறையில் சிறிய பரப்பளவுகளை அளப்பதற்குச் சதுர அங்குலம், சதுர அடி, சதுர யார் போன்ற அலகுகள் பயன்படுகின்றன. இவற்றைவிட அளவில் சிறிய நிலப் பரப்புகளையும், நீர்ப் பரப்புகளையும் அளப்பதற்குப் பரவலாக வழக்கில் உள்ள அலகுகளில் ஏக்கர், ஹெக்டேர் போன்றவை முக்கியமானவை. இவ்வலகுகளுடன் சதுர மைலுக்கு உள்ள தொடர்புகள் கீழுள்ள அட்டவணையில் தரப்படுகின்றன.

1 சதுர மைல் =4,014,489,600- சதுர அங்குலம்
1 சதுர மைல் =27,878,400- சதுர அடி
1 சதுர மைல் =3,097,600- சதுர யார்
1 சதுர மைல் =640- ஏக்கர்
1 சதுர மைல் =258- ஹெக்டேர்

சதுர மைலில் சில பரப்பளவுகள்

பூமியின் பரப்பளவு :196,936,481 - சதுர மைல்
பூமியின் நிலப் பரப்பளவு :57,505,431 - சதுர மைல்
பூமியின் நீர்ப் பரப்பளவு :139,431,011 - சதுர மைல்
இந்தியாவின் பரப்பளவு :1,222,559 - சதுர மைல்
இலங்கையின் பரப்பளவு :25,332 - சதுர மைல்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சதுர_மைல்&oldid=2740670" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை