சந்தா கோச்சர்

சந்தா கோச்சர் (பிறப்பு 17 நவம்பர் 1961) இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி வங்கியின் மேலாண் இயக்குனரும் தலைமை நிர்வாக அலுவலரும் ஆவார். 2015 ஆம் ஆண்டுக்கான டைம் இதழின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இவர் பெயரும் இடம்பெற்றது.[1] ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்புரில் பிறந்த இவர், மும்பையில் உள்ள ஜெய் ஹிந்த் கல்லூரியில் பட்டம் பெற்றார். மும்பையில் வசிக்கும் இவர், தீபக் கோச்சர் என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு ஆர்த்தி, அர்ஜுன் என இரு குழந்தைகள் உள்ளன. அமெரிக்காவின் பிரபல ஃபார்ச்சூன் இதழில், மற்ற உலக அளவிலான சிறந்த பெண் நிர்வாகி பட்டியலில் இவர் பெயர் அடிக்கடி இடம் பெறும்.[2]வங்கித்துறையில் சிறப்பாக பங்களித்ததற்காக, 2010 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி சிறப்பித்தது[3]

சந்தா கோச்சர்

வீடியோகான் கடன் முறைகேடு வழக்கில்

வீடியோகான் நிறுவனத்துக்கு 3,250 கோடி ரூபாய் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கடன் வழங்கியதில் சாந்தா கோச்சார் மீது மோசடிக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. வீடியோகோன் நிறுவனம் வாங்கிய கடனில் ரூ.2,800 கோடிக்கு மேல் கடன் திருப்பிச் செலுத்தப்படாததால் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் நிறுவனம் முதலீடு செய்திருந்தது தெரியவந்தது.

எனவே, வீடியோகான் நிறுவனத்தின் வராக் கடன் மோசடியில் சாந்தா கோச்சாருக்கும், அவரது கணவர் தீபக் கோச்சாருக்கும் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது.[4] எனவே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி பதவியை விட்டு சந்தா கோச்சார் நீங்கியுள்ளார்.[5]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சந்தா_கோச்சர்&oldid=2888791" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்