சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம்

சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம் என்ற 156 வயது கொண்ட வெப்பமண்டல தோட்டமானது சிங்கப்பூரின் வணிக மையப் பகுதியின் அண்மையில் அமைந்துள்ளது. இது யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அங்கீகரிக்கப்பட்ட மூன்று தோட்டங்களுள், ஒரே வெப்பமண்டல தோட்டமாகும். 2013லிருந்து இந்த தோட்டம் "டிரிப்அட்வைசர் நிறுவனத்தினரால் ஆசியாவின் சிறந்த தோட்டமாகவும், சுற்றுலா ஈர்ப்பாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இது 2012-ல் சர்வதேச தோட்ட சுற்றுலா விருதுகள் நிகழ்வின்பொழுது, ஆண்டின் தொடக்க தோட்டமாக அறிவிக்கப்பட்டது மற்றும் 2008 ல் மிச்செலின் மூன்று நட்சத்திர தரவரிசையைப் பெற்றது.[1][2]

சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம்
சிம்பொனி ஏரி
சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம் is located in சிங்கப்பூர்
சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம்
சிங்ப்பூரிலுள்ள இருப்பிடம்
அமைவிடம்சிங்கப்பூர்
ஆள்கூறு1°18′54″N 103°48′58″E / 1.3151°N 103.8162°E / 1.3151; 103.8162
பரப்பு74 எக்டேர்கள் (182.86 ஏக்கர்கள்)
உருவாக்கப்பட்டது1859 (1859)
வகைCultural
வரன்முறைii, iv
தெரியப்பட்டது2015 (39th session)
உசாவு எண்1483
நாடுசிங்கப்பூர்
பிராந்தியம்ஆசியா-பசிபிக்

1859-இல் இந்த தாவரவியல் தோட்டம் அதன் தற்போதைய இருப்பிடத்தில், ஒரு விவசாய தோட்டக்கலை சங்கம் மூலம் நிறுவப்பட்டது. இதன் முதல் அறிவியல் இயக்குனர் ஹென்றி நிக்கோலஸ் ரிட்லி தலைமையில், ரப்பர் தாவரத்தின் சாகுபடி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இப்பிராந்தியத்தின் ரப்பர் வர்த்தகம் ஏற்றமடைய முக்கிய பங்கு வகித்தது. இன்றும் பயன்படுத்தப்படுமளவுக்கு ரப்பர் பிரித்தெடுத்தல் தொழில்நுட்பத்தினை கச்சிதமாக மேம்படுத்தி, அப்பகுதியிலுள்ள தோட்டக்காரர்களின் பொருளாதார மதிப்பை வளர்க்கும் விதத்தில் ரப்பர் உற்பத்தி வேகமாக விரிவடைந்தது.

நாட்டின் வெட்டு ஆர்க்கிட் ஏற்றுமதியை பிரதானமாக்கும் வகையில், முக்கிய தோட்டத்தினுள்ளே அமைந்துள்ள தேசிய ஆர்க்கிட் தோட்டம், ஆர்க்கிட் ஆய்வுகள் மற்றும் கலப்பின சாகுபடியில் முன்னோடியாக உள்ளது. பூமத்திய ரேகை காலநிலை உதவியுடன், இப்பூங்கா 1200 தாவர இனங்கள் மற்றும் 2000 கலப்பினங்களுடன் மிகப்பெரிய ஆர்க்கிட் சேகரிப்பு நிலையமாக திகழ்கிறது.

நாடு விடுதலைபெற்றபொழுது, சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவின் நிபுணத்துவம், சிங்கப்பூரை வெப்பமண்டல தோட்ட நகரமாக மாற்ற உதவியது. 1981-இல் கலப்பின ஆர்க்கிட் 'வண்டா மிஸ் ஜோகுயிம்' சிங்கப்பூரின் தேசிய மலராக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிங்கப்பூர் 'ஆர்க்கிட் இராசதந்திரம்' நடவடிக்கையின் மூலம், நாட்டிற்கு வருகைதரும் அதிபர்கள், பிரபலங்களின் பெயர்களை மிகச்சிறந்த கலப்பின ஆர்க்கிட்டுகளுக்கு சூட்டப்படுகிறது, இது ஆர்க்கிட் விஐபி தோட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.[3][4]


சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலை 'ஐந்து மணி' முதல் நள்ளிரவு 'பன்னிரென்டு மணி' வரை திறந்திருக்கும் உலகில் ஒரே பூங்காவாகும். இத்தோட்டத்தின் 82-ஹெக்டேர் பகுதி பரப்பளவு முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் பரவியுள்ளது. இதன் வடக்கு மற்றும் தெற்கு முனைகளுக்கிடையேவ்அதிகபட்ச நீண்ட தொலைவு 2.5 கிமீ (1.6 மைல்) ஆகும். இத்தாவரவியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் 4.5 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனர்.

ஈர்ப்பிடங்கள்

தேசிய ஆர்க்கிட் தோட்டத்திலுள்ள ஒரு ஆர்க்கிட் மலர்
  • தேசிய ஆர்க்கிட் தோட்டம்: இது சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவின் மிகச்சிறந்த ஈர்ப்பிடமாகும், இது பூங்காவின் மேற்கே நடுப்பகுதியிலுள்ளது. மலைப்பாங்கான மூன்று ஹெக்டர் நிலத்தில் 1000க்கும் அதிகமான தாவர இனங்கள் மற்றும் 2000க்கு அதிகமான கலப்பினங்களின் தொகுப்பாக உள்ளது.
  • மழைக்காடு (அ) புனல்காடு: சிங்கப்பூர் தாவரவியல் தோட்டத்தில், பூங்காவை விட பழமையான ஒர் வெப்பமண்டல மழைக்காடு ஆறு ஹெக்டர் பரப்பளவில் உள்ளன. உலகளவில் நகர எல்லைக்குள்ளே இருக்கும் வெப்பமண்டல மழைக்காடுகளுல் இதுவும் ஒன்றாகும்; மற்றொன்று பிரேசிலின் தலைநகரான இரியோ டி செனீரோவிலுள்ள டிஜீகா வனமாகும்.
  • இஞ்சித் தோட்டம்: இது தேசிய ஆர்க்கிட் தோட்டம் அருகிலுள்ளது, ஒரு ஹெக்டர் பரப்பளவில் இஞ்சிக் குடும்பத்தின் உறுப்பினர்களை ஒன்றாக வளர்க்கிறது. இது முந்தைய ஆர்க்கிட் தோட்டம் இருந்த இடத்தில் 2003ல் அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டது.
இஞ்சித் தோட்டத்திலுள்ள நீர்விழ்ச்சி
  • ஜேக்கப் பால்ஸ் சிறுவர் பூங்கா: 1 அக்டோபர் 2007ல் ஆசியாவின் முதல் சிறுவர் பூங்காவாக இது ஆரம்பிக்கப்பட்டது.
  • ஏரிகள்: இத்தாவரவியல் பூங்காவினுள்ளே மூன்று ஏரிகள் உள்ளன. அவை முறையே சிம்பொனி ஏரி, சுவான் ஏரி, எகோ ஏரி ஆகும்.

சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை