சீன சோவியத் எல்லை பிரச்சனை

சீன சோவியத் எல்லை பிரச்சனை என்பது 1969ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏழு மாதங்களுக்கு நடந்த அறிவிக்கப்படாத ராணுவ சண்டை ஆகும். இது சீன சோவியத் அரசியல் பிரிவை தொடர்ந்து நடைபெற்றது. மிகுந்த பிரச்சினைக்குரிய எல்லை சண்டையானது மார்ச் 1969ஆம் ஆண்டு மஞ்சூரியாவுக்கு அருகில் உசூரி ஆற்றின் சென்பாவா (தமன்ஸ்கி) தீவில் நடைபெற்றது. சண்டையின் காரணமாக உலகின் இரண்டு பெரிய பொதுவுடமைவாத நாடுகள் போரில் ஈடுபடும் நிலைக்கு வந்தன. எனினும் சண்டையானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டு முந்தைய எல்லை நிலைக்கு இரண்டு நாடுகளும் திரும்பின.

தூதரக நடவடிக்கைகள்

17 மார்ச் 1969ஆம் ஆண்டு வார்சா உடன்பாட்டு நாடுகளின் அவசர சந்திப்பு நடைபெற்றது. சீனாவுக்கு கண்டனம் தெரிவிக்க சோவியத் தீர்மானம் கொண்டு வந்தது. எனினும் ருமேனியா, இந்தியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரிய பொதுவுடைமைக் கட்சிகள் சீனாவுக்கு ஆதரவு தெரிவித்தன. சோவியத் ஒன்றியம் தான் சீனாவைத் தாக்கியது, சீனா சோவியத் ஒன்றியத்தைத் தாக்கவில்லை என்ற சீன நிலைப்பாட்டை ஆதரித்தன.[1]

1 ஆகஸ்டு 1969 அன்று அமெரிக்க அதிபர் நிக்சன் பாகிஸ்தானுக்கு சென்றார். பாகிஸ்தான் சீனாவின் நெருங்கிய கூட்டாளி நாடு ஆகும். இரு நாடுகளுமே இந்தியாவுக்கு எதிரானவை ஆகும். அவர் தளபதி யாக்யா கானிடம் மாவோவுக்கு தன் செய்தியை தெரிவிக்குமாறு கூறினார். அது, குறிப்பாக சோவியத் ஒன்றியத்துடனான பிரச்சினை காரணமாக சீனாவுடன் அமெரிக்கா உறைவை புதுப்பிக்க விரும்புவதாகும்.

ஹோ சி மின் இறுதிச் சடங்கு

ஹோ சி மினின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சோவியத் தலைவர் கோசைகின் மாஸ்கோவுக்குத் திரும்ப சீனா வான்வெளியில் பறக்க சீனா அனுமதி மறுத்தது. இதன் காரணமாக எரிபொருள் நிரப்ப கொல்கத்தாவில் இறங்க சோவியத் விமானம் கட்டாயப்படுத்தப்பட்டது.[2] இந்தியாவில், சீனர்கள் சோவியத்துடன் அமைதி பற்றி பேச விரும்புவதாக இந்திய அரசு சோவியத் தலைவரிடம் பேசியது. இதன் காரணமாக கோசைகின் பெய்ஜிங்குக்கு பறந்தார்.[2]

உசாத்துணை

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை