சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madraspolitan(us) et Meliaporen(sis)) என்பது சென்னை சாந்தோம் புனித தோமையார் பீடப் பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்
Archidioecesis Madraspolitanus et Meliaporensis
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
புள்ளிவிவரம்
பரப்பளவு3,160 km2 (1,220 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
6,984,614
343,103 (4.9%)
விவரம்
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
கதீட்ரல்புனித தோமையார் கதீட்ரல் பசிலிக்கா, சாந்தோம்
இணை-கதீட்ரல்வானதூதர்களின் புனித மரியா இணை-கதீட்ரல், ஜார்ஜ் டவுன்
தற்போதைய தலைமை
திருத்தந்தைபிரான்சிசு
பேராயர் †ஜார்ஜ் அந்தோனிசாமி
இணையதளம்
http://www.archdioceseofmadrasmylapore.in/

வரலாறு

  • ஜனவரி 9, 1606: திருத்தந்தை ஐந்தாம் பால், பதுரவாதோ மறைபரப்பு பணியின் பொறுப்பாளரான போர்ச்சுக்கல் அரசருடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் விளைவாக மயிலாப்பூர் மறைமாவட்டம் உருவானது.
  • 1642: மயிலாப்பூரின் சாந்தோம் மறைமாவட்டத்தில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையின் அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவாக்கப்பட்டது.
  • 1832: மெட்ராஸ் அப்போஸ்தலிக்க மறைவட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.
  • செப்டம்பர் 1, 1886: மாநகர மெட்ராஸ் உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.
  • அக்டோபர் 10, 1950: பதுரவாதோ முறை ரத்து செய்யப்பட்டது. மயிலாப்பூர் மறைமாவட்டம் வேறு (Propaganda Fide) ஆளுகையின்கீழ் சென்றது.
  • நவம்பர் 13, 1952: திருத்தந்தை 12ம் பயஸ் திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில் இருந்து (Ex primaevae ecclesiae) என்ற ஆணையின்படி, சென்னை மற்றும் மயிலாப்பூர் மறைமாவட்டங்கள் இணைக்கப்பட்டு, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் என்று பெயர் பெற்றது.

தலைமை ஆயர்கள்

  • சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் பேராயர்கள் (லத்தீன் ரீதி)
    • பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, (நவம்பர் 21, 2012 - இன்றுவரை)
    • பேராயர் மலையப்பன் சின்னப்பா, ச.ச. (ஏப்ரல் 1, 2005 – நவம்பர் 21, 2012)
    • பேராயர் ஜேம்ஸ் மாசில்லாமணி அருள் தாஸ் (மே 11, 1994 – ஆகஸ்ட் 30, 2004)
    • பேராயர் கசிமீர் ஞானாதிக்கம், சே.ச. (ஜனவரி 26, 1987 – நவம்பர் 10, 1993)
    • பேராயர் அந்தோனி ராயப்பா அருளப்பா (பிப்ரவரி 1, 1966 – ஜனவரி 26, 1987)
    • பேராயர் லூயிஸ் மத்தியாஸ், ச.ச (நவம்பர் 13, 1952 – ஆகஸ்ட் 2, 1965)
  • மாநகர மெட்ராசின் பேராயர்கள் (லத்தீன் வழிபாட்டு முறை)
    • பேராயர் லூயிஸ் மத்தியாஸ், ச.ச. (மார்ச் 25, 1935 – நவம்பர் 13, 1952)
    • பேராயர் யுஜீன் மெடெர்லெட், ச.ச. (ஜூலை 3, 1928 – டிசம்பர் 12, 1934)
    • பேராயர் ஜியோவன்னி ஏலன், M.H.M. (பிப்ரவரி 13, 1911–1928)
    • பேராயர் ஜோசப் கோல்கன் (மே 19, 1882 – பிப்ரவரி 13, 1911)
  • மெட்ராசின் அப்போஸ்தலிக்க பிரதிநிதி (லத்தீன் ரீதி)
    • ஆயர் பேட்ரிக் ஜோசப் கார்யூ (1840–1842)

கீழுள்ள மறைமாவட்டங்கள்

மேலும் காண்க

ஆதாரங்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை