சைலீசியா

நடு ஐரோப்பாவின் ஒரு பிராந்தியம். தற்போது போலந்தில் அமைந்துள்ளது, செக் குடியரசிலும், ஜெர்மனியி

சைலீசியா அல்லது சைலீஷியா (Silesia, /sˈlʒə, sˈlʃiə/, also UK: /-ziə/, US: /-ʒiə, -ʃə, sɪˈ-/)[1] என்பது ஒரு வரலாற்றுகால தேசம் ஆகும். நடு ஐரோப்பாவில் உள்ள இதன் பெரும் பகுதி தற்போது போலந்திலும், சிறிய பகுதியானது செக் குடியரசு, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் உள்ளது. இதன் மொத்த பரப்பளவு சுமார் 40,000 km2 (15,400 sq mi) என்றும், மக்கள் தொகை சுமார் 8,000,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. சைலீசியா இரண்டு முக்கிய பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேற்கில் உள்ளளது கீழ் சைலீசியா என்றும் கிழக்கில் உள்ளது மேல் சைலீசியா என்றும் அழைக்கபடுகிறது. சைலீசியா பிராந்தியம் கட்டிடக்கலை, உடைகள், உணவு வகைகள், மரபுகள் மற்றும் சிலேசிய மொழி (தற்போது மேல் சிலேசியாவின் சில பகுதிகளில் பேசபபடுகிறது) உட்பட பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுள்ளது.

சைலீசியா
{{{official_name}}}-இன் கொடி
கொடி

சின்னம்

  ஆஸ்திரிய சைலீசியா,
பிரஷ்யாவுடன் இணைக்கப்பட 1740 க்கு முன்
  பிரஷ்யன் சைலீசியா, 1871
  ஓடர் ஆறு
அடிப்படை வரைபடம் தற்போதைய நாட்டு எல்லைகளைக் காட்டுகிறது.
இன்றைய போலந்தின் வரைபடத்தில் சைலீசியா
இன்றைய போலந்தின் வரைபடத்தில் சைலீசியா
ஆள்கூறுகள்: 51°36′N 17°12′E / 51.6°N 17.2°E / 51.6; 17.2
நாடு
பெரிய நகரம்விராத்ஸ்சாஃப்
முன்னாள் தொகுதிவிரோகாவ் (கீழ் சைலீசியா)
ஓப்பல் (மேல் சைலீசியா)
பரப்பளவு
 • மொத்தம்40,000 km2 (20,000 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்c. 80,00,000
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)

சைலீசியா ஓடர் ஆற்றுப் பள்ளத்தாகில் அமைந்துள்ளது. இப்பிராந்தியத்தின் தெற்கு எல்லையில் சுடெட்டன் மலைகள் நீண்டுள்ளன. இப்பிராந்தியத்தில் பல வரலாற்று சின்னங்கள் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. இப்பிராந்தியம் ஏராளமான கனிம, இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது பல முக்கியமான தொழில்துறை பகுதிகளை உள்ளடக்கியது. பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமாகவும், கீழ் சைலீசியாவின் தலைநகரமாகவும் விராத்ஸ்சாஃப் உள்ளது. மேல் சைலீசியாவின் வரலாற்று தலைநகரம் ஓபோல் ஆகும் . மிகப்பெரிய பெருநகரப் பகுதியாக மேல் சைலீசியா பெருநகரப் பகுதி உள்ளது, அதன் நிர்வாக மையமாக கத்தோவித்சே உள்ளது. செக் நகரமான ஆஸ்ட்ராவா மற்றும் ஜெர்மன் நகரமான கோர்லிட்ஸ் பகுதிகள் சைலீசியாவின் எல்லைக்குள் உள்ளன.

சைலீசியாவில் அதிகாரம் பெற்ற முதல் அறியப்பட்ட தனனாட்சி அரசுகள் 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெரிய மொராவியா மற்றும் 10 ஆம் நூற்றாண்டின் துவககததில் போஹேமியா போன்றவை இருந்தன.சைலீசியா 10 ஆம் நூற்றாண்டில், போலந்து நாட்டுடன் இணைககபபடடது. பினனர் இது பல நூற்றாண்டுகள் வரை போலந்தின் ஆதிக்கததில் இருந்த‍து. 12ஆம் நூற்றாண்டில் விடுதலைப் பெற்றது. பின்னர் ஜெர்மனியர் குடியேறலாயினர். கைத்தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. 14 ஆம் நூற்றாண்டில், இது புனித ரோமானியப் பேரரசின் கீழ் இருந்த பொஹீமியரின் கிரவுண்ட் லேண்ட்ஸின் ஆதிக்கத்துக்கு உட்பட்டது. இது 1526 இல் ஆஸ்திரிய ஆப்ஸ்பர்குகள் பொஹீமியாவை கைப்பற்றவே சைலீசியாவும் அவர்களின் முடியாட்சிக்கு சென்றது. 18ஆம் நூற்றாண்டில் பிரசியாவின் மன்னர் சைலீசியாவுக்கு உரிமை கோரவே, இதனால் போர் மூண்டது. இந்தப் போர்களின் விளைவாக, இப்பகுதி 1742 இல் ஜெர்மனி அரசான புருசிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. இதன் பிறகு இப்பகுதி கீழ் சைலீசியா மேல் சைலீசியா என இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. ஆஸ்திரியா சைலீசியா மட்டும் ஆஸ்திரியாவுக்கு எஞ்சி இருந்த‍து.

முதலாம் உலகப் போருக்குப் பிறகு, மேல் சைலீசியாவில் நடந்த கிளச்சியினால் நடந்த வாக்கெடுப்பிக்குப் பிறகு, என்டென்ட் பவர்ஸால், மேல் சைலேசியாவின் கிழக்குப் பகுதி போலந்துக்கு வழங்கப்பட்டது. சைலீசியாவின் மீதமுள்ள முன்னாள் ஆஸ்திரிய பகுதிகள் பிரிக்கப்பட்டு செக்கோசிலோவாக்கியாவின் சுதெடென்லாந்து மாகாணத்தின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டது. இன்று அவை செக் குடியரசின் ஒரு பகுதியாக உள்ளன. 1945 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நேச நாடுகளுக்கு இடையிலான போட்ஸ்டாம் ஒப்பந்த்த்தினால் சைலீசியாவின் பெரும்பகுதி போலந்தின் ஒரு பகுதியாக மாறியது. அதன் கம்யூனிச அரசாங்கத்தால் சைலீயாவின் மக்கள் இனக்கருவறுப்பு செய்யப்பட்டனர். 1815 முதல் சைலீசியாவுக்குச் சொந்தமான ஓடர் -நெய்ஸ் கோட்டிற்கு மேற்கே உள்ள சிறிய லுசாஷியன் துண்டு நிலப்பகுதி ஜெர்மனியில் இருந்தது.

1945-48 -இன் கட்டாய மக்கள்தொகை மாற்றங்களின் விளைவாக, இன்றைய சைலீசியா மக்கள் அந்தந்த நாடுகளின் தேசிய மொழிகளைப் பேசுபவர்களாக மாறிப்போயினர். மேலும் கீழ் சிலேசியாவில் ஒரு புதிய கலப்பு போலந்து பேச்சுவழக்கு மற்றும் புதுவித ஆடை பண்பாடு உருவாக்கியது. சிலேசிய மொழியானது போலிய மொழியின் வட்டார வழக்காக கருதப்பட வேண்டுமா அல்லது தனி மொழியாக இருக்க வேண்டுமா என்பது பற்றி தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகிறன்றன. கீழ் சைலீசியனில் ஜெர்மன் மொழி ஆதிக்கத்தால் அங்கு சிலேசிய மொழி அதன் அழிவை நெருங்கிவருகிறது.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சைலீசியா&oldid=3635041" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை