ஜஸ்டின் துரூடோ

ஜஸ்டின் துரூடோ (Justin Trudeau, பிறப்பு: திசம்பர் 25, 1971) கனடிய அரசியல்வாதியும், லிபரல் கட்சித் தலைவரும் ஆவார். 2015 அக்டோபர் 19 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி பெரும் வெற்றி பெற்றதை அடுத்து இவர் கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.[2][3] இவர் முன்னாள் பிரதமர் பியேர் துரூடோவின் மூத்த மகன் ஆவார். 2008 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் முதற் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2011, 2015 தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2013 ஏப்ரல் 14 இல் லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜஸ்டின் துரூடோ
23ஆவது கனடாவின் பிரதமர்
பதவியில்
நவம்பர் 4, 2015 [1]
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர்டேவிட் ஜோன்ஸ்டன்
Succeedingஇசுட்டீவன் கார்ப்பர்
கனடா லிபரல் கட்சி தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஏப்ரல் 14, 2013
முன்னையவர்பொப் ரேய் (இடைக்கால)
Member of Parliament
for பாப்பினோ
பதவியில் உள்ளார்
பதவியில்
அக்டோபர் 14, 2008
முன்னையவர்விவியன் பார்பொட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜஸ்டின் பியேர் ஜேம்சு துரூடோ

திசம்பர் 25, 1971 (1971-12-25) (அகவை 52)
ஒட்டாவா, ஒன்ராறியோ, கனடா
அரசியல் கட்சிலிபரல்
துணைவர்
சோஃபி கிரேகோர் (தி. 2005)
பிள்ளைகள்சேவியர்
ஏட்ரியன்
எலா-கிரேசு
பெற்றோர்(s)பியேர் துரூடோ
மார்கரெட் சின்கிளையர்
வாழிடம்மொண்ட்ரியால்
முன்னாள் கல்லூரிமக்கில் பல்கலைக்கழகம்
பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகம்
தொழில்ஆசிரியர்
இணையத்தளம்justin.ca

ஒட்டாவாவில் பிறந்த துரூடோ மக்கில் பல்கலைக்கழகத்தில் பயின்று 1994 இல் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[4] பின்னர் பிரிட்டீசு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1998 இல் கல்வியலில் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பின்னர் வான்கூவரில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[5]

தந்தையின் இறப்புக்குப் பின்னர் அரசியலில் ஈடுபடலானார். 2008 தேர்தலில் பப்பினோ தொகுதியில் நின்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2009 ஆம் ஆண்டு முதல் லிபரல் கட்சியின் நிழல் அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். 2013 ஆம் ஆண்டில் லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் 36 இடங்களை மட்டும் கொண்டு மூன்றாம் இடத்தில் இருந்த லிபரல் கட்சியை 2015 தேர்தலில் 184 இடங்களுடன் முதல் இடத்துக்கு வெற்றி பெறச் செய்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜஸ்டின்_துரூடோ&oldid=3779359" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை