ஜோன் ரிவர்ஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் அலெக்ஸாண்ட்ரா மோலின்ஸ்கை (Joan Alexandra Molinsky) [2] என்பவர் தொழில் ரீதியாக ஜோன் ரிவர்ஸ் (Joan Rivers) என்று அழைக்கப்பட்டார். இவர் அமெரிக்க நடிகை, நகைச்சுவையாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் போன்ற பல்வேறு திறமைகள் கொண்டவர். பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகளை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் இவரது நகைச்சுவைகள் இருப்பதால் பெரும்பாலும் சர்ச்சைகயாக மாறிவிடுகின்றன.

ஜோன் ரிவர்ஸ்
1966 இல் ஜோன் ரிவர்ஸ்
பிறப்புஜோன் அலெக்ஸாண்ட்ரா மோலின்ஸ்கை
(1933-06-08)சூன் 8, 1933
புரூக்ளின், நியூயார்க்கு நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
இறப்புசெப்டம்பர் 4, 2014(2014-09-04) (அகவை 81)
மன்ஹாட்டன், நியூயார்க்கு நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
கல்லறைவயோமிங்யில் அஸ்தி கரைக்கப்பட்டது[1]
பணி
  • நகைச்சுவையாளர்
  • நடிகர்
  • எழுத்தாளர்
  • தயாரிப்பாளர்
  • தொலைக்காட்சி வழங்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1959–2014
தாக்கம் 
செலுத்தியோர்
வுடி ஆலன்
வாழ்க்கைத்
துணை
ஜேம்ஸ் சாங்கர்
(தி. 1955; annulled 1955)

எட்கார் ரோசன்பர்க்
(தி. 1965; இற. 1987)
பிள்ளைகள்மெலிசா ரிவர்ஸ்
வலைத்தளம்
JoanRivers.com

முன்னுரை

இவரது வழிகாட்டியான ஜானி கார்சன் தொகுத்து வழங்கிய தி டுநைட் நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துக் கொண்டார் ஜோன் ரிவர்ஸ். 1986 ஆம் ஆண்டில் தி லேட் ஷோ வித் ஜோன் ரிவர்ஸ் என்று தனது சொந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நடத்திய முதல் பெண்மணி ஆவார். பின்னர் தி ஜோன் ரிவர்ஸ் நிகழ்ச்சியை 1989 முதல் 1993 வரைத் தொகுத்து வழங்கினார் மேலும் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார். 1990 இல் இருந்து அவர் நகைச்சுவைக்கான சிவப்புக் கம்பளம் விருதுகள் பெற்று, பிரபலங்களின் நேர்காணல்களிலும் கலந்துக் கொண்டார்.[3][4] 2017 ஆம் ஆண்டில், ரோலிங் ஸ்டோன் என்னும் பத்திரிகை, 50 சிறந்த மேடை நகைச்சுவையாளர்கள் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு ஜோன் ரிவர்ஸை தேர்வுச் செய்தார்கள்.[5]

ஆரம்பகால வாழ்க்கை

ஜோன் அலெக்ஸாண்ட்ரா மோலின்ஸ்கி ஜூன் 8, 1933 இல், நியூயார்க்கின் புரூக்ளின் நகரில் பிறந்தார்.[6][7][8] ரஷ்ய-யூத குடியேறியவர்களான பீட்ரைஸ் (நீ க்ரஷ்மேன்) மற்றும் மேயர் சி. மோலின்ஸ்கி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார், இவருக்கு பார்பரா வாக்ஸ்லர் என்ற மூத்தச் சகோதரியும் உள்ளார்.[9][10][11] அவர் புரூக்ளினில் உள்ள அடெல்பி அகாடமியில் 1951 இல் பட்டம் பெற்றார். தனது 18 வயது இளமைப் பருவத்தில், ரிவர்ஸ் தனது குடும்பத்தினருடன் நியூயார்க் நகரத்தின் வடக்கே உள்ள லார்ச்மாண்டிற்கு இடம் பெயர்ந்தார்.[8] இவர் 1950இல் கனெக்டிகட் கல்லூரியில் பயின்று, 1952இல் இளங்கலை பட்டம் பெற்றார். பர்னார்ட் கல்லூரியில் 1955ஆம் ஆண்டு பி.ஏ. ஆங்கில இலக்கியம் மற்றும் மானுடவியலில் பயின்றார். மேலும் இவர் ஃபை பீட்டா கப்பாவின் உறுப்பினராகவும் இருந்தார்.[7][8] தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பு, ரிவர்ஸ் பல்வேறு வேலைகளில் பணியாற்றி உள்ளார். ராக்ஃபெல்லர் மையத்தில் ஒரு சுற்றுலா வழிகாட்டியாகவும், [12]விளம்பர நிறுவனத்தில் ஒரு எழுத்தாளர் மற்றும் ப்ரூஃப் ரீடராகவும்,[13] ஆடை கடைகளில் பேஷன் ஆலோசகராகவும் பணியாற்றினார்.[8][14]

ரிவர்ஸின் குடும்பம்

ரிவர்ஸின் முதல் திருமணம் 1955 ஆம் ஆண்டில், இவர் வேலை செய்த பாண்ட் ஆடை கடையின் விற்பனை மேலாளரின் மகன் ஜேம்ஸ் சாங்கருடன் நடைப்பெற்றது.[8][15][8][16] சாங்கர் குழந்தைகளை விரும்பவில்லை என்பதால் இந்த திருமணம் ஆறு மாதங்கள் மட்டுமே நீடித்தது . [17]

Rivers with her daughter, Melissa, during New York Fashion Week 2012

15ஜூலை 1965 இல் ரிவர்ஸ், எட்கர் ரோசன்பெர்க்கை மணந்தார். [18] ஜனவரி 20, 1968 இல் இவர்களுக்கு பெண் குழந்தையாக மெலிசா ரிவர்ஸ் பிறந்தார். மேலும் ஜோன் ரிவர்ஸின் பேரன், எட்கர் கூப்பர் எண்டிகாட் 2000இல் பிறந்தார்.[19] அவரது தாய் மற்றும் பாட்டியுடன் சேர்ந்து, கூப்பர் தொலைக்காட்சி தொடரான ​​ஜோன் & மெலிசா: ஜோன் நோஸ் பெஸ்ட்? நிகழ்ச்சியில் பணியாற்றி உள்ளார்.[20] 1987 ஆம் ஆண்டில் ரோசன்பெர்க்கைகை விட்டு ரிவர்ஸ் பிரிந்தார். ரிவர்ஸ் பிரிவினைக் கேட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு ரோசன் தற்கொலை செய்துக் கொண்டார்.[21][22] பின்னர் அவர் ரோசன்பெர்க்குடனான தனது திருமணத்தை "மொத்த மோசடி" என்று விவரித்தார், மேலும் 22 வருட திருமணத்தின் போது அவர் நடந்து கொண்டதைப் பற்றி கடுமையாக புகார் கூறினார்.[23]

மனிதநேயம்

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை ரிவர்ஸ் செய்தார்.[7] மே 1985 இல், நியூயார்க் நகரில் உள்ள எய்ட்ஸ் மருத்துவ அறக்கட்டளைக்கு நிதிஉதவி அளிப்பதற்காக, நிக்கோல்ஸ் மற்றும் மே ஆகியோருடன் சேர்ந்து ரிவர்ஸ் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று நடத்தினார். அந்த நிகழ்ச்சி ஷுபர்ட் தியேட்டரில் நடைப்பெற்றது, மேலும் டிக்கெட் $ 500 க்கு விற்கப்பட்டது.[24][25] நியூயார்க் நகரத்தில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உணவை வழங்கும் எல்டன் ஜான் எய்ட்ஸ் அறக்கட்டளை ரிவர்ஸ் ஆதரித்தார்.

2008 ஆம் ஆண்டில், கலிபோர்னியாவின் சான் டியாகோ நகரத்தால் எச்.ஐ.வி / எய்ட்ஸ் சார்பாக ரிவர்ஸ் செய்த மனிதநேயப் பணிகளுக்காக அவர் பாராட்டப்பட்டார், அங்கு எச்.ஐ.வி / எய்ட்ஸ் சமூகம் இவரை "ஜோன் ஆர்க்" என்று அழைத்தது.[26] கூடுதலாக, அவர் தற்கொலை தடுப்புக்கான அமெரிக்க அறக்கட்டளையின் கெளரவ இயக்குநராகப் பணியாற்றினார்.[27] ரோஸியின் தியேட்டர் கிட்ஸ், ஹபிடட் ஃபார் ஹ்யூமானிட்டி, மனித உரிமைகள் பிரச்சாரம் மற்றும் பாய் ஸ்கவுட்ஸ் ஆஃப் அமெரிக்கா ஆகியவை அவர் உதவிய அமைப்புகளில் ஆகும்.[25][28]

ரிவர்ஸின் இறப்பு

28ஆகஸ்ட் 2014 அன்று, ரிவர்ஸ் தனது தொண்டைப் பகுதியில் எற்பட்ட பிரச்சனையால் சிகிச்சைக்காக, மன்ஹாட்டனின் யார்க்வில்லில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தார்.[29][30] சிகிச்சையின் போது அவரது சுவாசம் நின்றுவிட்டதால் ஒரு மணி நேரம் கழித்து ரிவர்ஸ், நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.[31] பின்னர் செப்டம்பர் 4 அன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மூளைப் பாதிப்புக் காரணமாக அவர் இறந்துவிட்டதாக நியூயார்க் நகர மருத்துவ பரிசோதகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.[32]

ஏறக்குறைய இரண்டு மாத விசாரணைகளுக்குப் பிறகு, நவம்பர் 10ஆம் தேதி கூட்டாட்சி அதிகாரிகள், மருத்துவமனையில் முன்னும் பின்னும் பல தவறுகளைச் செய்ததாகக் கூறினர். அவற்றில், ரிவர்ஸின் மோசமான முக்கிய அறிகுறிகளுக்கு மருத்துவமனைப் பதிலளிக்கத் தவறியது. ரிவர்ஸின் இரத்த அழுத்தத்தில் கடுமையான வீழ்ச்சி, தவறான மயக்க மருந்தை வழங்குதல், அவரது அனுமதியின்றி ஒரு அறுவைச் சிகிச்சை முறை மற்றும் பிற மருத்துவ முறைகேடுகள் ஆகியவை அடங்கும்.[33][34]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜோன்_ரிவர்ஸ்&oldid=3792077" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை