தமிழ் ஒலிப்புமுறை

தமிழ் ஓர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. அதாவது தமிழில் எழுதுவதற்கும் உச்சரிப்பது அல்லது பலுக்குவதற்கும் நேரடியான, வரையறை செய்யப்பட்ட, இயல்பான தொடர்பு இருக்கின்றது. ஆகையால் தமிழை ஒலிப்பியல் மொழி என்றும் வகைப்படுத்துவர். தமிழ் ஒலிப்புமுறை கட்டுரை தமிழ் மொழியில் இருக்கும் தனித்துவ ஒலி இயல்புகளை, வரையறைகளை விளக்குவதற்கும், தமிழைத் தெளிவாக பலுக்குவதில் இருக்கும் சிக்கல்களை அடையாளப்படுத்துவதற்கும், தமிழைப் பேசுவதில் இருக்கும் பன்முகத் தன்மையைப் பட்டியலிடுவதற்கும், பிறமொழி ஆள் இடப் பெயர்களைப் பலுக்குவதில் இருக்கும் சிக்கல்களை விளக்குவதற்கும் ஓர் அறிமுகக் கட்டுரையாக இருக்கும்.

தமிழ் மொழி ஒலியன்கள்

ஒலியன் என்பது தமிழில் காணப்படும் சொற்களின் பொருள்களை வேறுபடுத்தி அறிவதற்கு உரிய அடிப்படையான ஒலி அலகு. எடுத்துக்காட்டாகத் தமிழில் காணப்படும் அடு, ஆடு, இடு, ஈடு முதலியன பொருள் கொள்ளுதலில் தம்முள் வேறுபட்டவை ஆகும்.

இவ்வேறுபாட்டை இச் சொற்களில் காணப்படும் அ(a), ஆ(a:), இ(i), ஈ(i:), ஆகிய ஒலியன்கள் காட்டுகின்றன. எனவே அ, ஆ இ, ஈ முதலியன ஆகியவை தமிழ் மொழியில் காணப்படும் தனித்தனி உயிர் ஒலியன்களாகக் கருதப்படுகின்றன.

இவ்வாறு தமிழ் மொழியில் காணப்படும் சொற்கள் அனைத்தையும் ஆ(ரா)யும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர் எழுத்துக்களும், க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம, ய,ர,ல,வ,ழ,ள,ற,ன ஆகிய 18 மெய் எழுத்துக்களும், ஃ என்னும் எழுத்தால் குறிக்கப்படும் ஆய்தமும் குற்றியலிகரம் குற்றியலுகரம் என்று 33 ஒலியன்கள் உள்ளன.

இந்திய மொழிகளில் அடிப்படையில் ஒலிப்புமுறை வெளிப்படும் விதம்
  • மெய்யெழுத்துக்களின் ஒலிப்புமுறை வெளிப்படும் விதம்:
  • அரை உயிர் மெய்கள் : ய, ர, ல, வ
  • தனித்துவ தமிழ் மெய்கள் : ழ, ள, ற, ன

ஒலி வகைகள்

ஒலிகள் அவை பலுக்கப்படும் போது பயன்படும் ஒலி உறுப்புக்களின் இடத்தையும் (place) அவை பலுக்கப்படும் முறையையும் (manner) அடிப்படையாக வைத்துப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படும்.

ஒலி உறுப்புக்கள்:

  • காற்றறைகள் (air chambers) - நெஞ்சு, தொண்டை, வாய், மூக்கு - நெஞ்சிலிருந்து எழும் காற்று தொண்டை வழி சென்று வாய், மூக்கு ஆகியன வழி வெளிப்படும்போதுதான் இவ்வொலிகள் உண்டாகின்றன.
  • ஒலி எழுப்பிகள் (articulators) - பல், இதழ், நாக்கு, அண்ணம், குரல்வளை - இவற்றுள் பல், அண்ணம் ஆகியன அசையா உறுப்புக்கள்; இதழ், நாக்கு, குரல்வளை மடல்கள் (vocal chords) அசையும் உறுப்புக்கள்.
  • வாய் ஒலிகளும் மூக்கு ஒலிகளும் (oral & nasal)

காற்று வாய்வழி வரும்பொழுது மூக்கறை அடைபட்டு வாய்வழி ஒலி வரும்போது உருவாகும் ஒலி அலைகள் வாய் ஒலிகள் (oral sound) - அ,இ,க,ச,ட போன்றவை.

வாய் அடைக்கப்பட்டு மூக்கு வழி வரும் ஒலி அலைகள் மூக்கொலிகள்(nasal) - ங,ஞ,ண,ந,ம,ன போன்றவை.

எழுத்து வகைகள்

தமிழ் எழுத்துகள் வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என பிரிக்கப்பட்டுள்ளன. உச்சரிக்கையில், வல்லின எழுத்துகள் அழுத்தம் மிகுந்தும், மெல்லின எழுத்துகள் அழுத்தம் குறைந்தும், இடையின எழுத்துகள் மிதமான அழுத்தத்துடனும் ஒலிப்பன.

வல்லின எழுத்துகள் சொல்லின் முதலாக தோன்றும் பொழுதும் சொல்லின் இடையில் இன ஒற்றுக்குப் பிறகு தோன்றும் பொழுதும் வல்லினதிற்குறிய இயல்பான அழுத்தத்துடனேயே உச்சரிக்கப் படுகின்றன. ஆனால் பெரும்பாலும் சொல்லின் இடையில் தனித்து தோன்றும் பொழுது அழுத்தம் சற்று குறைந்து ஒலிக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகள்:

  • இயல்பான அழுத்தம் - பாவை, இனிப்பு; செம்மை, மகிழ்ச்சி
  • குறைந்த அழுத்தம் - இயல்பு; பாசம்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தமிழ்_ஒலிப்புமுறை&oldid=3516919" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை