தமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள்

விசைப்பலகை ஒன்றின்மூலம் தமிழ் எழுத்தொன்றை உள்ளிடுவதற்கு/அச்சிடுவதற்கு அழுத்தவேண்டிய விசை/விசைகளின் ஒழுங்கும் வைப்புமுறையும் தமிழ் விசைப்பலகை தளக்கோலம் என்ப்படுகிறது.

தட்டச்சுப்பொறி பயன்பாட்டிலிருந்த காலத்தில் ஆரம்பித்து விசைப்பலகைகளை பயன்படுத்தி கணினி உள்ளீடுகளை செய்யும் இன்றைய காலம்வரை ஏராளமான விசைப்பலகை தளக்கோலங்கள் தமிழுக்கென உருவக்கப்பட்டு புழக்கத்திலிடப்பட்டிருக்கின்றன.

இவற்றை பருமட்டாக இரண்டு பிரிவுகளுள் அடக்கலாம்.

  • எழுத்தியல் விசைப்பலகை தளக்கோலங்கள்
  • ஒலியியல் விசைப்பலகை தளக்கோலங்கள்you தட்டச்சுப்பொ

எழுத்தியல் விசைப்பலகை தளக்கோலங்கள்

இம்முறையில்,. ஒரு விசையை அழுத்துவதன்மூலம் ஒரு எழுத்து அல்லது எழுத்தின் பகுதி (எ.கா. கொம்பு, புள்ளி) அச்சிட/ உள்ளிடப்படுகிறது.

கீழே இவ்வாறான சில தளக்கோலங்கள் விபரிக்கப்படுகின்றன.

தமிழ் தட்டச்சுப்பொறி வடிவம்

தட்டச்சுப்பொறியில் பயன்பட்ட தமிழ் விசைப்பலகை தளக்கோலம்

ஒலியியல் விசைப்பலகை தளக்கோலங்கள்

தமிழ் ஒலியியல் முறை விசைப்பலகை தளக்கோலம் ஒன்று

குறித்த ஓர் எழுத்தை அச்சிட/உள்ளிட அவ்வெழுத்துக்குரிய ஒலியினை ஆக்கும் ஒலியன்களை குறிக்கும் விசைகளை ஒன்றன்பின் ஒன்றாக அழுத்தவேண்டியபடி வடிவமைக்கப்பட்ட தளக்கோலங்கள் இவையாகும். (எ.கா. கு = க் + உ)

இத்தகைய தளக்கோலங்கள் கணிப்பொறியின் வருகையின் பின் மென்பொருள் ஒன்றின் உதவியுடன் இயங்கும்படி வடிவமைக்கப்படுகின்றன.இவ்வாறான தளக்கோலங்கள் சில..

தமிழ் 99 தளக்கோலம் (அல்லது தமிழ் ஒலியியல் முறை)

பார்க்க: தனிக்கட்டுரை தமிழ் 99

தமிழ்99 விசைப்பலகை தளக்கோலம்

இதுவே தமிழ் உள்ளீடுகளுக்கான நியம விசைப்பலகை தளக்கோலமாகும்.

ஆங்கில ஒலியியல் முறை

ஆங்கில ஒலியியல் முறை விசைப்பலகை வடிவம்

தமிழ் உள்ளீட்டு முறைகளில் புழக்கத்திலிருக்கும் பிரபலமான இன்னொரு நியமமாகும். புலம்பெயர் தமிழர்களை கவனத்திற்கொண்டு இதுவும் ஒரு நியமமாக அங்கீகரிக்கப்படதெனினும், இதுவே மிகப்பிரபலமானதாக மாறியிருக்கிறது.


தமிழ் எழுத்துக்களின் ஒலிக்கு சமமான ஆங்கில எழுத்துக்களை அல்லது எழுத்துக்களின் கோலத்தை தட்டுவதன் மூலம் தமிழ் எழுத்துக்களை உள்ளிடும் முறை, ஆங்கில ஒலியியல் முறை ஆகும்.

(எ.கா. அம்மா = a+m+m+a+a)

இம்முறையில் ஆங்கில எழுத்துக்களை பார்த்தவாறே நாம் உள்ளீடுகளை மேற்கொள்வதால் தனியாக தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகைகளை வாங்கவேண்டிய தேவை இல்லை. அத்தோடு, விசைப்பலகையில் எந்தெந்த விசை எந்தெந்த தமிழ் எழுத்துக்குரியது என நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எந்தவொரு ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்ட விசைபலகையையும் பயன்படுத்தி இலகுவாக தமிழை உள்ளிடலாம். இதுவே ஆங்கில ஒலியியல் விசைப்பலகையின் பிரபலத்தன்மைக்கு காரணம்.

தமிழ் VP தளக்கோலம்

இன்ஸ்க்ரிப்ட் தளக்கோலம்

மேலும் காண்க

எழுத்துரு

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை