தாமிர(II) கார்பனேட்டு

வேதிச்சேர்மம்

தாமிர(II) கார்பனேட்டு ( Copper(II) carbonate) என்பது CuCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குப்ரிக் கார்பனேட்டு என்ற பெயராலும் இதை அழைப்பர். சூழ்ந்துள்ள வெப்ப சூழலில் இது ஓர் அயனி உப்பாகக் கருதப்படுகிறது. தாமிர(II) நேர்மின் அயனிகளும் (Cu2+) கார்பனேட்டு எதிர்மின் அயனிகளும் (CO2−3) இச்சேர்மத்தில் அடங்கியுள்ளன. தயாரிப்பதற்கு கடினமானது என்பதால் தாமிர(II) கார்பனேட்டு அரிதாகவே காணப்படுகிறது. காற்றில் உள்ள ஈரத்தை எடுத்துக்கொண்டு தாமிர(II) கார்பனேட்டு உடனடியாக வினைபுரிகிறது. தாமிர கார்பனேட்டு, தாமிர(II) கார்பனேட்டு, குப்ரிக் கார்பனேட்டு என்று புத்தகங்களில் பயன்படுத்தப்படும் சொற்கள் யாவும் அடிப்படை தாமிர கார்பனேட்டையே அல்லது தாமிர(II) கார்பனேட்டு ஐதராக்சைடு என்பதையே குறிக்கின்றன. இயற்கையில் அசூரைட் (Cu2(OH)2CO3) அல்லது மாலகைட்டு என்ற கனிமமாக தாமிர(II) கார்பனேட்டு கிடைக்கிறது. இந்த காரணத்தினாலேயே இதை காரம் என்று குறிப்பிடாமல் நடுநிலையாக CuCO3 என்று குறிப்பிடுகிறார்கள்.

தாமிர(II) கார்பனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாமிர(II) கார்பனேட்டு
வேறு பெயர்கள்
குப்ரிக் கார்பனேட்டு, நடுநிலை தாமிர கார்பனேட்டு
இனங்காட்டிகள்
1184-64-1(?) N
ChemSpider13799
InChI
  • InChI=1S/CH2O3.Cu/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+2/p-2
    Key: GEZOTWYUIKXWOA-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்14452
SMILES
  • C(=O)([O-])[O-].[Cu+2]
பண்புகள்
CuCO3
வாய்ப்பாட்டு எடை123.5549
தோற்றம்சாம்பல் நிறத்தூள்[1]
சாதாரண நிபந்தனைகளில் தண்ணீருடன் வினைபுரியும்
கட்டமைப்பு
புறவெளித் தொகுதிPa-C2s (7) [1]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலைதீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்தாமிர(II) சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள்நிக்கல்(II) கார்பனேட்டு
துத்தநாக கார்பனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N
Infobox references

தயாரிப்பு

தாமிர(II) சல்பேட்டு கரைசல் மற்றும் சோடியம் கார்பனேட்டு கரைசல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் வெப்பநிலையில் கலக்கும்போது நிகழும் வினையில் CuCO3 உருவாகிறது. ஐதராக்சைடு எதிர்மின் அயனியின் பால் Cu2+ அயனிக்கு உள்ள அதிகபட்ச நாட்டம் காரணமாக அடிப்படை கார்பனேட்டும் கார்பன் டை ஆக்சைடும் உருவாவதற்குப் பதிலாக இது உருவாகிறது [2]. சுற்றுச்சூழல் அழுத்தத்தில் அடிப்படை கார்பனேட்டு வெப்பச் சிதைவடைந்து கார்பனேட்டுக்குப் பதிலாக தாமிர(II) ஆக்சைடு உருவாகிறது.

அடிப்படை தாமிர கார்பனேட்டை 180 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு கார்பன் டை ஆக்சைடு (450 வளிமண்டல அழுத்தம்) மற்றும் தண்ணீர்(50 வளிமண்டல அழுத்தம்) சூழலில் 36 மணி நேரத்திற்குச் சூடுபடுத்தி 1960 ஆம் ஆண்டில் சி.டபிள்யூ.எப்.டி. பிசுடோரியசு இதை தயாரித்தார். நன்கு படிகமாக்கப்பட்ட Cu2CO3(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட மாலகைட்டு கனிமம் பெருமளவில் உருவானது. இதனுடன் சிறிதளவு சாய்சதுர தாமிர(II) கார்பனேட்டும் உருவானது [3] இருப்பினும் இச்செயல்முறையால் மீண்டும் வெளிப்படையாக செய்து காட்ட இயலவில்லை [4].

1973 ஆம் ஆண்டில் முதன்முறையாக ஆர்ட்மட் எர்ராடு மற்றும் பிறர் உண்மையான தாமிர(II) கார்பனேட்டை நம்பகத்தன்மையோடு தயாரித்துக் காட்டினர். அடிப்படை தாமிரக் கார்பனேட்டை கார்பன் டை ஆக்சைடு வளிமண்டல அழுத்தத்தில் 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் 2 கிகா பாசுக்கல் அழுத்தத்தில் சூடுபடுத்தி சாம்பல்நிற தூளாக இச்சேர்மத்தை இவர்கள் தயாரித்தனர். வெள்ளி ஆக்சலேட்டு சிதைவு மூலம் இக்கார்பன் டை ஆக்சைடு தயாரிக்கப்பட்டது. ஒற்றைச் சரிவுப் படிகமாக இதன் படிக அமைப்பு உள்ளதாக உறுதிபடுத்தப்பட்டது [5].

பண்புகள்

CuCO3 சேர்மத்தின் நிலைப்புத்தன்மை கார்பன் டை ஆக்சைடின் அழுத்தத்தைப் பொருத்தே அமைகிறது. உலர் காற்றில் சில மாதங்களுக்கு CuCO3 நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. ஆனால் அழுத்தம் 0.11 வளிமண்டல அழுத்தத்திற்கு குறையும்போது தாமிர ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடாக மெல்ல இது சிதைவடைகிறது [6].

25 °செல்சியசு வெப்பநிலையில் தண்ணீர் அல்லது ஈரக்காற்றின் முன்னிலையில் 4.57 வளிமண்டல அழுத்தத்திற்கு மேல் CuCO3 நிலைத்திருக்கிறது. pH மதிப்பும் 4 மற்றும் 8 இவற்றுக்கிடையில் உள்ளதாக கருதப்படுகிறது [7]. . . இதைவிடக் குறைந்த அழுத்தத்தில் இது தண்ணீருடன் வினைபுரிந்து அடிப்படை கார்பனேட்டு எனப்படும் அசூரைட்டு கனிமம் Cu3(CO3)2(OH)2) உருவாகிறது [6]. உயர் காரக் கரைசல்களில் சிக்கலான Cu(CO3)22− எதிர்மின் அயனிகள் தோன்றுகின்றன [6].

25 பாகை செல்சியசு வெப்பநிலையில் உண்மையான தாமிர(II) கார்பனேட்டின் கரைதிறன் பெருக்கத்தை ரெய்டெரார் மற்றும் பிறர் pKso = 11.45 ± 0.10 எனக் கண்டறிந்தனர் [4][6][8].

மேற்கோள்கள்

<references>

[4]

[5]

[1]

[3]

[8]

[6]

[7]

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை