தாரீம் ஆறு

தாரீம் ஆறு (மாண்டரின் மொழியில் Tǎlǐmù Hé, 塔里木河; உய்குர் மொழி: تارىم دەرياسى, Тарим дәряси), சமஸ்கிருதத்தில் சீதா என அழைக்கப்படும் ஆறானது[1] சீனாவில் சிஞ்சியாங்கில் பாயும் ஆறு ஆகும். இந்த ஆறு தாரீம் வடிநிலத்தின் முதன்மையான ஆறு ஆகும். மத்திய ஆசியாவின் தக்கிலமாக்கான் பாலைவனம் பகுதியில் தியான் சான் மற்றும் குன்லுன் மலைத்தொடர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த ஆற்றின் வடிநிலப்பகுதி அமைந்துள்ளது.வரலாற்றுப்பூர்வமாக இந்த ஆறு லாப் நுர் என்ற இடத்தில் முடிவடைகிறது. ஆனால், தற்போது உலர்ந்து போவதற்கு முன் டாய்டேமா ஏரியை அடைவதைத் தாண்டி வேறு பகுதிகளுக்குப் பாய்வதில்லை. தாரீம் ஆறு கடலில் கலக்காத ஆறாகும்.

இந்த ஆறே சீனாவின் மிகப்பெரிய உள்நாட்டு ஆறு ஆகும். ஆண்டொன்றுக்கு இந்த ஆற்றில் 4 முதல் 6 பில்லியன் கன மீட்டர்கள் (3,200,000 முதல் 4,900,000 ஏக்கர்-அடி) அல்லது நொடிக்கு 158.5 கன மீட்டர்கள் (5,600 கன அடி/நொடி) என்ற அளவிலான நீரின் அளவு காணப்படுகிறது. இந்த வடிநிலமானது 10 மில்லியன் உய்குர் இன சிறுபான்மை இனக்குழு மக்களின் வாழ்வாதரமாகவும், வசிப்பிடமாகவும் உள்ளது.

சொற்பிறப்பியல்

தாரீம் வடிநிலத்தில் பாயும் ஆறுகளைக் காட்டும் வரைபடம்

தாரீம் என்ற வார்த்தையானது ஒரு ஏரியில் சென்று கலக்கக்கூடிய ஆற்றின் கரையைக் குறிக்கப் பயன்படும் வார்த்தையாகும். மற்றொரு விதத்தில் பாலைவனத்தின் மணற்துகள்களிலிருந்து வேறுபடுத்தி அறிய முடியாத துகள்களைக் கொண்ட நிலப்பரப்பு என்ற பொருளும் கொள்ளப்படலாம். இது தக்கிலமாக்கான் பாலைவனத்தின் மணற்பரப்பைக் கடந்து செல்லும் பல ஆறுகள் மற்றும் நீர்பரப்புகளுக்குரிய சிறப்புப் பண்பாகும். தாரீம் வடிநிலத்தில் பாயும் தாரீம் ஆறு உட்பட பல ஆறுகளில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க பண்பு செயல்மிகு நகர்வு ஆகும். அதாவது இந்த ஆறுகள் தமது படுகைகளையும், கரைகளையும் தமது போக்கின் போது மாற்றிக்கொண்டே இருக்கும் இயல்புடையவை.

புவியியல் மற்றும் காலநிலை

யார்கண்ட்-தாரீம் ஆறுகளின் அமைப்பின் மொத்த நீளமானது 2030 கிலோமீட்டர் அல்லது 1260 மைல்கள் ஆகும். தாரீம் ஆறானது தனது வழியை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதால் ஆற்றின் நீளமானது பல ஆண்டுகளாக மாற்றமடைந்து கொண்டே உள்ளது. இந்த ஆறானது ஆழமில்லாத வழித்தடத்தைக் கொண்டிருப்பதால் நீர்வழிப்போக்குவரத்திற்கு உகந்ததல்ல. [2]இதன் கனமான வண்டல் படிவின் பளுவால் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் பின்னப்பட்ட நீரோடையைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. இந்த ஆற்றின் வடிநிலப்பகுதியானது ஏறத்தாழ 557,000 சதுர கிலோமீட்டர்கள் (215,000 சதுர மைல்கள்) அளவினையுடையதாகும். இந்த ஆற்றின் போக்கு வழித்தடத்தின் குறிப்பிட்ட பகுதியானது, வடிவமைக்கப்படாததாகவும், தெளிவாக வரையறுக்கப்படாத ஆற்றுப்படுகையைக் கொண்டதாகவும் உள்ளது. இந்த ஆற்றின் கீழ்வடிநிலப்பகுதியில் நீரின் கொள்ளளவானது அதிகப்படியான ஆவியாதலின் காரணமாகவும், கிளை-பிரிதலின் காரணமாகவும் குறைந்து விடுகிறது.

அக்டோபர் முதல் ஏப்ரல் வரை குறைவான நீர் வரத்தைக் கொண்ட காலமாகவும், இளவேனிற் காலம் மற்றும் கோடைக்காலமானவை, மே முதல் செப்டம்பர் வரை அதிக நீர் வரத்தைக் கொண்ட காலமாகவும் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் தொலைதுார தியான் சான் மற்றும் குன்லுன் மலைத்தொடர்களில் உள்ள பனி உருகுவதே இத்தகைய அதிக நீர் வரத்திற்குக் காரணமாகும்.

தாரீம் வடிநிலப்பகுதியின் கீழ்பகுதியானது ஏரிப்படிவுகளும், வண்டல் படிவுகளும் கலந்த கலவையால் நிறைந்த தரிசு நிலமாக காணப்படுகிறது. இந்த நிலப்பகுதி பெரிய மலைத்தொடர்களால் சூழப்பட்ட இடமாகவும் அமைகிறது. இந்த வடிநிலப்பகுதி தான் ஐரோவாசியாவின் மிகவும் வறட்சியான பகுதியாக உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தாரீம்_ஆறு&oldid=2871317" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை