துளிமக் கருவி

துளிமக் கருவி (quantum machine) என்பது துளிம இயந்திரவியல் விதிகளின் அடிப்படையில் இயங்கும் ஒரு செயற்கைக் கருவி. மிகச்சிறிய துணுக்குகள் எவ்வாறு இயங்குகின்றன, செயல்படுகின்றன போன்றவற்றை அறிவது துளிம இயந்திரவியல் ஆகும். மூலக்கூறுகளிலும் அணுக்களிலும் மட்டுமே துளிம விளைவுகள் காணப்பட்டு வந்தன. ஆனால், கட்புலனாகும் அளவிற்கு உள்ள பெரிய பொருள்களும் துளிம இயந்திரவியலின் அடிப்படையில் இயங்கக்கூடும் என்ற கருத்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கூறப்பட்டது.[1][2] பெரிய பொருள்களில் துளிம இயல்பைக் காண்பது எளிதில் நடைபெறாத நிகழ்வாக இருந்தது. ஆனால், உலகின் முதல் துளிமக் கருவி ஆகத்து 4, 2009 அன்று ஏரன் ஓ’கானெல் என்பவரால் ஆண்டிரூ கிளீலாண்டு, ஜான் மார்ட்டினிசு (கலிபோர்னியா பல்கலைக்கழகம்) ஆகியோரின் வழிகாட்டுதலால் உருவாக்கப்பட்டது. இது சயன்சு என்ற பனுவலின் கணிப்புப்படி 2010-ஆம் ஆண்டின் முக்கியக் கண்டுபிடிப்பாகும்.[3]

ஓ’கானெல் உருவாக்கிய துளிமக் கருவி. இணைப்பு மின்தேக்கியின் (சிறு வெண் சதுரம்) இடது கீழ்ப்பக்கம் உள்ளது எந்திரவியல் ஒத்ததிர்வி. மின் தேக்கியின் வலது மேல் பக்கம் இணைக்கப்பட்டுள்ளது ஒரு துளிமத் துணுக்கு.

குறிப்புதவி

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=துளிமக்_கருவி&oldid=2034019" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை