நகர்ப்புறவியம்

நகர்ப்புறவியம் (Urbanism) என்பது, நகர்ப்புற மக்கள் கட்டிடச் சூழலுடன் கொண்டுள்ள சிறப்பியல்பான தொடர்பாடலைக் குறிக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதானால், இது, நகர்ப்புற வாழ்வோடு சிறப்பாகப் பிணைந்துள்ள மனநிலை, வழக்காறுகள், மரபுகள், மனப்போக்குகள், உணர்வுகள் போன்றவை ஆகும். நகரங்களின் புவியியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு வெளிப்பாடுகளையும், கட்டிடச் சூழல் மீது இவை அனைத்தினதும் ஒன்றிணைந்த தாக்கங்களையும் உட்படுத்தி நகரங்களை ஆய்வு செய்யும் துறையாகவும் இது உள்ளது.

கோட்பாடு

தற்காலத்தில், பல கட்டிடக்கலைஞர்களும், திட்டமிடலாளரும், சமூகவியலாளரும் மக்கள் செறிந்து வாழும் நகர்ப்புறங்களில் மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பது குறித்துப் பல கோணங்களில் இருந்து ஆய்வு செய்து வருகின்றனர். நகர்ப்புறவியம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, நகர்ப்புறவியத்தை நகரத்தின் பௌதீக அம்சத்துடன் அடையாளம் காண்பதை நிறுத்த வேண்டும் எனவும், மேலெழுந்தவாரியான எல்லைகளுக்கும் அப்பால் சென்று, தொழில்நுட்ப, தொலைத்தொடர்பு வளர்ச்சிகள் எவ்வாறு நகர வாழ்க்கை முறையை நகரங்களுக்கும் அப்பால் விரிவாக்கியுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் லூயிசு வர்த் (Louis Wirth) என்பவர் கூறுகிறார்.[1]

நகர்ப்புறவியத்தின் பல்வேறு வடிவங்கள்

பால் நாக்சு (Paul Knox) என்பவர் தான் எழுதிய நகரங்களும் வடிவமைப்பும் (Cities and Design) என்னும் நூலில் தற்கால நகர்ப்புறவியத்தின் பல போக்குகளில் ஒன்றாக "அன்றாட வாழ்க்கையை அழகுள்ளது ஆக்கல்" என்பதைக் குறித்துள்ளார்.[2] அலெக்சு கிறீகர் (Alex Krieger) என்பவர் நகரத் திட்டமிடல், வடிவமைப்பு என்பன தொடர்பான வல்லுனர்கள், எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக நகர்ப்புறவியக் கோட்பாடுகளை ஆய்வு செய்துள்ளார். இவர் தற்காலத்தில் நகர்ப்புறவியம் பத்து விதமான வழிகளில் பயன்படுத்தப்படுவதை அடையாளம் கண்டுள்ளார்.[3] அவையாவன:

  1. திட்டமிடலுக்கும் கட்டிடக்கலைக்கும் இடையிலான இணைப்பு
  2. பொதுக் கொள்கையில் வடிவ-அடிப்படையிலான வகைப்பாடு
  3. நகரக் கட்டிடக்கலை
  4. நகர வடிவமைப்பை மீளமைப்பு நகர்ப்புறவியமாகக் கொள்ளல்
  5. நகர வடிவமைப்பை இட உருவாக்கத்துக்கான கலையாகக் கொள்ளல்
  6. நகர வடிவமைப்பைத் சூட்டிகை வளர்ச்சியாகக் (smart growth) கொள்ளல்
  7. நகர உட்கட்டமைப்பு
  8. நகர வடிவமைப்பை நிலத்தோற்ற நகர்ப்புறவியமாகக் கொள்ளல்
  9. நகர வடிவமைப்பைத் தொலைநோக்கு நகர்ப்புறவியமாகக் கொள்ளல்
  10. நகர வடிவமைப்பைச் சமூகச் சார்பு வாதமாகக் கொள்ளல்

குறிப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நகர்ப்புறவியம்&oldid=3924242" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை