நச்சினார்க்கினியர்

தமிழ் உரையாசிரியர்களுள் முக்கியமான ஒருவர்

நச்சினார்க்கினியர் (Nacchinarkiniyar) இடைக்கால தமிழ் உரையாசிரியர்களுள் முக்கியமான ஒருவர். தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட உரைகளில் நச்சினார்க்கினியரின் உரை முக்கியமானதாகும். இவர் தொல்காப்பியத்தைத் தவிர்த்து கலித்தொகை, குறுந்தொகையில் ஒரு பகுதி, பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி என்பவற்றுக்கும் உரைகள் எழுதியுள்ளார். இவர் தொல்காப்பியம் முழுவதற்குமே உரை எழுதினார்.[1][2][3] குறுந்தொகையில் உள்ள முதல் 380 பாடல்களுக்குப் பேராசிரியர் உரை எழுதினார் என்றும், எஞ்சிய 20 பாடல்களுக்கு மட்டுமே நச்சினார்க்கினியார் உரை எழுதி நிறைவு செய்தார் என்றும் குறுந்தொகை பதிப்பாசிரியர் குழு கூறுகிறது.[4]

இவரைப்பற்றிய செய்திகள்

  • இவரது காலம் பொ.ஊ. 14-ஆம் நூற்றாண்டு.[5][6][7]
  • பாண்டிய நாட்டில் வாழ்ந்தவர்
  • 'உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர்' என்னும் பாராட்டினைப் பெற்றவர்.
  • வேத போதன் எனப் பாராட்டப்பட்ட அந்தணர்.[8]

மேற்கோள்

அடிக்குறிப்பு

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை