நியாயவாதம்

இணைமுரண்மை முறை (dialectical method) அல்லது முரண்தருக்க முறை அல்லது நியாயவாதம் என்பது இருவர் அல்லது அதற்கு மேற்பாட்டவர்களுக்கு இடையில் ஒரு கருப்பொருள் பற்றிய உண்மையைப் பகுத்தறிவால் அடைய நடக்கும் வாத எதிர்வாத உரையாடல் முறையாகும்.

மெய்யியலில், இணைமுரணியல் அல்லது இணைமுரண்மை முறை என்பது மெய்யியல் பொருள்களை ஆய்வு செய்து அறியும் மெய்யியல் அளவை (தருக்க) அல்லது ஏரண முறையாகும். இம்முரை பொருள்களை மற்ர பொருள்களுடனான உறவில் அதன் ஒட்டுமொத்த அமைப்பினூடாக இயங்குநிலையில் படிமலர்ச்சிச் சூழலில் ஆய்கிறது. இணைமுரண்மை முறை அல்லது இயங்கியல் முறை என்பது இயக்க மறுப்பியல் (metaphysical) முறை அல்லது மீவியற்பியல் முறைக்கு முரண்பட்டதாகும். பின்னது பொருள்களைத் தனித்தனியாகப் பிரிந்த நிலையில் மாறாத அல்லது இயங்காத சூழலில் ஆய்கிறது.

இணைமுரண்மை முறை அதன் வளர்ச்சிக் கட்டங்களைப் பொறுத்து மூன்று வடிவங்களைப் பெற்றுள்ளது. முதல் வடிவம் பண்டைய காலத்தி தோன்றிய து. இது உள்ளுணர்வாலும் தனி மந்தப் பட்டறிவாலும் மிகக் குறைந்த அறிவியல் சான்றுகளோடும் உருவாகியது. இக்கட்டநிலையில் இதை எளிய இணைமுரன் முறை எனலாம். இரண்டாம் வடிவம் செவ்வியல்கால செருமானியக் கருத்து முதலியத்தோடு தோன்றியது. இது எகலின் ஆய்வில் உச்சநிலையை எட்டியது. இது தான் முதலில் தோன்றிய முறையான அமைப்புடைய இணைமுரண் முறையாகும். இதைக் கருத்து முதலிய இணைமுரண் முறை எனலாம். மூன்றாம் வடிவமாகிய பொருள் முதலிய இணைமுரண் முறை அல்லது இணைமுரண் பொருள்முதலியம் கார்ல் மார்க்சு, பிரெடெரிக் ஏங்கல்சு, விளாதிமிர் இலெனின் ஆகியோரால் எகலிய இணைமுரண் முறையை மரபான பொருள்முதல் வாதத்துக்கு ஏற்ப தகவமைத்து உருவாக்கினர்.

இணைமுரண்மை எனும் சொல் விவாதம் என்பதோடு ஒத்த பொருளுடைய சொல் அல்ல. இக்கோட்பாட்டின்படி வாதிடுபவர் தம் கண்ணோட்டத்தில் கட்டயமாக உணர்ச்சிவய நிலையில் வாதிடுவதில்லை. இருந்தாலும், நடைமுறையில் வாதிடுவோர் அறிவார்ந்த மதிப்பீட்டுத் தீர்வின்போது அடிக்கடி உணர்ச்சிவயப் படுவதுண்டு. இவர்கள் எதிரியைத் தமது வாதமே சரியென ஏற்கச் செய்யும் முறைகளோடே வெல்வர், இதில் தம் வாதம் சரியெனவும் எதிரியின் வாதம் சரியற்ரது எனவும் நிறுவுவர். விவாதங்களில் சரியாக உடனே யார் வெற்றி பெற்றது யார் தோற்றது என்ற முடிவு உருவாக வேண்டிய கட்டாயம் ஏதும் கிடையாது; என்றாலும், யார் வெற்றி பெற்றாரென, சிலவேளைகளில் ஓர் நடுவர் அல்லது நடுமைக் குழு தெளிவாகத் தீர்ப்பு வழங்குவதுண்டு. மேலும் இணைமுரண்மை எனும் சொல், பார்வையாளர்களின் கருத்தை ஏற்கச் செய்யும்/தகவல் தரும்/ஊக்க உந்துதல் தரும் உரையாடல்கலை முறையான அணி (இலக்கணம்) என்ற சொற்பொருளோடும் ஒத்தமைவதில்லை.[1] வாதமிடுவோர், பார்வையாளர்கலை ஏற்கச் செய்யும் உள்நோக்கத்தோடு அறிவுசார் வேண்டுகோளையோ, உணர்ச்சிவய வேண்டுகோளையோ, அறம்சார் வேண்டுகோளையோ அணிநயத்தோடு வைப்பதுண்டு.[2]

சாக்ரட்டீசு உண்மைக்கு உயர்மதிப்பைத் தருவதை முன்னிறுத்தினார்; உண்மையை ஏரணவியலாகவும் (அளவையியலாகவும்) பகுத்தறிவு வாயிலாகவும் கண்டுக்பிடிக்கலாம் என முன்மொழிந்தார்; சாக்ரட்டீசு ஏரணவியலான பகுத்தறிவால் (உணர்ச்சியால் அல்ல) உண்மை கண்டுபிடித்தலையும் செயல்படுவதற்கான துணிபையும் கருத்தை ஏற்க அல்லது ஒப்புகொள்ள செய்தலையும் வழிநடத்தலாம் எனவும்; இவற்றுக்கு இதுவே சரியான வழிமுறையாகும் எனவும் அறிவித்தார். இவருக்கு அற விழுமியத்தைவிட அல்லது ஒழுக்கநெறியைவிட உண்மையைத் தேடலே சிறந்ததும் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதும் ஆகும் என வற்புறுத்தினார். எனவே, இவர் ஏரணமும் நிறுவலும் தேவைப்படாத அணிநய வாதிகளின் உணர்ச்சிகரமான பேச்சுக்கலையைக் கற்பித்தலை எதிர்த்தார்.[3] இந்தியாவிலும் மேலை உலகிலும்/ஐரோப்பாவிலும் பல்வேறு இணைமுரண்மைப் பகுத்தறிவுப் போக்குகள் வரலாற்றியலாகத் தோன்றின. இவ்வடிவங்கலில் சாக்ரட்டீசிய முறையும் இந்து, புத்த, இடைக்கால. எகலிய, மார்க்சிய, புதுமரபிய முறைகளும் அடங்கும்.

நெறிமுறைகள்

இணைமுரண்மை முறை அறிவு தேட்டத்தின் நோக்கம் பகுத்தறிவு முறையில் கருத்துமுரண்களைத் தீர்த்து, அறுதியாக உண்மையை தேடி அடைவதாகும்.[4][5] சாக்ரட்டீசு முறையை பின்பற்றும் ஒருவழி தரப்பட்ட கருதுகோள் (பிற ஏற்புகளுடன்) முரன்பாட்டுக்கு இட்டுச் செல்வதைக் காட்டுதலாகும்; இதன்வழி உண்மைக்கன உறுப்படியாக கருதுகோளை பின்வாங்கச் செய்வதாகும். ஒப்புதலின்மையைத் தீர்க்கும் மற்றொரு இணைமுரண்மை முறை எதிர்கோள் (antithesis) ஒன்றின்வழியாக முன்மொழிந்த ஆய்கோளை (thesis) மறுத்து இதன்வழி தொகுகோள் (synthesis) எனும் மூன்றாம் ஆய்கோளை அடைதலாகும்.

எகலிய (பிட்சிய) இணைமுரண்மை இயக்கம் என்பது நான்கு மெய்யறிவு அடிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.]][6]

  1. ஒவ்வொரு பொருளும் வரம்புள்ளது; பெயர்வது (மாறுவதும் இடம்பெயர்வதும்); கால ஊடகத்தில் நிலவுவது.
  1. ஒவ்வொரு பொருளும் முரண்பாடுகளைக் கொண்டது (எதிர்க்கும் விசைகள் கொண்டது).
  1. படிப்படியான மாற்றங்கள் உய்யநிலைமைகளையும் திருப்புமுனைகளையும் உருவாக்கி ஒருவிசை எதிர்விசையைப் புறந்தள்ளுகிறது(அளவியலான மாற்றம் பண்பியலான மாற்றத்துக்கு வழிவகுக்கிறது அல்லது இட்டுச் செல்கிறது).
  1. மாற்றம் சுருளி வடிவில் அல்லது சுழலேணி வடிவினதாகும் ( வட்ட வடிவில் ஒரே இருப்புக்கு வராமல் அலைந்தெழல் இயல்பினது) (எதிர் மறுப்பின் எதிர்மறுப்பு விதி).[7]

எபெசசு நகர எராக்கிளிட்டசுவின் மெய்யியலில் இணைமுரண்மை கருத்துப்படிமத்தில் எதிரிணைகளின் ஒற்றுமை விளக்கப்பட்டுள்ளது; இவரே உட்போராட்டத்தாலும் எதிர்ப்பாலும் ஒவ்வொரு பொருளும் நிலையான மாற்றத்தில் உள்ளது என முன்மொழிந்தார்.[8][9][10] எனவே, இணைமுரண்மை முறையின் வரலாறு மெய்யியலின் வரலாற்றைச் சார்ந்ததாகும்.[11]

மேற்கத்திய (மேலை)) இணைமுரண்மை வடிவங்கள்

செவ்வியல்கால மெய்யியல்

செவ்வியல்கால கிரேக்க மெய்யியலில், இணைமுரண்மை (διαλεκτική) என்பது முன்மொழிவையும் (ஆய்கோளையும்) எதிர்முன்மொழிவுகளையும் முன்வைக்கும் வாதங்களையும் எதிர்வாதங்களையும் அடிப்படையாகக் கொண்ட பகுத்தறிவு முறை வடிவமாகு இவ்வகை இணைமுரண்மை உரையாடலின் விளைவு ஒரு முன்மொழிவையோ தொகுகோளையோ அல்லது எதிர்க்கும் உறுதிபாடுகளின் சேர்க்கயையோ மறுப்பதாகவோ அல்லது உரையாடலை பண்பியலாக மேம்படுத்துவதாகவோ அமையும்.[12][13]

மேலும், "இணைமுரண்மை" தன் தகுதியைக் கிரேக்கச் செவ்வியல்காலத்தில் (கி.மு ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளில்) பிளாட்டோ, சாக்ரட்டீசு ஆகியோரின் மெய்யியல்களில் வகிக்கும் முதன்மையான பாத்திரத்தாலேயே பெற்றுள்ளது.. இணைமுரண்மையைக் கண்டுபிடித்தவர் எலியாவின் சீனோ எனக் கூறுகிறார். பிளாட்டோவின் உரையாடல்கள் சாக்ரட்டீசிய இணைமுரண்மை முறைக்குச் சான்றுகளாக அமைகின்றன.[14]

என்றாலும், பண்டைய கிரேக்கர்கள் இணைமுரண் எனும் சொல்லை பொய்த்தோற்றம் அல்லது போன்மைநிலை அளவையை(ஏரணத்தை)ச் சுட்டவே பயன்படுத்தியுள்ளதாக இம்மானுவேல் காண்ட் கூறுகிறார். பண்டைய மெய்யியலாளருக்கு "இது பொய்த்தோற்ற அல்லது மாயநிலை ஏரணத்தை மட்டுமே சுட்டியுள்ளது. இது தனியரின் பேதமையைச் சுட்டும் நயக்கலை; உண்மையில் இது தனியரின் வருநிகழ்வு தந்திரச் செயல்; உண்மையின் புறநிலைத் தோற்றம்; ஏரண முறைப்பட்ட துல்லியமான முறையைக் கொண்ட பாவனை: இச்சொல் ஒவ்வொரு வெற்று உறுதிப்பாட்டுக்குமான உறையாக பயன்படுத்தப்படுகிறது."[15]

சாக்ரட்டீசு உரையாடல்

பிளாட்டோவின் உரையாடல்களிலும் சாக்ரட்டீசின் உரையாடல்களிலும், சாகரட்டீசு ஒருவரின் நம்பிக்கையையோ, நாம் அனைவரும் வாதமுறை அறிவாய்வில் பயன்படுத்தும் முற்கோள்களையோ ஏன், முதல் நெறிமுறைகளையும் கூட ஆய்வுக்கு உட்படுத்த முயல்கிறார். சாக்ரட்டீசு தன் எதிர்வாதியின் கோரல்களையும் முற்கோள்களையும் தன் குறுக்கு உசாவலில் வாதிட்டு அவற்றில் நிலவும் முரண்பாட்டையோ பொருந்தாமையையோ வெளிக்கொணர்கிறார். பிளாட்டோவின் கூற்றுப்படி, பகுத்தறிவால் பிழையைக் கண்டுபிடித்தலே எதிர்கோளைச் சரியென நிறுவ போதுமானது.[16] என்றாலும், இதே அளவுக்கு முதன்மையான சாக்ரட்டீசின் குறிக்கோள், எதிர்வாதிகளின் அவர்கள் உணராத பிழைகளைச் சுட்டிக் காட்டி அவர்களை அவற்றில் இருந்து விடுவிப்பதேயாகும்.


பிளாட்டோவின் குடியரசு நூலில் சுட்டிக் காட்டியுள்ளபடி, இணைமுரண்மை உள்ளுணர்வு முறையாகவும் கருதப்படுகிறது.[17] சைமன் பிளாக்பர்ன், இந்தப் பொருளில் இணைமுரண்மை என்பதை மறுமலர்ச்சியின் மொத்த நிகழ்வாகப் புரிந்துகொள்ள பயன்படுத்தப்படுகிறது எனவும் மேலும் இதன்வழியாக, மெய்யியலாளர் மீநிலைச் சிறப்பான அறிவை அடைய பயிற்றுவிக்கப்படுகிறார் எனவும் கூறுகிறார்.[18]

அரிசுடாட்டில்

அரிசுடாட்டில் அணிநய வாதாடு முறையும் இணைமுரண்மை முறைக்கு மிகவும் நெருக்கமானதே என வற்புறுத்துகிறார். இந்த இரு புலங்களுக்கும் இடையில் நிலவும் ஈர்ப்பை விளக்க பல வாய்பாடுகளைச் சுட்டிக் காட்டுகிறார்: முதலில், இணைமுரண்மை அணிநய வாதிடலின் எதிர்பகுதியாகும் என்கிறார் (Rhet. I.1, 1354a1); (ii) இது இணைமுரண்மையின் வளர்ச்சியும் நடத்தையின் ஆய்வுமாகும் என்கிறார் (Rhet. I.2, 1356a25f.); அறுதியாக,அவர் அணிநய வாதிடல் இணைமுரண்மையின் பகுதியாவதோடு அதை ஒத்தும் தோன்றுகிறது என்கிறார்(Rhet. I.2, 1356a30f.). அணிநய வாதிடல் இணைமுரண்மையின் எதிர் பகுதியெனக் கூறும்போது பிளாட்டோவின் ஜார்ஜியாசு (Gorgias) (464bff.) பகுதியைச் சுட்டிக்கட்டுகிறார். இதில் அணிநய வாதிடல் உயிரில் (ஆன்மாவில்) நிகழும் சமைய(த)லுக்கு எதிர்பகுதி என முரண்புதிராக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தப் பத்தியில் பிளாட்டோ ஒப்புமை என்ற பொருளில் எதிர்பகுதி எனும் சொல்லை ஆள்கிறார் என்பதால் அரிசுடாட்டிலும் ஒருவகை ஒப்புமையாகவே இவை இரண்டையும் இணைத்திருக்கலாம்: கல்வியாளரின் இணைமுரண்மையும் பொதுமக்களின் அணிநய வாதிடலும் தன்னைத் தற்காத்துகொள்ளவும் எதிரியினைத் தாக்கவும் வாதிடவும் துணைபுரிகிறது. இணைமுரண்மையுடனான ஒப்புமை அணிநய வாதிடலின் தகுதியை நிலைநிறுத்தும் எண்ணத்தோடு இயைவதாகப் புலனாகிறது. பிளாட்டோ ஜார்ஜியாசு உரையாடலில் அணிநய வாதிடல் ஒருகலையாக அதற்கென தனிக் கருப்பொருள் அமையாததால் இருக்க வாய்ப்பில்லை என வாதிடுகிறார்; ஆனால், மருத்துவம், செருப்புசெய்தல் ஆகிய கலைகள் (தொழில்கள்) அவற்றின் கருப்பொருள்களாகிய நலம், செருப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்படுகின்றன என்கிறார்.[19]

இடைக்கால மெய்யியல்

இடைக்காலப் பல்கலைக்கழகங்களில் இணைமுரண்மை ( ஏரணம் அல்லது அளவைமுறை எனவும் அழைக்கப்பட்டது) மூன்று தாராளக் கலைகளாகக் கருதப்பட்டவற்றில் ஒன்றாகப் பயிற்றுவிக்கப்பட்டது. இவற்றில் அணிநயமும் இலக்கணமும் கூட அடங்கும்.[20][21][22][23]

இடைக்காலத்தில் அரிசுடாட்டிலைச் சார்ந்து இணைமுரண்மையில் ஈடுபட்ட முதல் மெய்யியலாளர் போயத்தியசு ஆவார்.[24] இவருக்குப் பிறகு, அபேலார்டு போன்ற பல புலமைவாத மெய்யியலாளர்கள் தம் நூல்களில் இணைமுரண்மையைப் பயன்படுத்தினர்,[25] அவர்களில் William of Sherwood,[26] Garlandus Compotista,[27] Walter Burley, Roger Swyneshed, William of Ockham,[28] Thomas Aquinas.[29]ஆகியோர் அடங்குவர்

இணைமுரன்மை முறை பின்வருமாறு வடிவமைக்கப்பட்டது:

  1. தீர்மானிக்க வேண்டிய வினா
  2. அந்த வினாவுக்கான முதன்மையான மறுப்புகள்
  3. வினா ஏற்பு விவாதம், மரபாக ஒரேயொரு விவாதம் ("மாறாக...")
  4. சான்று கருதி வினாவைத் தீர்மனித்தல். (" ….என விடை தருகிறேன்.")
  5. ஒவ்வொரு மறுப்புக்குமான விடைகள்

புத்தியல் மெய்யியல்

எகலிய இணைமுரண் முறை

மார்க்சிய இணைமுரண் முறை

இந்திய வடிவங்கள்

இந்தியத் துணைக்கண்ட விவாதம்: புற, அக அறமை இணைமுரண் முறை

பிரமாணம்/வேதமுறை/இந்து இணைமுரண் முறை

சமண (சைன) இணைமுரண் முறை

புத்த இணைமுரண் முறை

இணைமுரண் இறையியல்

இணைமுரண் முறையும் இருமைவாதமும்

உய்யநிலைக் கருத்துரைகள்

உருவவியல்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நியாயவாதம்&oldid=3703621" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை