சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
(நெல்லூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 26 மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் நெல்லூரில் உள்ளது. 13,076 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில் [1] 2,668,564 மக்கள் வாழ்கிறார்கள் [2] . 2011 கணக்கெடுப்புப்படி இதில் 22.45% நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். (60.0%) பேர் தெலுங்கு பேசுகின்றனர், (38.0%) பேர் தமிழ் பேசுகின்றனர் [3]. தமிழ் பேசுபவர்கள் அதிகளவில் பெரும்பான்மையாக மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ளனர்.

நெல்லூர் மாவட்டம்
இருப்பிடம்: நெல்லூர் மாவட்டம் , ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
இருப்பிடம்: நெல்லூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பெயர்ச்சூட்டுபொட்டி சிறீராமுலு
தலைநகரம்நெல்லூர்
அரசு
 • மாவட்ட ஆட்சியர்ஸ்ரீ. கேவிஎன் சக்ரதர் பாபு,இ.ஆ.ப
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
இணையதளம்spsnellore.ap.gov.in

நெல், ஊர் ஆகிய இரு சொற்கள் இணைந்து நெல்லூர் என்று ஆனது (தெலுங்கிலும் ஊர் என்பது ஊரை குறிக்கும்). சூலூர்பேட்டை, நாயுடுபேட்டை, கூடூர், வெங்கடகிரி, காவலி, கோவூர் என்பன மற்ற முதன்மையான ஊர்களாகும். இதன் கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடாவும் வடக்கு எல்லையாக பிரகாசம் மாவட்டமும் தெற்கு எல்லையாக திருப்பதி மாவட்டத்தையும் தென்மேற்கு எல்லையாக அன்னமய்யா மாவட்டத்தையும் மேற்கு எல்லையாக கடப்பா மாவட்டத்தையும் கொண்டுள்ளது.கடப்பா மாவட்டம் வெளிகோடா மலையினால் பிரிக்கப்பட்டுள்ளது.

நெல்லூர் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட இம்மாவட்டம் 2008ல் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோரி உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர் பொட்டி சிறீராமுலுவின் நினைவாக 'சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம் என்று மாற்றி ஆந்திரப்பிரதேச அரசு அரசாணை பிறப்பித்தது.[4]

இம்மாவட்டத்தின் நிலப்பரப்பில் தோராயமாக பாதியளவு உழவுக்கு பயன்படுகிறது. மற்ற பகுதி தரிசாக உள்ளது.[5]. மாவட்டத்தின் நடுவில் வட பெண்ணையாறு பாய்கிறது. மாவட்டத்தின் முதன்மை ஆறுகள் பெண்ணையாறு, சுவர்ணமுகி.

இம்மாவட்டத்தில் ஸ்ரீஹரிக்கோட்டா அமைந்துள்ளது.

மாவட்டம் பிரிப்பு

4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிய திருப்பதி மாவட்டம் நிறுவப்பட்டது.[6][7]

ஆட்சிப் பிரிவுகள்

இந்த மாவட்டத்தை ஐந்து வருவாய்க் கோட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை நெல்லூர், காவலி,கூடூர், நாயுடுபேட்டை, ஆத்மகூர்

இந்த மாவட்டம் முழுவதும் நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

இந்த மாவட்டம் ஆந்திர சட்டமன்றத்திற்கான பத்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. அவை காவலி, ஆத்மகூர், கோவூர், நெல்லூர் நகரம், நெல்லூர் ஊரகம், சர்வபள்ளி, கூடூர், சூள்ளூர்பேட்டை, வெங்கடகிரி, உதயகிரி ஆகியன.

இந்த மாவட்டத்தை 46 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[8]

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்