படகு விளையாட்டுகள்

படகுப்போட்டி இக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்று. கட்டுமரம் நீரில் மிதக்க உருவாக்கப்பட்ட ஒருவகைப் படகு. கட்டுமரம் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டது. துடுப்பால் நீரைப் பின்னுக்குத் தள்ளிக் கட்டுமரத்தை முன்னேறச் செய்வார்கள். இதனைப் 'படகு வலித்தல்' என்பர். இது இக்காலத்தில் 'துடுப்புப் படகோட்டம்' (Rowing) என்னும் விளையாட்டாக நடைபெறுகிறது.

ஆரன்முளா வள்ளங்களியில் சுண்டன் வள்ளங்கள்
தனியாள் இரட்டைத் துடுப்பு வலிக்கும் விளையாட்டு

சங்ககால மக்களின் மிதவை விளையாட்டுகளை சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. ஒலிம்பிக், உலக விளையாட்டுப் போட்டிகளும், இக்காலத்தில் நடைபெறுகின்றன.

முன்படகு, பின்படகு

படகு முன்னோக்கிச் செல்லுமாறு துடுப்பால் செலுத்துதல் முன்படகு எனப்படும். படகு பின்னோக்கிச் செல்லுமாறு செலுத்துதல் பின்படகு எனப்படும். சங்ககாலத்தில் ஆற்றுநீரில் படகில் செல்லும்போது படகை முன்புறமாகவும், பின்புறமாகவும் செலுத்தி விளையாடியதை ஒருபாடல் குறிப்பிடுகிறது. [1]

ஒற்றைத் துடுப்புப் படகு

அதிக ஆழமில்லாத நீரில் நீண்ட கழி ஒன்றைத் தரையில் ஊன்றிப் படகை உந்துவர். ஆற்றைக் கடக்க உதவும் பரிசல்களைச் செலுத்தவும் இம்முறையைப் பயன்படுத்துவர். படகில் அமர்ந்துகொண்டு துடுப்பு ஒன்றால் நீரைப் பின்தள்ளிப் படகு முன்னோக்கிச் செல்லுமாறு செலுத்துதலும் உண்டு. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் கட்டுமரக்காரர்கள் இவ்வாறு ஒற்றைத் துடுப்பால் உந்துவர். இவை ஒற்றைத் துடுப்புப் படகுகள்.

பேரணிப் படகு

கேரளாவில் வள்ளங்களி போட்டிகள் இன்றும் முக்கியமான போட்டி நிகழ்ச்சியாகும்.

வளிப்படகு

வளிப்படகு எனது காற்றால் இயக்கப்படும் படகு. இக்கால ஒலிம்பிக், உலகப் படகுப் போட்டிகளில் இந்த வகையான வளிப்படகுகளே பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலக் கிரேக்க மாலுமிகளும் வளிப்படகுகளையே பயன்படுத்தினர். சங்ககாலக் கரிகாலனின் முன்னோர் இந்த வகையான வளிப்படகுகளைப் பயன்படுத்தித் தம் வலிமையை நிலைநாட்டியிருக்கிறார்கள். [2] காற்று எந்தத் திசையிலிலிருந்து எந்தத் திசையை நோக்கி வீசினாலும் இந்தப் படகோட்டிகள் பாய்மரப் பாய்களைத் திருப்பிப் பிடிக்கும் திறப் பாங்கால் படகுகளைத் தாம் விரும்பும் திசையில் செலுத்திப் பயன் பெறுவர். காற்று அடிக்கும் திசை 'வளிதொழில்'. இந்தக் காற்று வலிமையைத் தன்விருப்பத்துக்குக் கையாளுதல் 'வளிதொழில் ஆளல்'.

ஒற்றைத் துடுப்பு படகு

அடிக்குறிப்பு

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=படகு_விளையாட்டுகள்&oldid=3758587" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை