பரத்வாஜ்

பரத்வாஜ் தமிழ் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். இவர் தனது 17 ஆவது வயதிலேயே தூர்தர்ஷன் மற்றும் அனைத்திந்திய வானொலி நிலையத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.

பரத்வாஜ்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு7 மார்ச்சு 1960 (1960-03-07) (அகவை 64)[1]
இசை வடிவங்கள்திரையிசை
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்
இசைத்துறையில்1998–தற்போதுவரை

வாழ்க்கை வரலாறு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராவணசமுத்திரத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் தில்லியில் பயின்றார்.[2] இவரது தந்தை ஒரு அரசு அதிகாரி ஆவார்.[2]இந்துஸ்தானி இசை, கருநாடக இசை, மற்றும் மேற்கத்திய இசைகளை இவர் முறைப்படி தில்லியில் கற்றவர்.[2] பரத்வாஜ் இசையமைக்க வரும் முன்பாகவே அவர் சி.ஏ எனப்படும் பட்டயக் கணக்கறிஞர் தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

திருக்குறளுக்கு இசை

திருவள்ளுவரின் உலக பொதுமறையான 1330 திருக்குறளுக்கும் இசைவடிவம் கொடுத்து பாடல்களாக உருவாக்கியுள்ளார்.[3]

பாடல்கள்

சரணுடன் இணைந்து இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல்கள்

மற்ற இயக்குனர்களுடன் இணைந்து இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல்கள்

இசையமைத்த திரைப்படங்கள்

காதல் மன்னன் திரைப்படத்தில் அறிமுகமான பரத்வாஜ் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த அட்டகாசம் இவரது 25-வது திரைப்படமாகவும் இயக்குனர் சரணின் இயக்கத்தில் வெளிவந்த அசல் திரைப்படம் இவரது 50-வது திரைப்படமாகவும் அமைந்தது.[4]

ஆண்டுதமிழ்மற்ற மொழிகள்குறிப்புகள்
1998காதல் மன்னன்முதல் திரைப்படம்
பூவேலி
1999அமர்க்களம்
ரோஜாவனம்
2000பார்த்தேன் ரசித்தேன்
2001பாண்டவர் பூமி
பெண்கள்
2002ரோஜாக்கூட்டம்
ஜெமினிசிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
தமிழ்
தயா
ராஜ்ஜியம்
ஜங்ஷன்
ஐ லவ் யூ டா
2003ஜே ஜே
காதல் டாட் காம்
காலாட்படை
அன்பே அன்பே
2004வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
ட்ரீம்ஸ்
ஜனனம்
ஒரு முறை சொல்லிவிடு
ஆட்டோகிராப்சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
அட்டகாசம்
2005ஐயா
பிரியசகி
குண்டக்க மண்டக்க
பிப்ரவரி 14
2006இதயத் திருடன்
திருப்பதி
ஜாம்பவான்
உள்ள கடத்தல்
மை ஆட்டோகிராப் (கன்னடம்)
திருட்டுப் பயலே
வட்டாரம்
2007பள்ளிக்கூடம்
ஒன்பது ரூபாய் நோட்டு
விகாரி (தெலுங்கு)
நம்பர்.73, சாந்தி நிவசா (கன்னடம்)
முனி
2008வல்லமை தாராயோ
2009நாளை நமதே
சொல்ல சொல்ல இனிக்கும்
காதலுக்கு மரணமில்லைதிரைப்படம் வெளியாகவில்லை
அசல்[4]
2010களவாடிய பொழுதுகள்
நந்தி
2014அதிதி
அரண்மனை
அழகிய பாண்டிபுரம்
2016ஆயிரத்தில் இருவர்படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பரத்வாஜ்&oldid=3847656" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை